பக்கம்:பாரதீயம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்கை எழில் 75

மழைபொழிந்திடும் வண்ணத்தைக் கண்டுகான்

வானி ருண்டு கரும்புயல் கூடியே இழையு மின்னல் சரேலென்று பாயவும்

ஈரவாடை இரைந்தொலி செய்யவும் உழைய லாம்.இடை யின்றி இவ் வானநீர்

ஊற்றும் செய்தி உரைத்திட வேண்டுங்கால் ‘மழையும் காற்றும் பராசக்தி செய்கைகாண்

வாழ்க தாய்!” என்று பாடுமென் வாணியே.”

என்ற பாடலில் கவிஞரின் இக் கருத்தைக் கண்டு மகிழ்க.

காடுபற்றிய புனைவு கண்ணன் என் காதலன்-3 என்ற தலைப்பில் வரும் பாடலொன்றில் இப்புனைவினைக் காண் கின்றோம். காட்டில் காதலி காதலனைத் தேடுவதாக அமை கின்றது பாடல். இங்குக் காதலன் கண்ணன். அந்தக் காடு கதிக்குத் தெரியாத அடர்ந்த காடு. சிங்கவேழ் குன்றத்தில்” சில பகுதிகளிலும், கேரளத்தில் சில இடங்களிலும் காணப்படுவது போன்ற காடு. அங்கு மிகுந்த கலம் பயக்கும் மரங்களும் விந்தைச் சுவைதரும் கனி வகைகளும் நிறைந்து காணப்படுகின்றன. எப் பக்கத்தையும் மறைக்கும் ஓங்கி உயர்ந்த மலைகள் சூழ்ந்துள்ளன. அந்த மலைகளினின்றும் “நதிகள் பாடிக்கொண்டே ஓடுகின்றன. கெஞ்சில் கனல் மணக்கும் பூக்களும், எம்மருங்கும், கீழே உதிர்ந்து கிடக்கும் இலைகளும் (சருகுகள்), இனிய நீர் நிறைந்த சுனைகளும் முட்கள் மண்டிக் கிடக்கும் புதர்களும் ஆங்கு உள்ளன. மருண்டு மருண்டு ஆசையுடன் விழிக்கும் மான்கள் இங்குமங்கும் அலைந்து திரிகின்றன. உள்ளம் அஞ்சும் குரல் கொடுக்கும் புலிகள் அக் காட்டில் நடமாடுகின்றன. அங்குள்ள பறவைகள் நேசக் கவிதைகள்’ பாடுகின்றன. பல இடங்களில் நீண்டு படுத்திருக்கும் மலைப் பாம்புகளைக் காணலாம். தன்னிச்சையுடன் திரியும் சிங்கங் களையும் அவற்றின் கர்ச்சனையொலி கேட்டுக் கலங்கியோடும் யானை களையும் அவற்றின்முன் ஒடும் இளமான்களையும் அங்குக் கான லாம். இவற்றின் கால்களில் மிதிபடாது அயலே பதுங்கும் தவளை களையும் அங்குப் பார்க்கலாம். இங்கு மாயோன் மேய காடுறை உலத்தை - காட்டின் காட்சியை-உள்ளது உள்ளவாறே அழகுறப் புனைந்து காட்டுகின்றார் கவிஞர். இன்னோர் உண்மையையும் ஈண்டு சிந்தித்தல் பயனுடையது. யாளி போன்ற இப்பூவுலகில் இல்லாத விலங்குகளை இவர் தம் பாடல்களில் யாண்டும் காட்டிற்றிலர்.

29. தோ.பா - பராசக்தி-4.

30. திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்தது. ஆந்திரத் தில் கடப்பை மாவட்டத்திலுள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/91&oldid=681326" இலிருந்து மீள்விக்கப்பட்டது