பக்கம்:பாரதீயம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடவுள் சமயக் கொள்கைகள் 37

என்ற பாடலையும் இவண் காட்டிய பாரதியார் பாடலையும் மாறி மாறிப் படித்து அதுபவித்தால் இவ்வுண்மையைத் தெளியலாம். முருகனது வேலை ஞானசக்தி'க்குக் குறியீடாகக் கொள்வது மரபு. இந்த ஞானசக்தியை விழையும் பாரதியார், -

தோகைமேல் உலவும் கந்தன்

சுடர்க்கரத் திருக்கும் வெற்றி வாகையே சுமக்கும் வேலை

வணங்குவது எமக்கு வேலை”. என்று தம் உயிராய பணியைத் தெரிவிக்கின்றார். இன்னொரு பாடலில்,’ . -

வீரத் திருவிழிப் பார்வையும்-வெற்றி

வேலும் மயிலும்என் முன்னின்றே-எந்த நேரத் திலும்என்னைக் காக்குமே;-அன்னை

கீலி பராசக்தி தண்ணருட்-கரை ஒரத்தி லேபுணை கூடுதே . என்று முருகன்மீது தமக்கிருக்கும் பக்திப் பெருக்கைக் காட்டு கின்றார். கிளிவிடுதூது’ என்ற பாடலில் தாம் நாயகி நிலையை அடைந்து முருகனுக்குத் துது விடுகின்றார்.

அல்லிக் குளத்தருகே-ஒருநாள்

அந்திப் பொழுதினிலே-அங்கோர் முல்லைச் செடியதன்பால்-செய்தவினை

முற்றும் மறந்திடக் கற்றதென் னேஎன்று சொல்ல வல்லாயோ-கிளியே o என்று முல்லைச் செடியதன்பால் கடந்த வினையை (புணர்ச்சி அல்லது முத்தம் :) நினைவுகூரச் செய்யுமாறு கிளிக்குப் பணிக் கின்றார். மேலும், -

பாலை வனத்திடையே-தனைக்கைப்

பற்றி கடக்கையிலே-தன்கை வேலின் மிசையானை-வைத்துச்சொன்ன

விந்தை மொழிகளைச் சிந்தைசெய் வாயென்று சொல்ல வல்லாயோ-கிளியே : . என்று புணர்ச்சிக்குப்பின் நின்னைப் பிரியேன் பிரியில் தரியேன்” என்று தன் வேலின்மீது ஆணையிட்டுச் சொன்ன விந்தைமொழி

13. தோ.பா. 6. எமக்கு வேலை. 14 டிை 5. முருகன் பாட்டு. 15. டிை : 4. கிளிவிடு துரிது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/53&oldid=681282" இலிருந்து மீள்விக்கப்பட்டது