பக்கம்:பாரதீயம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்கை எழில் 69

என்று வரும் இரண்டு அடிகளில் அமைந்துள்ள கற்பனை அற்புதம்’ அற்புதம்!!

விடியற் புனைவு : பாரதமாதா திருப்பள்ளி எழுச்சியில் விடியற் புனைவு காணப்படுகின்றது. திருவாசகம், தில்வியப் பிரபந்தம் இவற்றில் காணப்பெறும் திருப்பள்ளி எழுச்சிகளை யொட்டியே இந்தப் பாடல்கள் அமைந்துள்ளன என்று கருதுவதற்கு இடம் உண்டு. மணிவாசகப் பெருமானும் தொண்டரடிப் பொடியாழ்வாரும் இறைவனைத் துயிலெழுப்புவதாகப் பாடியிருக்க, பாரதியார் பாரதமாதாவைத் துயிலெழுப்புவதாகத் தம் பாடல்களை அமைத் துள்ளார். நாம் செய்த மாதவத்தால் பொழுது புலர்ந்தது. புன்மை இருட்கணம் போயின. பசும்பொற்சுடர் எங்கனும் பரப்பி அறிவெனும் ஞாயிறு எழுந்தது (1) புள்ளினம் ஆர்த்தன. முரசுகள் முழங்கின. சுதந்திர நாதம் எங்கும் பொங்கியது. வெண் சங்கு ஒலி முழங்கியது. தெருவெல்லாம் மங்கையர் கூட்டம் குழுமியது. அந்தணர்கள் கான் மறை ஒதினர் (2) பகலவனின் பேரொளி வானிடைத் தவழ்ந்தது. (3) குயில்பாட்டின் தொடக்கததிலும் விடியற்புனைவு அற்புதமாக அமைந்துள்ளது. காலையிளம்பரிதி தன் பசுங்கதிர்களை லே’ கடலிடையே வீசுகின்றான். இதனால் கடல் நெருப்பெதிரே காணப் பெறும் நீலமணிபோல் ஒளி மிகுந்து கண்கவர் வனப்பாய்க் காட்சி தருகின்றது. கடலின் அலைகள் வேதப் பொருள்பாடிக் கரையைத் தழுவுகின்றன. இங்கனம் வளஞ்சார் கடற்கரையைக் கொண்டது. புதுவைத் திருநகர் என்கின்றார். கவிஞர்.

‘வசனகவிதை'யிலும் வைகறைக் காட்சி வனப்புற அமைக் துள்ளது. கவிஞர் கூறுவார்:

வைகறையின் செம்மை இனிது. மலர்கள்போல் நகைக்கும் உடிை வாழ்க. உஷையை காங்கள் தொழுகின்றோம். அவள் திரு. அவள் விழிப்புத் தருகிறாள், தெளிவு தருகிறாள், உயிர் தருகிறாள், ஊக்கந் தருகிறாள், அழகு தருகிறாள், கவிதை தருகிறாள். அவள் வாழ்க. அவள் தேன், சித்தவண்டு அவளை விரும்புகின்றது. அவள் அமுதம்.

வைகறை கன்று. அதனை வாழ்த்துகின்றோம்.”*

22. வசனகவிதை - இரண்டாங்கிளை- 3.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/85&oldid=681318" இலிருந்து மீள்விக்கப்பட்டது