பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி-புதிது.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாதப் பண்பாட்டுத்தளத்தில் பாரதி-அ. சீனிவாசன் தலைமுறையிலுள்ள கிருகஸ்தனிடம் ஒப்படைத்து விட்டு விடுதலை பெற்றவனாக இருக்கிறான். அதே சமயத்தில் தனது அனுபவங்களைக் கொண்டு அடுத்த தலைமுறையில் உள்ள கிரகஸ்தனுக்குத் தேவையான ஆலோசனைகளைச் சொல்லி உதவி செய்கிறான். பொதுக் காரியங்களில் ஈடுபட்டு, சமுதாயத்திற்கும். ஊருக்கும், நாட்டிற்கும் வேண்டிய நல்ல பல சேவைகளைச் செய்கிறான். பொதுத்தொண்டுகளில் ஈடுபடுகிறான். இவ்வாறு தங்கள் அனுபவத்தையும், அறிவையும் சமுதாயத்திற்குப் பயன் படுத்தும் அரிய மரியாதைக்குரிய பருவமாகும். சந்நியாசம் என்பது துறவு நிலையாகும். எந்தவிதமான பந்த பாசங்களும், கவலையும், இன்ப துன்பங்களுமின்றி சமுதாய நலனுக்காகவும் நாட்டு நலனுக்காகவும் இறைவனை வேண்டி நிற்பதாகும். துறவு நிலை என்பது மக்களுக்குத் தொண்டு செய்வதற்காக. இளமையில் துறவுநிலை மேற்கொள்வது புத்த சமண சம்பிரதாயங்களின் பகுதிகளாக பாரத நாட்டில் ஏற்பட்டது. மக்களுக்கு கல்வித்துறையில், வைத்தியத்துறையில் மருத்துவத்துறையில், சுகாதாரத்துறையில், சமயத்துறையில் தொண்டாற்றுவதற்காக குடும்பக் கவலைகளையும் பந்தங்களையும் விடுத்து தங்களை அர்ப்பணித்துக் கொள்வதாகும். அதே போல, சைவ, வைணவ சம்பிரதாயங்களிலும் மக்கள் சேவைக்காகவும், சமயப் பணிகளுக்காகவும் மடங்களும், இதர அமைப்புகளும் உருவாயின. அதன் தலைமையில் துறவிகள் நின்று தங்களை அர்ப்பணித்துக் கொண்டனர். இவ்வாறு பாரதத்தில் சைவ மடங்கள், வைணவ மடங்கள், சங்கர மடங்கள், இராமகிருஷ்ண ஆஸ்ரமங்கள் (மடங்கள்), இராமலிங்க சுவாமிகளின் சீடர்களும் அமைப்புகளை உருவாக்கி மக்கள் சேவையில் ஈடுபடுகின்றனர். இவையெல்லாம் புனிதமானவை. ஐரோப்பிய நாடுகளில் கூட கத்தோலிக்க மத நிறுவனங்கள் மூலம் இறைபணிகளும், கல்விப் பணிகளும் இதர பொதுப் பணிகளும் செய்து வருகிறார்கள். அவைகளின் கிளைகள் இந்திய நாட்டிலும், செயல் படுகின்றன. ஆனால் அவர்களுடைய இறைபணிகளின் பகுதியாக மத மாற்றப் பணிகளிலும் ஈடுபடுகிறார்கள். அவை கொடுமையானதும் ஆக்கிரமிப்புத் தன்மை கொண்டதுமாகும். இந்து சாத்திரங்கள் குறிப்பிடும் நான்காவது ஆஸ்ரமமான சந்நியாசம் மனிதன் முழுமை பெற்று சமுதாய நலனுக்காக ஆண்டவனையும் இஷ்ட தெய்வங்களையும் வேண்டுவதாகும். தமிழ் மொழியில் உள்ள அற நூல்களும் இந்த ஆஸ்ரம தருமங்களை 13 விரித்துக் கூறுகின்றன. வள்ளுவப் பெருந்தகை தனது முப்பால் நூலில் மிகவும் விரிவாகவும் துல்லியமாகவும் அடிப்படை அறங்களைப் பற்றி மிகவும் சிறப்பாகவே எடுத்துக் கூறியுள்ளார். இந்த நான்கு ஆசிரம தர்மங்கள் இந்து வாழ்க்கை நெறிமுறையின் அடிப்படையான தர்மங்களாகும். அறம், பொருள். இன்பம், வீடு என்னும் புருஷார்த்தங்களின் அடிப்படையிலேயே நான்கு பிரிவினை சிறப்புக் கடமைகள் தனித்தனி தர்மங்கள் வகுக்கப்பட்டு விவரிக்கப் படுகின்றன. இவை மிகவும் துல்லியமாக வகுக்கப்பட்ட சமுக நெறிமுறைகளாகும். கல்வி, தொழில், செல்வப் பெருக்கம், சீரிய செழிப்பான வாழ்க்கை முறை, அறவாழ்க்கை, மனித குலம் தலைமுறை தலைமுறையாக வாழையடி வாழையாக வளம் பெற்று சகல நலன்களும் சக்தியும், கல்வியும், செல்வமும் பெற்று வாழ்வாங்கு வாழ்தல், மனிதன் தனது பிறப்பின் கடமைகளை முழுமையாக நிறைவேற்றி இறுதியில் முக்தி பெறுதல், வீடு பேறு ஆகியவை நெறிமுறைப்படுத்தப் பட்டிருக்கின்றன. இங்கு சீரும் சிறப்புமாக வாழ்க்கையை அமைத்துக் கொண்டு அனுபவித்தல் என்பது மிக முக்கியமானதாகும். எனவே இந்து தர்மம் என்பது அடிப்படையில் வாழ்வியல், உலகியல், அனைத்து சமய சமரசம், அறவழியில் அனைத்து உறவுகளையும் வளர்த்தல், அறிவியல் மற்றும் சமுதாய வளர்ச்சி ஆகியவைகளை ஆதாரமாகக் கொண்டு அறிவியல், பொருளியல், சீரான குடும்ப வாழ்க்கை ஆகியவைகளை அமைத்துக் கொள்வதாகிறது. இக்கருத்துக்களை பாரதி தனது கவிதா மண்டலம் முழுவதிலும் சுடர் விட்டுப் பிரகாசிக்கச் செய்கிறார். பாரதி நாட்டின் சிறப்பையும் செல்வச்செழிப்பையும் பற்றிக் குறிப்பிடும் போது "கன்னலும் தேனும் கனியும் இன்பாலும் கதலியும் செந் நெலும் நல்கும் எக்காலும் உன்னத நாடெங்கள் நாடே' என்று பாடுகிறார், மேலும், "நாட்டைத் துயர் இன்றி நன்கமைத்திடுவதும் உளமெனும் நாட்டை ஒரு பிழையின்றி ஆள்வதும் பேரொளி ஞாயிறேயனைய சுடர் தரு மதி யொரு துயரின்றி வாழ்தலும் நோக்கமாக் கொண்டு நின்பதம் நோக்கினேன்"