பக்கம்:பாரதீயம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 பாரதீயம்

துணிவேண்டா, கற்றைச் சடை வேண்டா:

ல் போதும் பரமநிலை எய்து தற்கே . சத்திரங்கள் வேண்டா சதுமறைகளேதுமில்லை; தோத்திரங்க ளில்லையுளங் தொட்டுகின்றாற் போதுமடா : தவமொன்று மில்லையொரு சாதனையு மில்லையடா:

. ற புள்ளதெனச் சிந்தை செய்தாற் போதுமடா.*

என்பவையே அவர் கூறும் வழிகளாகும். இங்கிலையை எய்துதல் அருமையிலும் அருமை: ஞானியரே இந்நிலையை அடைதல் இயலும். ஆகவே, எல்லோரும் எளிதில் பின்பற்றக்கூடிய அவர் கூறும் இறைமைக் கொள்கையினையும், அந்த இறைவனை அடைவதற்கு அவர் காட்டும் நெறிகளையும் ஈண்டுச் சிந்திப்போம்.

கடவுட் கொள்கை : பாரதியாரின் பாடல்களை மேலோட்ட மாகப் பயின்றாலும் இவர் சக்தி வழிபாட்டாளர் என்பதைத் தெளி வாக உணரலாம். எனினும் விகாயகர், முருகன், நாமகள், பூமகள், கண்ணன், இராமன், கோவிந்தன் என்று காட்டு மக்கள் வழிபடும் கடவுளர்களையும் அவர் போற்றத் தவறவில்லை. நாட்டையும் பாரத மாதாவாக்கி அதனையும் வழிபடுகின்றார்: விடுதலையே அவர் சமய மாகின்றது. ஆகவே, தெய்வப் பாடல்களின் கடை பாரதியின் காடுபற்றிய பாடல்களிலும் விடுதலைபற்றிய பாடல்களிலும் நிழலிடு வதைக் காணலாம். சமயத்துறையில் பயிலும் கடையை மேற். கொண்டு ஒரு கொள்கையைப் பரப்பினால்தான் சமயப் பற்றில் ஆழ்ந்து கிடக்கும் மக்களுக்கு ஏற்கும் என்பதை காடி பிடித்து’ அறிந்துகொண்டார். இனி, இவர்தம் கடவுட் கொள்கையை ஆசிரியின்ாம்.

i. பண்டையோர் வணங்கும் தெய்வங்கள்

முதலாவதாகப் பண்டையோர் வழிபடும் தெய்வங்களைக் குறிப்பிடுகின்றார். அத்தெய்வங்களையெல்லாம் மங்களாசாசனம் செய்து மகிழ்கின்றார். இங்கிலையைக் காண்போம்.

விகாயகர் : வெண்பா, கலித்துறை, விருத்தம், அகவல் என்ற நான்குவகைப் பாக்கள் கலந்து வரும் நாற்பது பாடல்களடங்கிய ‘விநாயகர் நான்மணி மாலை என்ற ஒரு சிறு பிரபந்தமே பாடி இவரைப் போற்றுகின்றார். வைணவர்கள், சரணாகதி தத்துவத்தை {பிரபத்தி நெறி) முக்திக்கு ஒரு தனி நெறியாகக் கொண்டிருந்தாலும் பொதுவாக இந்துக்களும் பிற சமயத்தினரும் சரணாகதி என்ற தத்துவத்தை மேற்கொள்ளுகின்றனர். இம்முறையையொட்டிப் பாரதியாரும் ஆனை முகத்தோனைப் பல முறை சரணமடை கின்றார் இச் சிறுபிரபந்தத்தில்.

4. டிை : பரசிவ வெள்ளம் - 20, 21, 22

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/50&oldid=681279" இலிருந்து மீள்விக்கப்பட்டது