பக்கம்:பாரதீயம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 பாரதீயம்

இக்கட லதனகத்தே-அங்கங்

கிடையிடைத் தோன்றும்புன் குமிழிகள் போல் தொக்கன உலகங்கள் ; - திசைத்

துவெளி பதனிடை விரைந்தோடும் ; மிக்கதொர் வியப்புடைத்தாம்-இந்த

வியன்பெரு வையத்தின் காட்சி கண்டீர்’ கரைபோட்டு எல்லை கானா விண்வெளிக் கடலில் தோன்றும் புன் குமிழிகள்போல் எண்ணற்ற உலகங்கள் ஒய்வின்றி விசைந்தோடிக் கொண்டிருப்பதை அற்புதமாகக் காட்டுவார். இக்காட்சியைக் கானும் கமக்கு,

பல்வர்ே உடை ஆடை ஆகச் சுற்றி

பார்அகலம் திருவடியா, பவனம் மெய்யா, செவ்விமா திரம் எட்டும் தோளா, அண்டம்

திருமுடியா கின்றான் : என்று திருமங்கையாழ்வார் காட்டும் அகிலத்தின் உருவில் உள்ள எம்பெருமான் திருவுருவத்தையும்,

பாராதி விண் அனைத்தும் யோச், சிந்தை

பரியமட லாஎழுதிப் பார்த்துப் பார்த்து வாராயோ என்ப்ராண நாதா !” என்பேன்;15 என்று தாயுமான அடிகள் நாயகி நிலையில் இறைவனின் திரு உருவத்தை விண்வெளியாகக் காண்பதையும் நினைவுறுத்துகின்றார். இந்த விண்வெளிக் காட்சியை அநுபவித்து மகிழுமாறு மனத் திற்குக் கட்டளையிடுகின்றார் கவிஞர் :

நீலாவையும் வானத்து மீனையும் காற்றையும்

நேர்பட வைத்தாங்கே குலாவும் அமுதக் குழம்பைக் குடித்தொரு

கோல வெறிபடைத்தோம் ; உலாவும் மனச்சிறு புள்ளினை எங்கனும்

ஒட்டி மகிழ்ந்திடுவோம் பலாவின் கணிச்சுளை வண்டியில் ஒர் வண்டு

பாடுவ தும்வியப்போ : என்ற கவிதைப்பகுதியில் இதனைக் கண்டு மகிழலாம். கண்ணுக் கெட்டுவதை மட்டிலும் இங்குக் காட்டுகின்றார். விமானத்தைப்போல்

13. டிை கோமதி மகிசை-5, 6, 7 14. பெரி. திரு. 6. 6:3 15. தாயுமான அடிகள்-ஆகார புவனம்-24 16. த. பா. - நிலாவும் வான்மீனும் காற்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/82&oldid=681315" இலிருந்து மீள்விக்கப்பட்டது