பக்கம்:பாரதீயம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 பாரதீயம்

இதில் சிவன், திருமால், இஸ்லாமியரின் கடவுள், கிறித்தவரின் கடவுள் இவர்கள் யாவரும் ஒரே பரம்பொருள் என்று குறிப்பிடு வதைக் காணலாம். அறிவே தெய்வம், பரசிவ வெள்ளம்’, ‘நான்என்றே பாடல்களிலும் பரம்பொருள் ஒன்றே என்ற கருத்தினைக் கண்டு மகிழலாம்.

பல்லாயிரம் பல்லாயிரம் கோடி

கோடி பண்டங்கள் எல்லாத் திசையிலு மோரெல்லை யில்லா வெளிவானிலே : கில்லாது சுழன்றோட நியமம் செய்தருள் காயகன் சொல்லாலும் மனத்தாலுந் தொடரொ

னாத பெருஞ்சோதி.19 என்ற அல்லாவைப் பற்றிய இந்தப் பாடல் பரம்பொருளுக்கும் பரஞ்சோதிக்கும் - பொருந்துமாறு அமைந்துள்ளதைக் காணலாம்.

வேறு வழிபடு பொருள்கள் - மேற்குறிப்பிட்ட கடவுளர்களைத் தவிர பண்டையோர் மேற் கொண்ட நெறியையொட்டிப் பகலவன், திங்கள்; தி-முதலியவற்றை யும் வழிபடு பொருளாகக் கொள்கின்றார் கவிஞர். இவற்றையும் காண்போம்.

பகலவன் : கதிரவனைப் பற்றி மூன்று பாடல்கள் காணப்படு கின்றன. திருமறைகளும், முனிவர்களும் இவர்களைத் தொடர்ந்து துமொழிப் புலவர்களும் கதிரவனைப் பெருமையுடன் போற்று வதைச் சிந்திக்கின்றார்.

பரிதியே:பொருள் யாவிற்கும் முதலே!

பானுவே: பொன்செப் பேரொளித் திரளே! என்கின்றார். ஆதவனே ஆற்றலனைத்திற்கும் மூலம்’ (The sun is the ultimate source of energy) Grgr p. @sirgo sygestu uso உண்மையையும் சிந்தித்துப் பொருள் யாவிற்கும் முதலே என் கின்றார். நம் முன்னோர்கள் காலையில்: எழுந்தவுடன் காலைக் கடன்களை முடித்துக்கொண்டு கதிரவனை வணங்குவதைக் காண் கின்றோம். கற்றோரும் கல்லாதோரும். இவ்வணக்கத்தை மேற் கொண்டு வருவகை இன்றும்;காண்கின்றோம். சூரிய நமஸ்காரம்” என்ற ஒரு உடற்பயிற்சி முறையும் நடைமுறையில் இருந்து வரு வதையும் பார்க்கின்றோம். இவற்றையெல்லாம் கினைந்து,

Tzo. Togo, Jr. 78. அல்லா -1.

71. இதன் விளக்கத்தை பொங்கலும் ஆணுவும்: என்ற கட்டுரையில் (அறிவியல் விருந்து, பாரி கிலையம், சென்னை-1) க்ாண்க. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/68&oldid=681298" இலிருந்து மீள்விக்கப்பட்டது