பக்கம்:பாரதீயம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடவுள் சமயக் கொள்கைகள் 47

என்ற பாடற் பகுதிகளில் எல்லாம் சக்தி மயம்’ என்ற கருத்து தெளிவாவதைக் காணலாம். மேலும், விண்டு ரைக்க அறிய அரிதாய்

விரிந்த வான வெளியென நின்றனை; அண்ட கோடிகள் வானில் அமைத்தனை,

அவற்றில் எண்ணற்ற வேகஞ் சமைத்தனை : மண்ட லத்தை அணுவணு வாக்கினால்

வருவ தெத்தனை அத்தனை யோசனை கொண்ட தூரம் அவற்றிடை வைத்தனை

கோலமே நினைக் காளியென் றேத்துவேன்.49 என்று இந்த அகிலத்தின் காட்சியைத் தொகுத்துக் காட்டுவர். இக் காட்சி அடுத்து வரும் ஐந்து பாடல்களில் அற்புதமாக வகுத்துக் காட்டப்பெறுகின்றது. இந்த வியன்பெரு வையத்தின் காட்சி:

பிறிதோரிடத்திலும் நன்கு காட்டப் பெறுகின்றது. ”

‘எல்லாம் சக்திமயம்’ என்ற கருத்து வேறொரு கோணத் திலும் காட்டப் பெறுகின்றது.

துன்ப மிலாத நிலையே சக்தி

தூக்க மிலாக்கண் விழிப்பே சக்தி அன்பு கனிந்த கனிவே சக்தி

ஆண்மை நிறைந்த நிறைவே சக்தி : இன்ப முதிர்ந்த முதிர்வே சக்தி,

எண்ணத் திருக்கும் எரியே சக்தி : முன்புநிற் கின்ற தொழிலே சக்தி, -

முக்தி நிலையின் முடிவே சக்தி. ‘ இதனைத் தொடர்ந்து வரும் பாடல்களிலும் சக்தியின் பரிணாமம் பல்வேறு விதமாகக் காட்டப்பெறுகின்றது. முத்தாய்ப்பாக,

வீழ்வு தடுக்கும் விறலே சக்தி,

விண்ணை யளக்கும் விரிவே சக்தி : ஊழ்வினை நீக்கும் உயர்வே சக்தி,

உள்ளத் தொளிரும் விளக்கே சக்தி. என்று கூறிக்களிக்கின்றார் கவிஞர். மேலும்,

பூதம் ஐந்தும் ஆனாய் - காளி !

பொறிகள் ஐந்தும் ஆனாய் :

19. தே. ப 34. மஹா சக்தி வாழ்த்து -1

50. டிை 42. கோமதியின் மகிமை - 5, 6

51. ை: 21. சக்தி-1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/63&oldid=681293" இலிருந்து மீள்விக்கப்பட்டது