பக்கம்:பாரதீயம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடவுள் - சமயக் கொள்கைகள் 43

என்று பல்லவி தொடங்குகின்றது. காந்தியடிகளின் நாவில் தாண்டவமாடிய இராமநாமம் இவரை இப்பாடலை அமைக்கத் தூண்டியிருத்தல் வேண்டும்.

ஆகாசங் தீகால் நீர்மண்

அத்தனை பூதமும் ஒத்து கிறைந்தாய் : ஏகாமிர்த மாகிய நின் தாள் -

இணைசர னென்றால் இதுமுடியாதா ? என்று இராமனை ஒரு விசுவரூப தரிசனமாகக் காண்கின்றார். வைணவ தத்துவமான அசித்து இவர் மனத்தில் இவ்வாறு காட்சி அளிப்பதாகக் கருதலாம். இதே பாடலில் பாகார் மொழி சீதையின் மென்றோள், பழகிய மார்பா !” என்ற அடி புருஷகாரமாக இருக்கும் பிராட்டி என்ற வைணவ தத்துவத்தை நினைந்து பாடி யுள்ளார் என்று கருத இடந்தருகின்றது. நின்தாள் சரணம் என்று இராமன் தாளைச் சரண் அடையும் கவிஞருக்குப் புருஷகாரமாக” விளங்கும் பிராட்டியின் நினைப்பு வருவதில் வியப்பொன்றும் இல்லை. பாடலின் இறுதியிலும்,

சத்யா சகாதநா ராமா

சரணம் சரணம் சரண முதாரா : என்று சராணகதி நெறியை மீண்டும் வற்புறுத்துவதைக் காணலாம். பிறிதோரிடத்திலும் இராமனைப்பற்றிய நினைவு கவிஞருக்கு வருகின்றது. கவிஞர், கோவிந்தசாமியிடம் மரணத்தைத் தேய்க்கும் வழியைக் கேட்கும்போது அவர் வாக்காக வருகின்றது. அவர் கயிலை வேந்தன் திருவடிகளை மூடிமேற்கொண்டால் பந்தமும் பயமும் இல்லையென்பதாகக் கூறி ‘அது’ என்ற மெய்ப் பொருளைச் சுட்டுகின்றார்:

அதுவே யென்பதுமுன் வேத வாக்காம் :

அதுவென்றால் எதுவெனநான் அறையக் கேளாய் அதுவென்றால் முன்னிற்கும் பொருளின் நாமம்

அவனியிலே பொருளெல்லாம் அதுவாம் ; யுேம் அதுவன்றிப் பிறிதில்லை ஆத லாலே,

அவனியின்மீ தெதுவரினும் அசைவு றாமல் மதுவுண்ட மலர்மாலை இராமன் தாளை -

மனத்திலே நிறுத்தியிங்கு வாழ்வாய் சீடா :

35. புருஷகாரம்-தகவுரை. வைணவ தத்துவத்தில் பிராட்டியார் புருஷகார பூதை’ என்று வழங்கப்பெறுபவர். விவரம் இவ்வாசிரியரின் முத்திநெறி (பாரி தி ைலயம், சென்னை - 600 001) என்ற நூலில் காண்க.

36. பாரதி அறுபத்தாறு-60

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/59&oldid=681288" இலிருந்து மீள்விக்கப்பட்டது