பக்கம்:பாரதீயம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 பாரதீயம்

வீம்புகள் மறையும் : கல்ல மேன்மைகள் உண்டாகிப் புயங்கள் பருக்கும், அதாவது எதிலும் துணிவு பிறக்கும். தெய்வ பக்தியினால்,

சந்ததி வாழும்-வெறுஞ் -

சஞ்சலங்கெட்டு வலிமைகள் சேர்ந்திடும் “இந்தப் புவிக்கே-இங்கோர்

ஈசனுண் டாயின் அறிக்கையிட் டேனுன்றன் கந்தமலர்த்தாள்-துணை :

காதல் மகவு வளர்ந்திட வேண்டும், என் சிந்தை பறித்தே-அருள்

செப்திட வேண்டும்'என் றால்அருள் எய்திடும் என்து வலியுறுத்திக் கூறுவர். பக்தியுடையவர்களின் தன்மையை பும் அவர்கள் பயனடையும் முறையினையும்,

பக்தி யுடையார் காரியத்தில்

பதறார் ! மிகுந்த பொறுமையுடன் வித்து முனைக்குக் தன்மைபோல்

மெல்லச் செய்து பயனடைவர்.” என்ற பாடலில் தெளிவாக விள்க்குவதைக் காணலாம் ; ம்ே அதுபவமும் இப்படியிருப்பதை உணர்ந்து மகிழலாம். இன்னொரு பாடவில்,

சக்தி பதமே சரனென்று காம்புகுந்து பக்தி யினாற்பாடிப் பலகாலும்-முக்தி நிலை கான்போம்.82 - என்று சரணாகதியும் பக்தி நிலையைக் காணும் வழிகளாகும் என்று வலியுறுத்துவர்.

யோகமா ? தவமா ? : எது முத்திக்குச் சிறந்த வழி என்பது பற்றிச் சில அறிஞர்கள் மண்டையையுடைத்துக் கொள்ளுகின்றனர். இதுபற்றிப் பாரதியார் பல்வேறு வினாக்களை எழுப்புகின்றார், அழகு தெய்வத்தினிடம். இறுதியில் இரண்டும் ஒன்றே என்று முடிவு கட்டுகின்றார்”. அன்புடைய வாழ்க்கைதான் அனைத்தையும் கல்கும் என்பது பாரதியாரின் அதிராக்கொள்கை.

துன்ப நினைவுகளும் சோர்வும்

பயமு. மெல்லாம்

81. டிை வி. கா. மட27 82. தோ.பா. 66. விடுதலை வெண்பா-1 83. த. பா. 9 அழகுத் தெய்வம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/74&oldid=681305" இலிருந்து மீள்விக்கப்பட்டது