பக்கம்:பாரதீயம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 பாரதீயம்

வண்மையில் ஒதிடுவீர்!-என்றன்

வாயிலும் மதியிலும் வளர்ந்திடுவீர்! அண்மையில் இருந்திடுவீர்!-இனி

அடியனைப் பிரிந்திடல் ஆற்றுவனோ !”* இந்தக் கலைமகள்தான் கவிஞருக்கு,

தெய்வம் யாவும் உணர்ந்திடும் தெய்வம்,

தீமை காட்டி விலக்கிடுங் தெய்வம் , உய்வ மென்ற கருத்துடை யோர்கள்

உயிரி னுக்குயி ராகிய தெய்வம்: செய்வ மென்றொரு செய்கை யெடுப்போர்

செம்மை காடிப் பணிந்திடு தெய்வம்; கைவ ருந்தி உழைப்பவர் தெய்வம்

கவிஞர் தெய்வம்; கடவுளர் தெய்வம்.” என்று பலவிதமாகக் காட்சி அளிக்கும் தெய்வமாகத் திகழ்கின்றாள். பூமகள் : கவிஞர் கொண்ட மூன்று காதலில் பூமகள்திருமகள்-இரண்டாவது காதலாக அமைகின்றாள். பொருளிலார்க் இவ்வுலகம் இல்லையன்றோ? செல்வத்தின் தலைவிதானே திருமகள்? திருமகளைப்பற்றித் திருக்காதல், திருவேட்கை’, ‘திருமகள் துதி”, *திருமகளைச் சரண் புகுதல்’ என்ற நான்கு பாடல்கள் உள்ளன. வறுமையையே குலதனமாகக் கொண்ட கவிஞர் திருவை வேண்டுதல் இயல்பன்றோ : ஒரு பாடலில் திருவே நினைக்காதல் கொண் டேனே’ என்கின்றார். அடுத்த பாடலிலும்,

மலரின் மேவு திருவே :-உன்மேல்

மையல் பொங்கி கின்றேன் : நிலவு செய்யும் முகமும்-காண்பார் நினைவ Nக்கும் விழியும். கலகலென்ற மொழியும்-தெய்வக்

களிது லங்கு நகையும் இலகு செல்வ வடிவும்-கண்டுன்

இன்பம் வேண்டு கின்றேன்.31 என்று திருவின்மீது காதல் கொண்டு இன்பம் வேண்டுவதைக் காணலாம்.

ஒரு பாடலில் திருமகளின் பிறப்பிடத்தையும், அவள் வாழும் இடங்களையும் தெளிவுறுத்துகின்றார். திருமகளின் பிறப்பிடம்

24. தோ.பா. 61. கலைமகளை வேண்டுதல்-3. 25. தோ.பா. 62. வெள்ளைத் தாமரை-4 26. தோ. பா 56. திருக்காதல்-அடி 1. 27. டிை 57. திருவேட்கை-1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/56&oldid=681285" இலிருந்து மீள்விக்கப்பட்டது