பக்கம்:பாரதீயம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலைகா டுடைமன் னர்-பல

மான்கொணர்ந்தார் புதுத்தேன் கொணர்ந்தார் கொலைகால் வாய்கொணர்ந்தார்-மலைக்

குதிரையும் பன்றியும் கொணர்ந்து தந்தார்; கலைமான் கொம்புகளும்-பெருங்

களிறுட்ைத் தந்தமும் கவரிகளும் விலையார் தோல்வகையும்-கொண்டு

மேலும்பொன் வைத்தங்கு வணங்கி நின்றார்.”

என்று காட்டுவர். மேலும், அவர்கள் புலித்தோல், யானைத்தோல், ஆட்டுத்தோல், பல கிறங்களையுடைய மயிருடைகள், விலை மதிக்க முடியாத பறவைகள், விலங்கினங்கள், சந்தனம், அகில் , ஏலம், கருப்பூரம், இலவங்கம், பாக்கு, முத்து மாலைகள், பன்னிறச் சேலை வகைகள், பட்டு வகைகள், ஆடுகள், ஆயிரமாயிரம் பசுக்கள், மாடுகள் பூட்டிய வண்டிகளில் பலவகைத் தானியங்கள், கரும்பு வகைகள், தயில வகைகள், மான்மதம், நெய்க்குடம், கள் வகைகள், குப்பாயம், சால்வைகள், போர்வைகள்; கம்பளங்கள்போன்ற பொருள்களையும் கொணர்ந்தனர். தென்திசைச் சாவக நாடு முதல் வடதிசைச் சீனம் வரையிலுமுள்ள நாடுகளிலிருந்து பல்வேறு வகைப்பொருள்கள் வந்து குவிந்தன. இதில் வேள்விக்கு வேண்டிய பல்வேறு பொருள்களும் அடங்கியிருத்தல் கண்டு கிங் தித்து மகிழத் தக்கது.

குதிரை வகைகள், யானைகள், ஒட்டைகள் இவை பல அரசர்கள் கொணர்ந்தமையை,

கழல்களும் கடகங்களும் மணிக்

கவசமும் மகுடமும் கணக்கிலவாம்: நிழல்நிறப் பரிபலவும்-செக் .

நிறத்தன பலவும்வெண்ணிறம்பலவும் தழல்கிறம் மேகநிறம்-விண்ணில்

சாரும் இந்திரவில்லை நேரும்நிறம் அழகிய கிளிவயிற்றின்-வண்ணம்

ஆர்ந்தன வாய்ப்பணி சேர்ந்தனவாய்.

கோற்றெனச் செல்வனவாப் -இவை

கடிதுகைத் திடுந்திறல் மறவரொடே

போற்றிய கையின ராய்ப்-பல

புரவலர் கொணர்ந்து, அவன்சபை புகுந்தார்.

36. பாச. 15 28.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/95&oldid=681330" இலிருந்து மீள்விக்கப்பட்டது