பக்கம்:பாரதீயம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. சமுதாயப் பார்வை

பாரதியாரின் பாடல்களை மேலோட்டமாகக் கற்றாலேயே அவர் சமுதாயத்தின்மீது கொண்டிருந்த அக்கறை தெளிவாகப் புலனாகும். பாரதியார் தம் காலத்துப் பாரத மக்களின் நிலையை ‘நெஞ்சு பொறுக்குதிலையே’ என்ற கவிதையில் அற்புதமாக எடுத்துக் காட்டுகின்றார். அவர் காலத்து மக்களின் நிலையை கினைந்து,

என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம் ?

என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்.” என்று பாடுகின்றார். தீண்டாமையைப்பற்றிய பாடல்களே இல்லை. நாடு விடுதலை யடைந்த பிறகு இது தீவிரமாகக் கவனிக்க வேண்டிய பிரச்சினை என்று விட்டுவைத்தனர் போலும்.

இவர் காலத்திலேயே நம் நாடு’, ‘கம் மொழி’, ‘தமிழ்ச் சாதி” என்பன போன்ற எண்ணங்கள் முகிழ்த்துவிட்டன.

நாமிருக்கும் காடு

நமது என்ப தறிந்தோம்-இது நமக்கே உரிமையாம்

என்ப தறிந்தோம்-இந்தப் பூமியில் எவர்க்கும்இனி

அடிமை செய்யோம்-பரி பூரணனுக் கேயடிமை

செய்து வாழ்வோம்.” வாழிய செந்தமிழ் வாழ்ககற் றமிழர் : வாழிய பாரத மணித்திரு நாடு’ யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்

இனிதாவ தெங்குங் காணோம்.” என்பன போன்ற பாடற்பகுதிகளால் இதனை யறியலாம். இனி, பாரதியாரின் சமுதாயப் பார்வையைச் சில கோணங்களில் காண்போம்.

1. தே. கீ. 15. பாரத ஜனங்களின் தற்கால நிலைமை. 2. ை28. சுதந்திரத் தாகம்-1 3. டிை : 31. சுநந்திரப் பள்ளு-5 4. ை: 25. வாழிய செந்தமிழ்

5. ை: 22. தமிழ்-1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/98&oldid=681333" இலிருந்து மீள்விக்கப்பட்டது