பக்கம்:பாரதீயம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமுதாயப் பார்வை 83

க. தனி மனிதன் கடமை

தனி மனிதன் சமூகத்தில் ஒருவன் : குடும்பத்திலும் ஒருவன்.

தனி மனிதன் தன் கடமையைச் சரிவர மேற்கொண்டால் குடும்பம் சிறக்கும் : பல குடும்பங்கள் அடங்கிய சமூகம் சீர்படும் பல சமூகங்கள் அடங்கிய சமுதாயமும் சிறந்து திகழும். தனி மனிதனின் கடமைகளாக நான்கினைக் கூறுகின்றார் கவிஞர்.

கடமை யாவன தன்னைக் கட்டுதல்

பிறர்துயர் தீர்த்தல் பிறர்கலம் வேண்டுதல்

உலகெலாம் காக்கும் ஒருவனைப் போற்றுதல் யெனப்யடும்

இந்நான் கேயிப் பூமியில் எவர்க்கும்

கடமை யெனப்படும்.” என்ற கவிதைப் பகுதியில் இந்த நான்கினைக் கவிஞர் நிரல்படக் கூறுவதைக் காண்க.

‘தன்னைக் கட்டுதல்’ என்பது மனத்தைக் கட்டுதல். ஐம்பொறி

களை அடக்கி மனத்தைக் கட்டுதல் என்று ஞானியர் கூறும் பொருளில் அல்ல ஈண்டுக் குறிப்பிடப்பெறுவது. பாதரசமாய்ச் சஞ்சலப்பட்டுக்கொண்டே’ இருக்கும் மனத்தை, பல பொருள்களின் மீது சபலப்படுகின்ற மனத்தை அடக்கினால் போதும் என்பது பாரதி பாரின் கருத்து. மனம் சில சமயம் ஒரு பொருளைப்பற்றிக் கொண்டு ஊசலாடும் : அடுத்ததை கோக்கி அடுத்தடுத்து உலவும் : ‘விட்டுவிடென்று கூறினால் விடாது போய் அதன்மீது விழும். புதியனவற்றைக் கண்டால் புலனழிந்து அவற்றின்மீது வெறி கொண்டு வீழும். பிணத்தினை விரும்பும் காக்கை போல, அழுகுதல் சாதல் அஞ்சுதல் முதலிய இழிபொருள்களில் தன்னைப் பறி கொடுக்கும். இன்பத்தை நாடி எண்ணிலாப் பிழை செய்யும் என்றெல்லாம் மனத்தினைப் பெண்ணாக உருவகித்து மனத்தின் தன்மைகளை எடுத்துக் காட்டி,

பேயாய் உழலும், சிறுமணமே !

பேனாய் என் சொல் இன்றுமுதல் யோப் ஒன்றும் நாடாதே

நினது தலைவன் யானேகாண்ே

என்று மனத்தை கன்னெறிப்படுத்த விழைகின்றார் கவிஞர்.

6. தோ. பா., வி. நா. மா.-8. 7. தாயுமானவர் பாடல்-9. 9. வே. பா : 22. மனப்பெண். 8. டிை : மனத்திற்குக் கட்டளை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/99&oldid=681334" இலிருந்து மீள்விக்கப்பட்டது