பக்கம்:பாரதீயம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்கை எழில் - 77

போற்றியுரைத்த கவிஞர் அதன் தலைநகரையும் சிறப்பிக்க எண்ணி இந்த அவனியில் இணையில்லாத நகரம் அத்தினபுரம் என்று கூறு கின்றார். இன்றைய புதுச்சேரியில் தெருக்கள் வரிசை வரிசையாக அமைந்திருப்பதைப் போலவே, அத்தினபுரத்து வீதிகளும் ஒரு வரிசை யொழுங்கில் அமைந்திருந்தன என்கின்றார். புதுச்சேரியில் வாழ்ந்த கவிஞராதலால் அத்தினபுரத்து வீதிகள் பத்தியில் வீதிகள்’ என்கின்றார். வெள்ளைப் பனிவரை போன்ற மாளிகைகள், முத் தொளிர் மாடங்கள் இவை நகரத்தின் எழிலை மிகுவிக்கின்றன. இடையிடையே சோலைகளும் வாவிகளும் அமைந்து நகருக்குப் புதுக்களையூட்டுகின்றன. -

அந்தணர் வீதிகளில் நான்மறை ஒதுவதன் முழக்கம் கேட் கின்றது. செந் தழல் வேள்விகள் நடைபெற்றவண்ணம் உள்ளன. சாத்திர ஆராய்ச்சி ஓயாது நடைபெறுகின்றது. மந்திர கீதங்களின் ஒசை கேட்கின்றது. தர்க்க வாதங்கள் நடைபெறுகின்றன. இங்கு,

மெய்த்தவர் பலருண்டாம்-வெறும்

வேடங்கள் பூண்டவர் பலருமுண்டாம் உய்த்திடு சிவஞானம்-கனிந்

தோர்ந்திடும் மேலவர் பலருமுண்டாம்: பாய்த்த விந்திர சாலம்-நிகர்

பூசையும் கிரியையும் புலைநடையும் கைத்திடு பொய்ம்மொழியும்-கொண்டு.

கண்மயக் காற்பிழைப் போர்பலராம்.’’ என்று இக்கால நிலை கண்டு அக்கால நிலையை எடுத்துக்காட்டு கின்றார் கவிஞர். பொதுவாக நாட்டில் பல இடங்களிலும் சென்னை போன்ற நகர்களில் அதிகமாகவும் இங்கிலைகள் நிலைபெற்றிருப் பதை இன்றுங் காணலாம். -

ஒரு பக்கம், மாலைகள் புரண்டசையும் வரையெனத் திரண்ட தோளுடைய மறவர்கள் காட்சி அளிக்கின்றனர். இவர்கள் காலை யிலும் மாலையிலும் பகை காய்ந்திடும் தொழில்களைப் பழகி வரு கின்றனர். இவர்கள் கரி நூறினைத் தனி நின்று நொறுக்க வல்லார். இவர்கள் வேரியங் கள்ளருந்தி - எங்கும் வெம் மத யானைகள் போல் திரிகின்றனர். இவர்களைக் கவிஞர் ஆரிய வேல் மறவர்’ என்கின்றார். ஆரிய’ என்ற சொல் “உயர்ந்த என்ற பொருளில் ஆளப்பெற்றுள்ளது. ஆரியர் திராவிடர் - என்ற இக்காலத்தில் பரவியுள்ள கருத்துகளைப் பாரதி பாடினார் என்று கருதுவது இலக்கியத்தையே இகழ்வதாகும்.

32. ஷை 1.3 - 9.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/93&oldid=681328" இலிருந்து மீள்விக்கப்பட்டது