பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி-புதிது.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ша: பண்பாட்டுத் தளத்தில் பாரதி அ. சீனிவாசன் ப்பதாகும். நமது வாழ்க்கை இன்பங்கள் அறத்தோடும், பொருளோடும் ணந்ததாகும். உயிர் இணைப்பு கொண்டதாகும். விடு - மோட்சம், இந்த உலகம் முழுமையாக விடுதலை பெற்று சகலருக்கும் சகல இன்பங்களும் வாழ்க்கை நலன்களும் பெறுவதாகும். இதில் தனி மனித விடுதலை மட்டுமல்லாமல் சமுதாய விடுதலையையும் வலியுறுத்துவதாகும். நமது ஆன்மீகம் வறட்டுத் தனமானதல்ல, வளம் மிக்கது. நமது பொருள் சேர்த்தல் குருட்டுத்தனமானதல்ல. அது அறத்தின் பாற்பட்டதாகும். ஆன்மீக வாழ்க்கையைப் பற்றி அதிகமாகக் கூறிவரும் அறிவுச் செல்வர்களும் தங்கள் வாழ்க்கையில் எல்லா இன்பங்களையும் வசதிகளையும் அனுபவிக்க முயன்றுள்ளார்கள். மற்றவர்களுக்கு அவ்வின்பங்கள் கிடைக்கவும் பாடுபட்டுள்ளார்கள். நமது வேதங்களும், இந்து தர்ம சாத்திரங்களும் வாழ்க்கையை வெறுக்கச் சொல்லவில்லை. வாழ்க்கையின் சகல இன்பங்களையும் முழுமையாக அனுபவித்து முடிவில் வீடு பெற வேண்டும். முழு விடுதலை பெற வேண்டும் என்று தான் குறிப்பிடுகின்றன. தர்மம் (அறம்). அர்த்தம் (பொருள்), காமம் (இன்பம்), மோட்சம் (வீடு) என்னும் புருடாதர்த்தங்கள் (பயணிடுகள்) மனித வாழ்க்கை அனைத்து வழிகளிலும் செழிப்புறவே வழி வகுத்துக் கூறுகின்றன. இவையே மனித வாழ்க்கையின் அடிப்படையாகும். நல்ல வாழ்க்கை அமைவதற்கு அவ்வாழ்க்கைக்குத் தேவையான பொருள்கள் அனைத்தும் வேண்டும். சமுதாய வாழ்க்கை மேம்பாடு அடைய அபரிமிதமான அளவில் பொருள்கள் செய்து குவிக்கப்பட வேண்டும். அதற்கான தொழில்கள் தீதில்லாதவைகளாக, அறவழியிலான தொழில்களாக இருக்க வேண்டும் என்பதை நமது சாத்திரங்கள் வலியுறுத்திக் கூறுகின்றன. "செய்யும் தொழில் உன் தொழிலே காண், சீர் பெற்றிட நீ அருள்வாய்" என்று பாரதி விநாயகரை வேண்டுகிறார். இன்னும் 'அச்சம் தீரும், அமுதம் விளையும், வித்தை வளரும்' என்றும், 'ஆக்கத்திலே, தொழில் ஊக்கத்திலே' என்றும், 'உலகத் தொழில் அனைத்தும் உவந்து செய்வோம்" என்றும், "இதம் தரு தொழில்கள் செய்து" எனவும் "திறமை கொண்ட தீமையற்ற தொழில் புரிந்து யாவரும் தேர்ந்த கல்வி ஞானம் எய்தி வாழ்வம் இந்த நாட்டிலே' என்றும் "உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்வோம்' என்றும், 'தருவாய் தொழிலும் பயனும்' என்றும். 'சக்தி செய்யும் தொழில்களை எண்ணு' என்றும் "தொழில் பண்ணப் பெரு நிதியம் வேண்டும், அதில் பல்லோர் துணை புரிதல் வேண்டும்" என்றும் "கூடும் திரவியத்தின் குவைகள் - திறல் கொள்ளும் கோடி வகைத் தொழில்கள் - இவை நாடு படிக்கும் வினை செய்து இந்த நாட்டோர் கீர்த்தி எங்கும் ஓங்க" என்றும், "பாயும் ஆயிரம் சக்திகளாகியே பாரில் உள்ள தொழில்கள் இயற்றுவை" என்றும் "ஆடுகளும் மாடுகளும் அழகுடைய பரியும் வீடுகளும் நெடு நிலமும் விரைவினிலே தருவாய் நாடு மணிச் செல்வம் எல்லாம் நன்கருள்வாய் பொருளே பெருங்களியே திருவே" எனவும் "வீரர் தம் தோளினிலும் - உடல் வெயர்த்திட உழைப்பார் தொழில்களிலும் பாரதி சிரத்தினிலும் - ஒளி பரவிட வீற்றிருந்தருளாய்" என்றும், 'வஞ்ச மற்ற தொழில் புரிந்து உண்டு வாழும் மாந்தர் குல தெய்மாவாள்' என்றும் "செல்வங்கள் பொங்கி வரும் நல்ல தெள்ளறி வெய்தி நலம் பல சார்ந்திடும்'