பக்கம்:பாரதீயம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 பாரதீயம்

என்று வருவதைக் காண்க. எவ்வுயிரும் கடவுள்’ என்ற கொள்கையை-அத்வைத நிலையை-மேற்கொண்டால் மரண மில்லை என்று குறிப்பிடுவதையும் சிந்திக்க. கழுதை, பன்றி, கூலம், மலம் முதலிய காண்பனவெல்லாம் தெய்வமாகப் பாவிப்பவர் கவிஞர்:.

கோவிந்தன் : இத்திருநாமம் கண்ணனுக்கு இந்திரனால் சூட்டப் பெற்றது. கோவர்த்தனத்தைக் குடையாகக் கொண்டு ஆநிரைகளைக் காத்தபோது இந்திரன் கோவிந்தா என்று கண்ணனை அழைத்ததை ஈண்டு நினைவுகூர்க. இந்தக் கோவிந்தனைக் கவிஞர் கோவிந்தன் பாட்டு’ என்ற ஒரே பாட்டில் மங்களாசாசனம் செய்து மகிழ் கின்றனர். -

எளியனேன் யானெனலை எப்போது

போக்கிடுவாய், இறைவனே! இவ் வளியிலே பறவையிலே மரத்தினிலே முகிலினிலே வரம்பில் வான வெளியிலே கடலிடையே மண்ணகத்தே

வீதியிலே வீட்டி லெல்லாம் களியிலே, கோவிந்தா கினைக்கண்டு

கின்னொடுகான் கலப்ப தென்றோ ?

என்கண்ணை மறந்துனிரு கண்களையே என்னகத்தில் இசைத்துக் கொண்டு கின்கண்ணாற் புவியெல்லாம் நீயெனவே

கான்கண்டு நிறைவு கொண்டு வன்கண்மை மறதியுடன் சோம்பர்முதற் பாவமெலாம் மடிந்து கெஞ்சிற் புன்கண்போய் வாழ்ந்திடவே கோவிந்தா !

எனக்கமுதம் புகட்டு வாயே. இப்பாடலில் யான்’ என்ற அகந்தையைப் போக்க வேண்டும் என்ற எண்ணம் குறிப்பிடத்தக்கது. இவ், வளியிலே, பறவையிலே. வீட்டிலெல்லாம் என்ற அடிகளில் விசுவரூப தரிசனக் காட்சியைக் கவிஞர் மனத்தில் எண்ணியதைக் காண்கின்றோம். இக்கருத்து,

பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற - காவிமலர் என்றும், காண்தோறும், பாவியேன்

37. பாரதி அறுபத்தாறு-4 38. டிை-16 39. தோ. பா : 44. கோவிந்தன் பாட்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/60&oldid=681290" இலிருந்து மீள்விக்கப்பட்டது