பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி-புதிது.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதப் பண்பாட்டுத் தளத்தில் பாரதி று. சீனிவாசன் குலங்களின் தோற்றங்கள் வளர்ச்சிகள் பற்றிய ஆராய்ச்சிகள் பல வகையாக இருப்பினும், பிறப்பின் அடிப்படையில் எவ்வாறு குலங்கள் (சாதிகள்) நிலை கொண்டன? இந்தக் குலங்களுக்கிடையில் எவ்வாறு பாகுபாடுகளும், வேறுபாடுகளும் தோற்றுவிக்கப் பட்டன என்பதும் மேலும் விரிவான ஆய்வுக் குரியனவாகும். இந்த சாதிப் பாகுபாடுகளால் பாரத சமுதாயத்திற்கு ஏற்பட்ட தீங்குகளும் கோரமான கொடுமைகளும் கொஞ்சமல்ல. பாரதநாட்டின் தலைசிறந்த பேரிலக்கியங்களில் ஒரு பிரிவு. இதிகாசங்கள். அந்த இதிகாசங்கள் இரண்டு. அவை இராமாயணமும், மகாபாரதமுமாகும். அவையிரண்டும் பாரத நாட்டின் இரண்டு கண்கள். இந்த இரு இதிகாசங்களிலும் சாதிப் பிரிவுகள் பற்றியும், அதிலுள்ள முரண்பாடுகள், மோதல்கள் பற்றியும், சாதி ஒற்றுமை பற்றியும் சமத்துவம் பற்றியும் பல செய்திகள் கிடைக்கின்றன. அந்தணர் குலத்தினருக்கும் அரச குலத்தினர்களுக்கும் இடையிலான மோதலாக வசிட்டர் - விஸ்வாமித்திரர் மோதல் தென்படுகிறது. பரசுராமன் என்னும் பிராமணன் மிகப்பெரியமேதை. நான்கு வேதங்களையும் மற்றும் உப வேதங்களையும் நன்கு கற்றறிந்தவர். கல்வியில், அறிவாற்றலில் அவருக்கு ஈடு இணையே இல்லை. ஆயினும் அவருக்கும் அகம்பாவம் நிறைந்த சில அரசகுலத்தினருக்கும் கடுமையான போர்களும், சண்டைகளும் நிகழ்ந்திருக்கின்றன. அவர் தான் கற்றிருந்த அறிந்திருந்த அபாரமான கல்வி அறிவை இதர ஞானவித்தைகளை பிராமண குலத்தில் பிறந்தவர்களுக்கு மட்டுமே கற்றுக் கொடுத்ததாகவும் மற்றவர்களுக்குப் பாகுபாடு காட்டி மறுத்தாகவும் பண்டைய வரலாற்றுக் கதைகள் கூறுகின்றன. அந்தப் பரசுராமனுடைய ஆற்றல், தவவலிமை அனைத்தும் கடைசியில் இராமனிடத்தில் சென்று விட்டதாகவும், இராமாயணம் கூறுகிறது. இராமன் அரச குலத்தில் பிறந்தவன். திருமாலின் அவதாரம் இந்த இராமன் குகனையும், சுக்கிரீவனையும், வீடணனையும் குல வேறுபாடுகள் காணாமல் சகோதரர்களாகவும் ஏற்றுக் கொண்டதைக் கதையின் வாயிலாக அறிகிறோம். மகாபாரதத்தில் வரும் துரோணாச்சாரியார் மிகப்பெரிய கல்விமான். சகல வேதங்களையும், வித்தைகளையும் கற்றவர், அறிந்தவர். கல்வி அறிவில், அறிவின் ஆற்றலில் அக்காலத்தில் யாரும் அவருக்கு ஈடாக, இணையாக இருக்கவில்லை.இந்ததுரோணாச்சாரியார்பிராமணர்கள், சத்திரியர்கள் ஆகிய இரு குலங்களைச் சேர்தவர்களைத் தவிர மற்றவர்களைச் சீடர்களாக ஏற்றுக் கொள்வதில்லை என்பதைக் கதைக் குறிப்பு கூறுகிறது. இத்தகைய குலப் பாகுபாடுகள், வேறுபாடுகள் பற்றிய பல கருத்துகளையும் கருத்துமோதல்களையும் பழைய சாத்திரங்கள் பலவற்றிலும் {I} குறிப்பாக இதிகாசங்களிலும் புராணக் கதைகளிலும் காண்கிறோம். இத்தகைய சாதிப் பாகுபாடுகளையும், வேறுபாடுகளையும் எதிர்த்து புத்தமும் சமணமும் சர்வஜன சமத்துவக் கருத்துகளை முன்வைத்து வெற்றி கண்டிருக்கிறது. இருப்பினும் பின்னர் ஏற்பட்ட வரலாற்று நிகழ்ச்சிகள், மீண்டும் சாதிப் பாகுபாடுகளும், வேறுபாடுகளும் இந்திய சமுதாயத்தில் நிலைபெற்றிருக்கின்றன என்பதையே காட்டுகின்றன. இந்தச் சாதி பாகுபாடுகளும், வேறுபாடுகளும், கொடுமைகளும் இந்திய சமுதாயத்தின் ஒற்றுமையை மிகப்பெரிய அளவில் பாதித்திருக்கிறது. பகவத்கீதையில் குலங்களைப் பற்றி, வர்ணங்களைப் பற்றிக் குறிப்புகள் உள்ளன. ஆனால் (சாதிகள்) வர்ணங்கள் பிறப்பால் ஏற்பட்டதாகக் கீதை கூறவில்ல்ை. குணத்தாலும் செய்கையாலும் நான்கு வர்ணங்களைப் படைத்ததாகவே பகவான் கூறுகிறார். "குணத்துக்கும் செய்கைக்கும் தக்கபடி நான் நான்கு வர்ணங்களைச் சமைத்தேன்" (கீதை 4-13) எனவும் "பிராமணர், சத்திரியர், வைசியர், குத்திரர் இவர்களுடைய தொழில்கள் அவரவரின் இயல்பில் விளையும் குணங்களின் படிவகுப்புற்றனவாம்" (கீதை 18-51) என்றும் கீதை குறிப்பிடுகிறது. எந்த இடத்திலும் பிறப்பினால் குலங்கள் ஏற்பட்டதாக சுருதிகள் கூறவில்லை. கீதையும் குறிப்பிடவில்லை. இதை நன்கு அறிந்திருந்த மகாகவி பாரதி சாதிப் பாகுபாடுகளையும், வேறுபாடுகளையும் மிகவும் கடுமையாகக் கண்டித்துப் பல இடங்களிலும் தனது கவிதைகளில் குறிப்பிடுகிறார். "நாலு குலங்கள் அமைத்தான்-அதை நாசமுறப் புரிந்தனர் மூட மனிதர் சீலம் அறிவுதருமம் - இவை சிறந்தவர் குலத்தினில் சிறந்தவராம் மேலவர் கீழவர் என்றே - வெற்மு வேடத்திற் பிறப்பினில் விதிப்பனவாம் போலிச் சுவடியை யெல்லாம் - இன்று பொசுக்கி விட்டால் எவர்க்கும் நன்மையுண்டாம்" என்று பாரதி "கண்ணன் என் தந்தை' என்னும் பாடலில் மிகவும் தெளிவாகக் குறிப்பிடுகிறார். இன்னும், "சாத்திரங்கள் பல தேடினேன்-அங்கு