பக்கம்:பாரதீயம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடவுள் - சமயக் கொள்கைகள் 4?

பாற்கடல் அவள் தன்மை அமுதம் போன்றது. அவள் தாமரைப் பூவில் திருவடியை வைத்து வாழ்பவள். பொன்னிற மேனியை யுடையவள். கருவிழிகளையுடையவள் ; பசுமையில் விருப்புடை பவள். அவளது நான்கு திருக்கைகளிலும் பலவகைச் செல்வங்கள் கொழித்து நிற்கும். அவள்,

நாரணன் மார்பினிலே-அன்பு

கலமுற நித்தமும் இணைந்திருப்பாள்.”*

‘அகலகில்லேன் இறையும்’ என்று அவன் மார்பில் நிலைத்து வாழ்பவள். இவள் தோரணப் பந்தரிலும், பசுத் தொழுவத்திலும், சுடர்மணி மாடத்திலும், வீரர்களின் தடந்தோளிலும், வேர்வை வெளிப்பட உழைப்பவர் தொழில்களிலும், பாரதி சிரத்தினிலும் வீற்றிருந்து அருள் புரிபவள். இன்னும் பொன், மணி, கறுமலர், சாந்து, விளக்கு, கன்னியர் ககைப்பு, செழுங்காடு, பொழில், கழனில் துணிவு, மன்னர் முகம் போன்ற இடங்களிலும் இவள் வீற்றிருப் பவள். மேலும், மண்ணுள் இருக்கும் கனிகள், மலை, ஆழ்கடல்: புண்ணிய வேள்வி, உயர்புகழ், மதி, புதுமை, பண்ணும் பாவை, நல்ல பாட்டு, கூத்து, ஓவியம் ஆகியவற்றிலும் காணப்படுவாள். வெற்றிகொள் படை, விகயங்கள் அறிந்தவர் அங்காடி, கற்றவ கடை, காவலர் தேமொழித் தொடர் ஆகியவற்றிலும் தென்படுபவள். இத்தகைய பெருமாட்டியை வாழ்த்த விழைகின்றார் கவிஞர். இப்படியிருந்தும், அவள் தம்மை நாடாதது கண்டு,

என்ன பிழைகள் கண்டோ-அவள்

என்னைப் புறக்கணித் தேகிடுவாள்.

என்று கைக்து பேசுகின்றார். கலைமகளின் கடைக்கண் நோக்கை நன்கு பெற்ற கவிஞரின்மீது திருமகளின் கடைக்கண் நோக்கு பட வில்லை,

இருவேறு உலகத் தியற்கை திருவேறு

தெள்ளிய ராதலும் வேறு.* என்ற வள்ளுவர் வாய்மொழியைச் சிந்தித்து அமைதி கொள்ளுவோம்:

கண்ணன் : :பாரத காட் டி ன் குலதெய்வமாகிவிட்ட

கண்ணனுக்குப் பாமாலை சூட்டாத கவிஞர்கள் அருமை. தன்னை நெடுநாள்களாக மறந்திருந்த பாரத நாடு திடீரென விழித்துக் கொண்டதும், அதன் எதிரே முதலில் தோன்றிய ஒளி, தோ சாஸ்திரத்தைக் கூறிப் பார்த்தனுடைய ரதத்தை வெற்றி பெற ஒட்டிய கண்ணபிரானுடைய உருவமே. அந்த உருவமானது கமது

28. தோ, பா. 59. திருமகளைச் சரண்புகுதல்-4 29. குறள்-374

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/57&oldid=681286" இலிருந்து மீள்விக்கப்பட்டது