பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி-புதிது.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதப் பண்பாட்டுத் தளத்தில் பாரதி அ. சீனிவாசன் கூறப்படுகின்றன. இப்பருவத்தில் மாணவ மாணவியர் சகல நல்ல ஒழுக்கங்களையும் கற்றுக் கொள்கிறார்கள். எளிமையான வாழ்க்கை சுத்தமான உடம்பு. தூய்மையான மனப்பக்குவம், எதிர்காலத்தில் வரக்கூடிய எத்தகைய கஷ்ட நஷ்டங்களையும், சுக துக்கங்களையும் இன்ப துன்பங்களையும் சவால்களையும் திறனையும் பக்குவத்தையும் பெறுதல், சக மாணவ மாணவிகளுடன் நல்ல நட்புறவு, நல்லுறவு, சகோதர உறவு, நாட்டுப் பற்று வளர்த்தல், ஆழ்ந்த கவனத்துடன் சகல கலைகளையும் கற்று கொள்ளுதல், உடற்பயிற்சி செய்தல், வாழ்க்கையில் நல்ல சீரிய கட்டுப்பாடுகளை வளர்த்தல், வாழ்க்கையில் சொந்த வாழ்க்கையிலும் சரி, சமுதாய வாழ்க்கையிலும் சரி, எதிர்காலத்தில் ஏற்படும் எந்த பிரச்சினையையும் சமாளிக்கும் திறனையும் ஆற்றலையும் மன உறுதியையும் பக்குவத்தையும் பெறுதல், வீட்டிற்கும், நாட்டிற்கும் பயனுள்ள வகையில் பக்குவமடைதல் முதலியன வலியுறுத்தப் படுகின்றன. இன்றைய நிலையில் இந்தக் கடமைகள் ஆண் பெண் இருபாலாருக்கும் அதிகமாகப் பொருந்தும். மாணவப் பருவம் இளம் தளிர்ப் பருவமாகும். இந்தப் பருவத்தில் எல்லாவிதமான நற்பண்புகளும், மறு பக்கம் தீய பண்புகளும் சுலபமாகத் தீண்டக் கூடும். சாதாரணமாக, சாகுபடி முறையில் விதை போட்டு அல்லது நாற்று நட்டு முடிந்துவுடன் அதே ஈரத்தில் பயிரும் வளருகிறது. அத்துடன் சேர்ந்து களையும் வளருகிறது. காலத்தில் களை எடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும். ஒரு களை, இரண்டு களை, மூன்று. நான்கு கூட் பயிருக்கு ஏற்றவாறு தேவைப்படலாம், பருத்திக்குப் பத்துகளை என்று கூட முன்பு சொல்வார்கள். களையெடுக்கக் களையெடுக்கப் பயிர் வளர்ந்து விடும். பயிர் நன்கு வளர்ச்சியடைந்த பின்னர் தோன்றும் களை தானாகவே குறுகிவிடும் அல்லது அமுங்கிவிடும். அது வளர்ச்சியடைந்த பயிரை பாதிக்க வைக்க முடியாமல் போய்விடும். சமாளிக்கும் பாரதி காலத்தில் நாடு அடிமைப்பட்டு கிடந்தது. மாணவப் பருவத்திலேயே விடுதலை உணர்வையும் ஊட்ட வேண்டியிருந்தது. இன்று நாடு வெகு வேகமாக முன்னேற்றம் காண வேண்டும். சகல துறைகளிலும் உலகிற்கு வழிகாட்டியாக முன்னணியில் நமது மாணவர்கள் திகழ வேண்டும். வையத்தலைமை கொள் என்று பாரதி புதிய ஆத்திசூடியில் கூறுகிறார். அந்த நிலைக்கு பாரதம் உயர வேண்டும். எனவே இன்றைய மாணவர்களுக்கு தேசபக்த உணர்வு முதலிடம் பெற வேண்டும். தேசப் பற்றும் நாட்டை உயர்த்த வேண்டும், மேம்படுத்த வேண்டும் என்னும் உணர்வையும் ஊட்ட வேண்டியது