பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி-புதிது.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முப்பண்பட்டுக்களுக்கில்பகுதி-அ_ன் கொடுங்கோன்மையும், கொள்ளையும் நிறைந்திருந்தது. "பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ நாங்கள் சாகவோ" என்று அன்னிய ஆட்சியின் கொள்ளையைப் பற்றி பாரதி தனது பாடலில் குறிப்பிடுகிறார். அந்த நிலை மாற வேண்டும். பாரதி பாரத நாட்டின் நீண்ட பாரம்பரியங்களையும், மரபுகளையும் நினைவு கூர்ந்து பேசுகிறார். "வேத வானில் விளங்கி அறம் செய்மின் சாதல் நேரினும் சத்தியம் பூணு மின் தீத கற்றுமின் என்று தொடங்கி "ஒப்பிலாத உயர்வோடு கல்வியும் ரய்ப்பில் வீரமும் இப்புவியாட்சியும் தப்பிலாத தர்மமும் கொண்டு யாம் ఆుUGణా நின் அடிபணிந்துய்வமால்" "மற்று நீயிந்த வாழ்வு மறுப்பை யேல் சற்று நேரத்துள் எம்முயிர் சாய்த்தருள் o கொற்றவா! நின் குவலயம் மீதினில் வெற்று வாழ்க்கை விரும்பி அழிகிலோம்" "நின்றன் மரபில் வந்து நீ சராய்ப் பொன்றல் வேண்டிலம் பொற் கழல் ஆணை காண் இன்று இங்கு எம்மை அதம் புரி இல்லையேல் வென்றியும் புகழும் தரல் வேண்டுமே!" ான்று கண்ணன் மரபிலே வந்த பாரதி கண்ணனை வேண்டிப்பாடுகிறார். 1H குல தர்மம் இந்து பண்பாட்டுத் தளத்தில் ஒன்றாக சாதி அமைப்பு இன்று இந்திய சமுதாயத்தில் நிலை கொண்டிருக்கிறது. சாதி அமைப்பு:இந்திய சமுதாயத்தில் தோன்றி வளர்ந்து நிலைபெற்ற வரலாறு பற்றி பல ஆராய்ச்சிகள் நடை பெற்றுள்ளன. எல்லா ஆய்வுகளும் இந்திய சமுதாயத்தின் பன்முகத்தன்மைகளையும் முன்வைத்துப் பேசியிருக்கின்றன. இந்து தர்ம சாத்திரங்கள் பலவும் நான்கு வர்ணங்களைப் பற்றியும் அவைகளின் தனி தர்மங்கள் பற்றியும் விவரித்துக் கூறுகின்றன. அவைகளைக் குல தர்மங்கள் என்று விவரித்துக் கூறுகின்றன. பாரத நாட்டின் எல்லா பகுதிகளிலும் சாதி அமைப்புகள் உள்ளன. அவையெல்லாமே பல மாதிரியாக இருக்கின்றன. அவையெல்லாமே மனு வழியில் அமைந்திருப்பதாகத் தெரியவில்லை. அவை ஆராய்ச்சிக்குரியன. சாதி அமைப்புகளும் அவைகளின் கடமைகளும் செயல்பாடுகளும் ஒரு பக்கம் இருக்க, அதில் வேறுபாடுகளும், பாகுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் கற்பிக்கப்பட்டிருப்பது கொடுமையாகும். இந்தப் பாகுபாடுகள் முதலியன முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டியவை. இந்தப் பாகுபாடுகள் முதலியன என்று தோன்றினவோ, அன்று முதலே அவைகளை எதிர்த்துத் தொடர்ச்சியானபோராட்டங்களும் நடைபெற்றுள்ளன என்பதையும் நாம் காண வேண்டும். வேதங்கள் நான்கும் முதன்முதலில் தோன்றி தொகுக்கப்பட்ட சாத்திரங்களாகும். அவ்வேதங்களில் நான்கு வர்ணங்களைப் பற்றியோ குலங்களைப் பற்றியோ குல தர்மங்களைப் பற்றியோ குறிப்புகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. பின்னர் வந்த உபநிடதங்களில் குலங்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. அதன் பின்னர் வந்துள்ள ஸ்மிருதிகள் குலங்களைப் பற்றியும் குல தர்மங்களைப் பற்றியும் குறிப்பிட்டுக் கூறுகின்றன. மனு ஸ்மிருதிதான் வர்ணங்கள், குலங்கள், குலதர்மங்கள் பற்றி கட்டுக் கோப்பான கருத்துகளையும் விதிமுறைகளையும் வகுத்துக் கூறியுள்ளது. மனுக்களிலும் அப்பெயர்களில் பலர் வந்துள்ளார்கள் என்றும் அவர்கள் பலரும் வேறுபட்ட கருத்துகளையும் கூறியுள்ளதாகவும் தெரிகிறது. தமிழகத்தில் சங்க இலக்கியங்கள் மிகப் பழமையானவை. அவற்றில் நாட்டை நான்கு வகையாகப் பிரித்தும், அந்த நால்வகை மக்களையும் அவர்களுடைய தொழில் மற்றும் பழக்க வழக்கங்களையும் பண்புகளையும் குறிப்பிட்டுள்ளார்கள். அவைகளில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நான்காகும். பின்னர் அதைத் தொடர்ந்து பாலை என்னும் ஐந்தாவது பிரிவும் தோன்றியிருக்கின்றது.