பக்கம்:பாரதீயம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியக் கொள்கைகள் 25

பண்டங்களின் உற்பத்தி பெருக வேண்டுமானால் எல்லா மட்டங் களிலும் தொழிற்கல்வி பெருகவேண்டும். சிறியனவும் பெரியனவு மான தொழிற்சாலைகள் பெருகவேண்டும். பண்டங்களை வேற்று நாடுகட்கு ஏற்றுமதி செய்து அங்கியச் செலாவணியைப் பெருக்க வேண்டும். இவ்வாறெல்லாம் நாட்டின் தொழில்வளம்பற்றிக் கனவு காண்கின்றார் கவிஞர்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய்வோம்.’ என்று வானொலிப் பெட்டிகள் உண்டாக்குவதையும் வானொலி அஞ்சல் செய்தலையும் முத்தாய்ப்பாகக் காட்டுவதைக் கண்டு மகிழலாம்.”*

மக்கள் முன்னேற்றம் : வாழ்க்கையின் திறனாய்வுதான் இலக்கியம்’, ‘வாழ்க்கையின் பிரதிபலிப்புதான் இலக்கியம்’ என்றெல்லாம் மேனாட்டு இலக்கியத் திறனாய்வாளர்கள் கூறுவர். ‘கலை கலைக்காகவே”, “கவிதை கவிதைக்காகவே” என்று கூடச் சிலர் சொல்வர். அவர்களுள் சிலர் கவிதை வாழ்க்கைக்காகவே என்றும் மொழிவர். பாரதியாரின் கவிதைகளை நோக்கினால் இறுதியில் குறிப்பிட்ட கொள்கைதான் அவருக்கு உடன்பாடென்பதும், ஏனையவை உடன்பாடன்று என்பதும் தெளிவாகப் புலனாகும். மக்கள் முன்னேற்றத்தை நாடுபவர் என்பதை,

பேசாப் பொருளைப் பேசநான் துணிந்தேன்; கேட்கா வரத்தை கேட்கநான் துணிந்தேன்; மண்மீ துள்ள மக்கள் பறவைகள் விலங்குகள் பூச்சிகள் புற்பூண்டு மரங்கள் யாவுமென் வினையால் இடும்பை தீர்ந்தே இன்புற் றன்புடன் இணங்கிவாழ்க் திடவே செய்தல் வேண்டும், தேவ தேவா ! ஞானா காசத்து நடுவே நின்றுகான் ‘பூமண் டலத்தில் அன்பும் பொறையும் விளங்குக: துன்பமும் மிடிமையும் கோவும் சாவும் நீங்கிச் சார்ந்தபல் லுயிரெலாம் இன்புற்று வாழ்க’ என்பேன்; இதனைநீ திருச்செவி கொண்டு திருவுளம் இரங்கி அங்ஙனே ஆகுக’ என்பாய், ஐயனே ! இந்நாள் இப்பொழு தெனக்கிவ் வரத்தினை அருள்வாய்: 21. தே. கீ. பாரததேசம்-7. 22. இதன் விரிவை கட்டுரை 6இல் காண்க. 23. தோ. பா : விநா. நா. மா-32.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/41&oldid=681269" இலிருந்து மீள்விக்கப்பட்டது