அவசியமாகிறது. நாட்டிற்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டிய மகத்தான கடமை மாணவப் பருவத்தின் முதலாவது கடமையாகும். அடுத்தது கிரகஸ்த ஆசிரமம். அது இல்லறமாகும். இல்லறம் என்பது நல்லறமாகும் என்பது தமிழ்ச் சொல், பொருள் சேர்த்தல், குடும்பத்தைப் பராமரித்தல், குழந்தைகளைப் பராமரித்தல், அவர்களுக்குக் கல்வி கொடுத்தல், முதியோர்களைப் பாதுகாத்தல், விருத்தினரைப் பேணுதல், உற்றார், உறவினர்களுடன் நல்லுறவுகளை வைத்துக் கொள்ளுதல், வளர்த்துக் கொள்ளுதல், சமுதாய நலன்களைப் பேணுதல், ஊர்க் காரியங்களை நடத்துதல், கோவில் குளங்களைப் பராமரித்தல், நாட்டு நலன்களைப் பேணுதல், நாட்டு நலன்களைக் காத்தல், அவைகளுக்கு உதவி செய்தல், துணையாக இருத்தல் முதலிய சிறப்புக் கடமைகள் தருமமாக வலியுறுத்திக் கூறப்படுகின்றன. கிரகஸ்தம் (இல்லறம்) என்பது குடும்ப வாழ்க்கையை ஆதாரமாகக் கொண்டது. இந்து சமுதாயத்தில் குட்ம்ப அமைப்பிற்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. பாரத சமுதாயத்தில் குடும்ப அமைப்பு ஒரு தனித் தன்மை கொண்டதாகும். தனிமனிதன் குழந்தை முதல் மூத்தோர் வரை குடும்ப அமைப்பிற்குட் பட்டவர்கள், சமுதாயத்தின் அடிப்படை அங்கம் நமது நாட்டில் குடும்பமேயாகும். அறத்தை நிலைநிறுத்தலும், பொருளைப் பெருக்கிப் பராமரித்தலும், இன்பத்தை உறுதிப் படுத்தலும் வீடுபேற்றிற்கு வழி வகுத்தலும் குடும்பத்தின் தொடக்க நிலை செயல்பாடாகும். பல குடும்பங்கள் சேர்ந்து சமுதாயமாகவும், ஊராகவும் நாடாகவும் விரிவுபட்டு நிர்வாக அமைப்புகள் உருவாகி செயல் படுகின்றன. குடும்ப அமைப்புகளே பொருள் உற்பத்தி முறை அடிப்படை அங்கமாகவும், அத்துடன் சேர்ந்த சேமிப்பு பராமரிப்பு, வினியோகம், நுகர்வு ஆகியவற்றின் அடிப்படை அங்கமாகவும் அமைந்திருக்கிறது. நமது குடும்ப அமைப்பு கட்டுக் கோப்பானது, அறநெறி முறையில் அமைந்தது. எத்தனை இன்னல்கள், இடையூறுகள், தடைகள் ஏற்பட்டாலும் குடும்ப அமைப்பு தொடர்கிறது. ஒரு குடும்ப அமைப்பில் கணவனும் மனைவியும் மையமானவர்கள். அவர்களுக்கு பரஸ்பரம் ஆற்றவேண்டிய கடமைகள், பெற்றோர் மூத்தோர் பால் ஆற்றவேண்டிய கடமைகள், உடன் பிறந்தோர் பால் ஆற்றவேண்டிய கடமைகள், குழந்தைகள் பால் ஆற்ற வேண்டிய கடமைகள் மற்றும் சமுதாயத்தின் பாலும், ஊரின் பாலும், நாட்டின் பாலும் ஆற்ற வேண்டிய கடமைகளே இல்லறம் (இல்லற தர்மம்) எனப்படுகிறது. வானப் பிரஸ்த ஆஸ்ரமத்திற்கு அதிகமான முக்கியத்துவம் கொடுத்து இந்து சாத்திரங்கள் குறிப்பிடுகின்றன. இந்த ஆஸ்ரமத்தில் மனிதன் எல்லாவிதமான அனுபவங்களுடையவனாக இருக்கிறான். முதிர்ச்சி பெற்றவனாக இருக்கிறான். குடும்பப் பொறுப்புகளை அடுத்த