பக்கம்:பாரதீயம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 பாரதீயம்

மானுடப் பெண்கள வளருமொரு காதலினால், ஊனுருகப் பாடுவதில்.ஊறிடுந்தேன் வாரியிலும், எற்றர்ேப் பாட்டின் இசையினிலும் கெல்லிடிக்கும், தோற்றொடியார் குக்குவெனக் கொஞ்சும் ஒலியினிலும், அன்ன மிடிப்பார்தஞ் சுவைமிகுந்த பண்களிலும், பண்ணை மடவார் பழகு.பல பாட்டினிலும், வட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள் தாமொலிக்கக் கொட்டி யிசைத்திடுமோர் கூட்டமுதப் பாட்டினிலும், வேயின் குழலோடு வினைமுத லாம்.மனிதர், வாயினிலும் கையாலும் வாசிக்கும் பல்கருவி காட்டினிலும் காட்டினிலும் நாளெல்லாம் கன்றொலிக்கும், பாட்டினிலும், கெஞ்சைப் பறிகொடுத்தேன்.” என்று இயற்கையில் தம் மனம் தோயும் நிலையைக் காட்டுவார்; இதில் கவிஞரின் மனம் பூரிப்படைவதைக் காண்கின்றோம்; இப்பகுதியைப் படிக்கும்போதே நம் மனமும் விம்மி மகிழ்வதையும் உணர்கின்றோம்.

காவியங்களைப் படைப்போருக்கு இயற்கையைப் புனைந்து பாட நல்ல வாய்ப்புகள் ஏற்படும். அல்லது ஆங்கிலக் கவிஞர் வொர்ட்ஸ் வொத்தைப் போலவும், பாவேந்தர் பாரதிதாசனைப் போலவும் அழகு, தென்றல், மயில், குயில், கிளி என்பன போன்று பல தலைப்புகளில் பாடுவோரும் இத்தகைய வாய்ப்புகளைத் தக்க முறையில் பயன் படுத்திக் கொள்ளலாம். நாட்டு விடுதலை, தெய்வங்கள் முதலியனபற்றித் தனிப் பாடல்கள் பாடிய கம் புதுமைக் கவிஞர் தாம் பாடியுள்ள வேறு பாடல்களில் - ஏன் தெய்வப் பாடல் களில் கூட-இயற்கைப் புனைவுக்குத்தக்க இடங்களை கல்கியுள்ளதை இவர்தம் பாடல்களைப் படித்து நுகர்வோர் கன்கு அறியலாம். உண்மைக் கருத்தை விளக்குபவனே சிறந்த கவிஞன் ; இக்கருத்தைத் தன் கற்பனையால் வேதியியல் மாற்றம் போன்ற ஒரு வித மாற்றம் செப்து-அதாவது இரசவாதம் செய்து- தந்தால் அவன் ஒப்பற்ற கவிஞனாகின்றான். தான் காணும் பார்வையையே தன் கவிதை களைப் படிப்போரையும் காணுமாறு செய்யவல்ல கவிஞனே உண்மைக் கவிஞனாகின்றான். இக்கவிஞன் உயர்ந்த மெய் விளக்கக் கருத்துகளையும் இலைமறை காய்கள்போல் தோன்றச் செய்து தன் கவிதைகளின் தரத்தை உயர்த்தி விடுகின்றான். இந்த அடிப்படையில் பாரதியாரின் பாடல்களை நோக்க வேண்டும் ; அவர் பெற்ற அநுபவத்தையே நாமும் பெற முயல வேண்டும்.

9. கு. பா.-3. குயிலின் காதற்கதை அடி (28-41)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/80&oldid=681313" இலிருந்து மீள்விக்கப்பட்டது