பக்கம்:பாரதீயம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியக் கொள்கைகள் 29

சொல்லுக்குச் சொல்லழகும் ஏறுமேயடா-கவி துள்ளும் மறியைப்போலே துள்ளுமேயடா கல்லும் கனிந்துகனி யாகுமேயடா-பசுங்

கன்றும்பால் உண்டிடாது கேட்குமேயடா: உள்ளந் தெளியுமொரு பாட்டிலேயடா-மிக்க

ஊக்கம் பிறக்குமொரு பாட்டிலேயடா கள்ளின் வெறிகொளுமோர் பட்டிலேயடா-ஊற்றாய்க்

கண்ணிர் சொரிந்திடுமோர் பாட்டிலேயடா’ என்று கூறித் திறனாய்வு செய்தார் என்று அறிகின்றோம்.

கடை : பாருடையாயினும் உரைநடையாயினும் பாரதியார் இனிமை, எளிமை, தெளிவு என்பவற்றை விரும்புபவர். இவை தம் எழுத்தில் அமையவேண்டும் என்றும் எண்ணுபவர்.

தெளிவுறவே அறிந்திடுதல்; தெளிவுதர

மொழிந்திடுதல்; சிந்திப் பார்க்கே களிவளர உள்ளத்தில் ஆனந்தக்

கனவுபல காட்டல்: கண்ணிர்த் துளிவரஉள் ளுருக்குதல்இங் கிவையெல்லாம்

நீயருளும் தொழில்க ளன்றோ? ஒளிவளரும் தமிழ்வாணி! அடியனேற்

கிவையனைத்தும் உதவு வாயே.’’ என்று தமிழ் வாணியை வேண்டுவதனின்றும் இதனை அறியலாம். எந்தப் பாடல்களை எடுத்துக்கொண்டாலும் அவற்றில் இந்த முக்கூறுகளும் இன்றியமையாத கூறுகளாக அமைந்திருப்பதைக் கானலாம்.

கடந்த ஆயிரத்து இருநூறு ஆண்டுகளாகச் சில சிற்றிலக்கியங் களைத் தவிர முக்கியமான நூல்கள் யாவும் விருத்த யாப்பிலேயே செய்யப்பட்டுப் புலவர்கள் அதன் பரப்பிற்கும் ஆற்றலுக்கும் ஒர் எல்லை கண்டுவிட்டனர். இதனை நன்கு அறிந்த பாரதியார் புது யாப்பு முறைகளைத் தேடிக்கொண்டார். விருத்த வண்ணங்களையே கையாண்டால் அளவைக் கருதி அவசியமற்ற சொற்களையும் சொற்றொடர்களையும் பாவங்களையும் அதிகமாகச் சேர்க்க நேரிடும். தற்காலத்திற்கேற்ற புதிய கருத்துகளையும் கற்பனை களையும் அழகுறப் பொதிய வேண்டுமென்றால் புதிய யாப்பு முறைகள் வேண்டும் என்பதை நன்குணர்ந்தவர் பாரதியார். மிகஎளிய

26 மலரும் மாலையும்-பாரதியும் பட்டிக்காட்டானும்-2, 8. 27. பா.ச: சூதாட்டச் சருக்கம்- 154

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/45&oldid=681273" இலிருந்து மீள்விக்கப்பட்டது