பக்கம்:பாரதீயம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 பாரதீயம்

பேrத மாகி கின்றாய் - காளி : பொறியை விஞ்சி நின்றாய் என்று அன்னை இந்திரியங்களாகவும் நிற்கின்றாள், அவற்றைக் கடந்தும் கிற்கின்றாள் என்று காட்டுவர்.

எல்லாத் தொழில்களும் செயல்களும் சக்தி தேவியின் அருளால் தான் நடைபெறுகின்றன என்று கம்புபவர் பாரதியார்.

செய்யுங் கவிதை பராசக்தி

யாலே செயப்படுங்காண் 8 என்று தாம் படைக்கும் கவிதைகளும் அன்னை பராசக்தியின் அருளால்தான் வெளிவருகின்றன என்று கூறுவதைக் காண்க. பிறிதோர் இடத்திலும்,

பாட்டினிலே சொல்லுவதும் அவள்சொல் லாகும்!

பயனின்றி உரைப்பாளோ? பாராய்! நெஞ்சே: என்று இக்கருத்தினையே மீண்டும் உரைப்பதைக் காணலாம். எனவே, பாடுவதும் அவள் அருளே என்று உணர்ந்த கவிஞர்,

பாட்டுத் திறத்தாலே - இவ்வையத்தைப்

பாலித் தி.வேணும். 9

என்று தம் பேராசையை வெளியிடுகின்றார். பராசக்தியைத் தமிழ்வாணியாகப் பாவித்து,

வெள்ளை மலர்மிசை வேதக் கருப்பொரு

ளாக விளங்கிடுவாய்! தெள்ளு கலைத்தமிழ் வாணி நினக்கொரு

விண்ணப்பஞ் செய்திடுவேன்; எள்ளத் தனைப்பொழுதும்பய னின்றி

இராதென்றன் நாவினிலே வெள்ள மெனப்பொழி வாய்சக்தி வேல்,சக்தி

வேல், சக்திவேல், சக்தி வேல்:

என்று வேண்டுகின்றார். இன்னும், - சுவை

கண்ணும் பாட்டினொடு தாளம் - மிக

நன்றா வுளத்தழுந்தல் வேண்டும் - பல

52. தோ. பா. 30 காளிப்பாட்டு-1 53. வி. நா. மா- 26 54. ை: 27. பேதை நெஞ்சே. 55. டிை : 10. கானிதிலம் - 3.

56. . : 18. ஓம் சக்தி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/64&oldid=681294" இலிருந்து மீள்விக்கப்பட்டது