பக்கம்:பாரதீயம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 பாரதீயம்

சிற்ற வன்போர் யானை-மன்னர்

சேர்த்தவை பலபல மந்தையுண்டாம்;

ஆற்றல் மிலேச்சமன் னர்-தொலை

அரபியர் ஒட்டைகள் கொணர்ந்து தந்தார்.”

என்று வருணித்திடுவர். இன்னும் அவர்கள்,

தந்தத்தில் கட்டில்களும், - கல்ல

தக்கத்தின் பல்லக்கும், வாகனமும் தங்தத்தின் பிடிவா ளும்-அந்தத்

தந்தத்தி லேகிற்பத் தொழில்வகையும் தந்தத்தி லாதனமும்-பின்னும்

தமனிய மணிகளில் இவையனைத்தும், தந்தத்தைக் கணக்கிடவோ???

என்று தந்தப் பொருள்களைத் தந்ததையும் காட்டுவர். இங்குப் பாரதியார் இளங்கோவடிகள் காட்டிய பரிசில் பட்டியலை விட நீளமான பட்டியலைக் காட்டுவர். இன்று வெளிகாட்டுத் தலைவர்கள் கம்காடு வரும்போதும் நம் காட்டுத் தலைவர்கள் வெளிநாடுகள் செல்லும்போதும் பல சிறப்புப் பொருள்களைப் பெற்று வரும் மரபினை ஈண்டு காம் நினைக்கின்றோம்.

இறைவன் தமக்குப் புலன்களையும் நுண்ணிய அறிவையும் கொடுத்துள்ளான். இவற்றைத் தக்க முறையில் பயன்படுத்திக் கவிஞன் காட்டும் இயற்கைக் கோலங்களை அநுபவிப்பது கம் கடமை. இலக்கியங்களை துகரும் அநுபவம் பெற்றுவிட்டால் அறையிலிருந்துகொண்டே அனைத்தையும் நுகர்ந்து மகிழலாம். இரத்தினம் ஒர் உயர்ந்த பொருள்தான். அதனைத் தேர்ந்தெடுத்துப் பழகியவருக்கே அதன் பெருமை தெரியும். சாமானிய மனிதன் சாதிக் கமலத்திற்கும் இரங்கூன் கமலத்திற்குமுள்ள வேறுபாட்டை அறிய முடியாது. கவிதையில், காவியத்தில் சுவை புலப்படுவதும் இம்முறையில்தான் அதில் பழக்கம் அதிகமாகி அதுபவித்துச் சுவையை உணர்வது எளிதானதன்று. இலக்கியத்தைச் சுவைக்க வகையறியாமல் இலக்கிய இன்பத்தைப் புறக்கணிப்பவர்களைப் பற்றி வடமொழிக் கவிஞன் ஒருவன் கூறியுள்ளதைக் காட்டி இக் கட்டுரையைத் தலைக்கட்டுவோம்.

“ஒ இரத்தினமே! உன்னை ஒரு குரங்கு எடுத்தது. முகர்ந்து பார்த்தது : தன் வழக்கம்போல் முத்தமிட்டுப் பிறகு உன்னை

37. G. i.5 : 32-33.

3. • 5 : 37

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/96&oldid=681331" இலிருந்து மீள்விக்கப்பட்டது