பக்கம்:பாரதீயம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



iX.

நான் என்பதைக் கவனித்தல் வேண்டும். இது வெளிப்படை யாகவும் இருக்கலாம்; குறிப்பாகவும் இதனைப் பெற வைக் கலாம். கலை, வடிவம், வரலாறு போன்ற செய்திகளில் நாம் எவ்வளவு ஆழ்ந்திருந்த போதிலும், மேற்கூறிய கவிதையின் முதனிலைக் கூறுகள் எவ்விதத்திலும் நம் பார்வையினின்று கழுவாமல் காக்கவேண்டும்’ (பக். 150 - 151).

இந்த ஒளியின் அடிப்படையில் இந்த நூலை நோக்கவேண்டும். ‘சமுதாயப் பார்வை’ (கட்டுரை - 5) என்பதையாவது குறிப்பாக நோக்கவேண்டும். இலக்கியச் சுவைஞர்களும் இலக்கிய ஆய்வாளர் களும் கட்டுரை - 9, கட்டுரை - 10 ஆகியவற்றைப் படித்துத் திம் சுவையையும் தம் ஆராய்ச்சி நோக்கையும் எடை போட்டுப் பார்த்துக் கொள்ளலாம்; இவற்றில் ஒருவிதப் புத்தொளி வீசுவதையும் fr6r6.

‘உலகை இன்பமயமாகக் கண்டு, உள்ளத்தில் பூரிப்பு அடை பவர்கள் கவிஞர்கள்’ என்றால் அக்கவிதை தரும் இன்’ அநுபவங்களை எடுத்துரைக்கும் திறனாய்வாளருக்கும் அக்கவிஞர் களுக்கு இருக்கவேண்டிய உள்ளக்கனிவு கட்டாயம் இருக்கவேண்டும். அவ்வகையில் பாட்டரசர் பாரதியாரின் :( வ நீ த ம் போன்ற கவிதைகளை நெய்யாக்கி உண்ணத் தக் துள்ளார் பேராசிரியர் டாக்டர் ரெட்டியார் என்பதை இந்நூலைப் படித்து முடிக்கும் எவரும் ஒ’ மகிழ்வர்.

‘கவிதையின் உயிராற்றல் பகுதிகளை உரைகடையில்தான் வளமாகத் தருதல் இயலும் என்ற வொர்ட்ஸ்வொர்த்தின் கருத்திற் கேற்ப, பல்வேறு உரைநடைச் செல்வங்களைப் படித்துத் தமிழுக்கு வளம் சேர்க்கும் தெய்வப் பணிபுரிபவர் பேராசிரியர் ரெட்டியார். இத்தனைக்கும் மேலாகப் புத்தம் புதிய நுட்பங்கள் கூறும் அறிவியல் துறைகளில் பாடல் நூல்களின் பாணியில் அழுது வடியும் சிேறையில் எழுதாது அழகான தமிழில் புதிய அறிவியல் பிடிப்பு களை ஆற்றலுடன் எழுத முடியும் என்று தமிழின் மொழியாண் மையைப் புலப்படுத்தும் பாங்கில் பதினான்கு நூல்களை எழுதித் தமிழன்னைக்கு அணிகளாகப் பூ ட் டி மகிழ்ந்த பேராசான். அறிவியலில் கல்லூரியில் பட்டப் படிப்புக்குப் படித்த மூன்று துறைகளைத் தவிர வேறு நான்கு துறைகளை அரிதின் முயன்று கற்று அவற்றில் ஆழ்ந்த புலமையை அடைந்தவர் என்பதற்கு இவர் தம் அறிவியல் படைப்புகளே சான்றுகளாக கின்று பேசும். உடல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/9&oldid=681324" இலிருந்து மீள்விக்கப்பட்டது