பக்கம்:பாரதீயம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடவுள் - சமயக் கொள்கைகள் 35

காலைப் பிடித்தேன். கணபதி !

நின்பதம் கண்ணிலொற்றி நூலைப் பலபல வாகச்

சமைத்து கொடிப்பொழுதும் வேலைத் தவறு கிகழாது

நல்ல வினைகள் செய்துன் கோலை மனமெனும் காட்டின்

நிறுத்தல் குறியெனக்கே.”

என்று விநாயகப் பெருமானின் திருவடிகளில் சரணமடைவதைக் காண்கின்றோம். ஆனைமுகத்தோனின் செங்கோல் தம் மனம் என்னும் நாட்டில் நிறுத்தவேண்டும் என்று விழைகின்றார். இன்னொரு பாடலில்,

நீயே சரணம் தினதரு

ளேசர ணஞ்சரணம்”

என்றும், பிறிதொரு பாடலில்,

கித்தியப் பொருளே சரணம் சரணம் சரணம் சரணமிங் குனக்கே..? என்றும் சரணம் அடைவதைக் காணலாம். இந்தப் பெருமானை இவர் வேண்டுவனவற்றை இவர் வாக்கிலேயே காண்போம்.

எனக்கு வேண்டும் வரங்களை

இசைப்பேன் கேளாய் கணபதி ! மனத்திற் சலன மில்லாமல்

மதியில் இருளே தோன்றாமல் நினைக்கும் பொழுது நின்மவுன

நிலைவக் திடநீ செயல்வேண்டும் கனக்கும் செல்வம் நூறு வயது ; இவையும் தர.ே கடவாயே.” இதில் தமக்கு மவுனநிலை, கனக்கும் செல்வம் நூறு வயது (நீண்ட ஆயுள்) வேண்டுவதைக் காணலாம். இந்த நிலைகள் தமக்கு வாய்த்தால்தான்,

5. வி.நா. மா - 6 6. 2ை - 2 7. - 32 s. 27

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/51&oldid=681280" இலிருந்து மீள்விக்கப்பட்டது