பக்கம்:பாரதீயம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3{} பார்தீயம்

சொற்களைக் கையாண்டு எல்லோரும் எளிய முறையில் சுவையுடன் படித்து அறியக்கூடிய பாங்கில் கற்பனை நிறைந்ததாயும் ஒசையின்பம் மலிந்ததாயுமுள்ள கவிதைகளைப் படைப்பதில் பாரதியாருக்கு நிகரானவர் தமிழ் இலக்கியத்திலேயே இலர் என்று திட்ட மாகச்சொல்லலாம்.

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி

இருந்ததும் இந்நாடே. என்பது காட்டு வணக்கம் என்ற பாடலிலுள்ள ஒருவகைச் சந்தம்.

ஞானத்தி லேபர மோனத்திலே-உயர் மானத்தி லேஅன்ன தானத்திலே கானத்தி லேஅமுதாக கிறைந்த

கவிதையி லேஉயர் நாடு. என்பது பாரத நாடு’ என்ற பாடலிலுள்ள மற்றொரு வகைச் சந்தம். பாரத மாதாவைப்பற்றிய பாடல்களில் சந்த நயங்கள் கொழிப்பதைக் கண்டு மகிழலாம்.

முன்னை இலங்கை அரக்கர் அழிய

முடித்தவில் யாருடை வில் ?-எங்கள் அன்னை பயங்கரி பாரத தேவிகல்

ஆரிய ராணியின் வில்.

என்றும்,

தொன்று கிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு

சூழ்கலை வாணர்களும்-இவள் என்று பிறந்தவள் என்றுன ராத இயல்பின ளாம்.எங்கள் தாய்.

என்றும்,

பேயவள் காண்னங்கள் அன்னை-பெரும்

பித்துடை யாள்ளங்கள் அன்னை காபழல் எந்திய பித்தன்-தனைக்

காதலிப் பாள்.எங்கள் அன்னை. என்றும் பல்வகைச் சந்த கயங்கள் பயின்று வருவதைக் காண்க “பாரத சமுதாயம் என்ற பாடலில்

எல்லா உயிர்களிலும் நானே இருக்கின்றேன்.”

என்றுரைத் தான்கண்ண பெருமான் ; எல்லாரும் அமரங்லை எய்தும்கன் முறையை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/46&oldid=681274" இலிருந்து மீள்விக்கப்பட்டது