பக்கம்:பாரதீயம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. இயற்கை எழில்

இய ற்கைப் பொருள்கள் இன்பமயமான சமாதியில் அடங்கிக் கிடக்கின்றன. அந்த அமைதி நிலைக்குக் குந்தகம் விளையாமல் - அந்த நிலையைக் கலைக்காமல் - அதனுடன் கலந்து கொள்ளும் இன்பம் உடையவனே கவிஞன். அவன் இயற்கையோடு பழகும் - தோய்ந்து கிற்கும் - அதுபவம் வாய்ந்தவன். இயற்கையுடன் அவன் ஒன்றி கிற்கும் கிலையே. தனிப் பெருமை வாய்ந்தது. உறங்குகின்ற குழந்தையைத் தாய் அனைவதைக் கண்டுள்ளோம் அன்றோ ? தாய் குழந்தையை மார்போடு சேர்த்தே தழுவிக் கொள்வாள். என்றாலும், அவ்வாறு அணைவதில் குழந்தையின் துயில் கெடுவதில்லை; அடுத்த கணத்தில் அவளும் தன்னை மறந்து உறங்கி விடுவாள். அவ்விதமே கவிஞனும் இயற்கையை அதன் இன்ப அமைதி கெடாமல் - கலை பாமல் - குலையாமல் - தழுவுவான் தன்னையும் உடனே மறந்து விடுவான் : இன்பப் பெருக்கில் மிதப்பான். அதிலிருந்து வெளி வந்தவுடன் இன்ப வெறி பிடித்தவன்போல் சில சமயம் பாடுவான் : சில சமயம் ஆடுவான். இவையெல்லாம் கலைகளாகின்றன. அவன் அநுபவித்த இன்பப் பெருக்கில் ஒன்றிரண்டு திவலைகள் அவன் பாடிய பாட்டிலும், ஆடிய கூத்திலும் அமைகின்றன. அதைப் பார்த்தே நாம் உயர்ந்த கவிதைகள், கலைகள் என்று உள்ளம் பூசித்துக் கொண்டாடுகின்றோம்,

பாரதியார் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பிறந்து இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கவிதை ஒளியுடன் திகழ்ந் தவர். பாட்டுக்கொரு புலவன் பாரதியடா’ என்று பட்டிக் காட்டான் ஒருவன் வாயில் வைத்து கவிமணியால் பாராட்டப் பெற்றவர்.

பாட்டுத் திறத்தாலே - இவ்வையத்தைப்

பாலித்திட வேணும்” என்ற பேசலாக் கொண்டவர். பராசக்தியின் படைப்பால் தன்னை வீணையாகக் கருதியவர்.

கல்லதோர் வீணைசெய்தே - அதை

கலங்கெடப்புழுதியில் எறிவதுண்டோ?* என்று பராசக்தியை வினவியவர், தம் புலமையைக் கவிதைகள் படைப்பதிலேயே பயன்படச் செய்ய வேண்டும் என்று விழுமிய

1. கவிமணி மலரும் மாலையும் - பட்டிக்காட்டானும் 2. தானி கிலம் -3 பாரதியும்’-i: 3. கல்லதோர் வீணை-1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/78&oldid=681310" இலிருந்து மீள்விக்கப்பட்டது