பக்கம்:பாரதீயம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 பாரதீயம்

சின்னப் பறவையின் மெல்லொலி கொண்டிங்கு

சேர்ந்திடு கற்காற்றே ! மின்னல் விளக்கிற்கு வானகங் கொட்டுமிவ்

வெட்டொலி ஏன் கொணர்ந்தாய் ??? காற்றின் செயல்களையெல்லாம் தொகுத்துக் கூறும் கவிஞர் மண்ணுலகத்திலுள்ள கல்லோசைகளனைத்தையும் வானவன் கொண்டு வந்தான் என்று குறிப்பிடுவார். இந்த ஒலிகளனைத்தையும் மண்ணில் இசைத்துப் பாடி மகிழ வேண்டும் என்கின்றார். செவிக் கெட்டும் மணியோசை, காய்கள் குரைக்கும் ஒலி, அன்னக் காவடி பிச்சை” என்று ஏங்கிடுவான் குரல், வீதிக் கதவை அடைப்பதனால் எழும் ஓசை, கீழ்த்திசையில் விம்மி எழும் சங்கொலி, தெருக்களிலும் . yy * ~ * ம் வாதுகள் பேசி வழக்காடும் மக்கள் குரல் இவற்றையெல்லாம் றுதான் கொண்டு வருகின்றது என்கிறார். கணக்கிலகப்படாத எத்தனையோ குரல்கள் உளவென்று கூறி இவற்றையெல்லாம் காது குளிரக் கேட்டு அதுபவிக்குமாறு மனத்தைத் துரண்டுகின்றார்.

மழை : மழையைப்பற்றிய வருணனையைப் படிக்கும்போது கொட்டு மழையினை கேரில் காணும் அநுபவம் நமக்கு ஏற்படு கின்றது. திக்குகள் எட்டும் சிதறிப் பக்க மலைகள் உடைந்து வெள்ளம் பாய்கின்றது; அண்டம் சாய்கின்றது. பேய் கொண்டு தக்கையடிக்கிறது காற்று. தீம் தரிகிட தீம் தரிகிட தீம் தரிகிட’ என்ற ஒலி எம்மருங்கும் கேட்கின்றது.

வெட்டி படிக்குது மின்னல்,-கடல்

வீரத்திரை கொண்டு விண்ணை யிடிக்குது; கொட்டி பிடிக்குது மேகம் :-கூ

கூவென்று விண்ணைக் குடையுது காற்று சட்டச்சட சட்டச்சட டட்டா-என்று

தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்; எட்டுத் திசையும் இடிய-மழை

எங்ஙனம் வந்ததடா-தம்பி வீரா: ‘ என்று பெருமழை பொழிவதை - மழை இரைச்சலை-கேரில் காட்டுவது போன்ற ஒலி கபத்துடன் புனைந்து காட்டுகின்றார். இன்னொரு பாடலில் மழையையும் காற்றையும் பராசக்தியின் செய லென்றே கூறுகின்றார்.

27. த. பா.-கிலாவும் வான்மீனும் காற்றும்-4 28. -ைமழை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/90&oldid=681325" இலிருந்து மீள்விக்கப்பட்டது