பக்கம்:பாரதீயம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடவுள் - சமயக் கொள்கைகள் 39

தன் கையில் தரித்திருப்பது கொள்ளைக் கனி இசை.கொட்டும் கல் யாழ். இவள் பிள்ளைப் பிராயத்திலேயே கவிஞருக்கு அருள் பாலித்தவள். இவளுடைய திருமேனி சொல்லுந்தரமன்று. வேதமே இவளது திருவிழி ; அதன் உரையே அதில் பூசிய கரிய மை. இவள் முகம் சீதக் கதிர்மதியை ஒத்தது. சிந்தனையே இவள் குழலாகும். வாதமும் தருக்கமும் இவளது இரண்டு செவிகளாகும் ; இவற்றில் அணிந்திருப்பது துணிவு என்ற தோடு (காதணி} ஆகும். மூக்கினை அறிவுக் கூர்மைக்குக் குறியீடாகக் கொள்வது மரபு. ஆதலால், போதமே இவளது நாசியாக அமைந்திருந்தது. இவளது இதழ்கள் கற்பனையே வடிவங் கொண்டவை. காவியமே இவளது கொங்கை களாகும் : சிற்பம் முதல் எல்லாக் கலைகளும் இவளது கரத்தில் குடிகொண்டிருந்தன. இத்தகைய திருமேனியையுடைய பெருமாட்டி விற்பனத் தமிழ்ப் புலவோரின் நாவையே தன்னுடைய மலர்ப்பத மாகக் கொண்டவள். இவள் தாண்டவமாடுவது அங்குத்தானே ??? இந்த நாமகளைத்தான் கவிஞர் சரண் புகுந்து ஐவர் பூவை"யின் புகழ்க் கதையைத் தமிழ்ப்பாட்டால் காவியம் சமைப்பதற்குத் துணைபுரியுமாறு வேண்டுகின்றார் ; வாழ்த்துமாறு முறையிடு கின்றார்.

இவர் பாடும் கவிதை எப்படி இருக்க வேண்டும் ? இவர் வாக்கிலேயே அதனைக் கேட்போம் :

தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவுதர

மொழிந்திடுதல்; சிந்திப் பார்க்கே களிவளர உள்ளத்தில் ஆனந்தக்

கனவுபல காட்டல், கண்ணிர்த் துளிவாஉள் ளுருக்குதல், இங்கிவையெல்லாம்

அேருளும் தொழில்க ளன்றோ? ஒளிவளருங் தமிழ்வாணி! அடியனேற்

கிவையனைத்தும் உதவு வாயே..”* பாஞ்சாலி சபதத்தை நாம் படித்தநுபவிக்கும்போது கவிஞர் கலை மகளை வேண்டிப் பெற்ற கூறுகளனைத்தும் நாம் காவியத்தில் தட்டுப்படுவதைக் காண்கின்றோமன்றோ? கலைமகள் தன்னை விட்டுப் பிரிவதைத் தன்னால் ஆற்ற முடியாது என்கின்றார்.

கண்மணி போன்றவரே!- இங்குக்

காலையும் மாலையும் திருமகளாம் பெண்மணி யின்பத்தையும்-சக்திப்

பெருமகள் திருவடிப் பெருமையையும்

22. பா.ச : 1.2 : 3,4,5,6. 23. ,ை 228 154

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/55&oldid=681284" இலிருந்து மீள்விக்கப்பட்டது