பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி-புதிது.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பங்ாட்டுத் தளத்தில் பாரதி-அ.சீனிவாசன் שימויי சங்கையில்லாதன சங்கையாம் - பழங் கோத்திரங்கள் சொல்லும் மூடர் தம் - பொய்மைக் கூடையில் உண்மை கிடைக்குமோ?" ான்று "கண்ணன்- எனது சற்குரு" என்னும் கவிதையில் குறிப்பிடுகிறார். நமது நாட்டில், வேறு எந்த ஒரு நாட்டிலும் இல்லாத ஒரு சாதி அமைப்பு முறை ஏற்பட்டிருப்பதும் அது நமது மூல இலக்கியங்களுக்கும். சாந்திரங்களுக்கும் மாறாக பிறப்பின் அடிப்படையில் நிறுவப்பட்டு நிலை பெற்றிருப்பதும் அந்த சாதி அமைப்பு மூலம், சாதி வேறுபாடுகளும், பாகுபாடுகளும், கொடுமைகளும், சமுதாயப் பழக்கத்தில் கொண்டு பரப்பட்டதும் இந்த நாட்டின் சமுதாய வளர்ச்சியின் வரலாற்றில் ஒரு மிக முக்கியமான தீர்க்கப்பட வேண்டிய சமூக நீதி பற்றிய பிரச்சினையாகும். மறுபக்கத்தில் இந்த சாதிப்பாகுபாடுகள் வேறுபாடுகள், கொடுமைகளை இந்திய சமுதாயம் அடிபணிந்து ஏற்றுக் கொண்டதுமில்லை. இந்தக் கொடுமைகள் என்று தோன்றினவோ அன்று முதல் இவைகளுக்கு எதிரான தொடர்ச்சியான போராட்டங்களும், அவை தொடர்பான கருத்துகளும், நிகழ்ச்சிகளும் நமது பண்பாட்டுத்தளத்தில் ஒரு முக்கிய பற்றுக்கோடாகும். சாதிக் கொடுமைகளை எதிர்த்துத் தொடர்ச்சியாக நடைபெற்றுள்ள போராட்டங்களின் வரலாற்று விவரங்களையும், அனுபவங்களையும் தெளிவாக ஆய்வு செய்து அவைகளின் படிப்பினைகளைக் கைக் கொள்ள வேண்டியது மிக முக்கியமான பணியாகும். வேதங்கள், உபநிடதங்கள். சுருதிகள், ஸ்மிருதிகள், புராணங்கள், இதிகாசங்கள் முதலிய பண்டைய சாத்திரங்களில் கூறப்பட்டுள்ள கருத்துகள் நிகழ்ச்சிகள், புத்தம், சமணம் உருவாக்கிய சங்கம், ஜாதகம், அறப்பள்ளிகள், ஜீவகாருண்யம், சர்வஜன சமத்துவக்கொள்கை, இடைக்காலக் காப்பியங்கள் வெளியிட்ட கருத்துகள், நிகழ்ச்சிகள், குல தர்மங்களைப் பற்றி பகவத் கீதையில் பகவான் கூறியுள்ள அடிப்படைக் கருத்துகள், பின்னர் தோன்றிய கீதையின் பாஷ்யங்கள். தமிழகத்தில் வெளிப்பட்டபெருமைமிக்க பண்டைய சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், அறநூல்கள், பகவான் இராமானுஜர் நடத்திய பேரியக்கம்.பக்தி இயக்கங்கள். அவர்களுடைய இனிய இசை மிக்க பாடல்கள். திருவிழாக்கள் அவை அனைத்துப் பகுதி மக்களையும் ஈடுபடுத்திய சமுதாய நீரோட்டப் பெரு வெள்ளங்கள். இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ சமயக் கருத்துகளின் தாக்கங்கள், ஐரோப்பிய மறுமலர்ச்சி இயக்கங்களின் தலையீடுகள் நமது நாட்டில் சற்று முந்திய நூற்றாண்டுகளில் தோன்றி வளர்ந்த சமூக சீர்திருத்த இயக்கங்கள். தேசீய விடுதலை இயக்கம் அடிப்படை மக்களின் சமூக, பொருளாதார, அரசியல் கிளர்ச்சிகள் ஆகியவற்றின் தொடர்ச்சியாக பாரதி தனது புரட்சிகர ஜனநாயகக் கருத்துகளை, கருத்தாழம் மிக்க கவிதைகளை மிகவும் தெளிவாகக் கூறியிருப்பதைக் காணலாம். பாரதி தனது நாட்டுப் பாடல்களில் "சாதி மதங்களைப் பாரோம் - உயர் ஜன்மம் இத்தேசத்தில் எய்தினராயின் வேதியராயினும் ஒன்றே - இன்றி வேறு குலத்தினராயினும் ஒன்றே" எனவும் "ஒன்று பட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே" என்று அனைத்து மக்களின் ஒற்றுமையை வலியுறுத்தியும், "ஜாதி நூறு சொல்லுவாய் போபோ போ" என்றும், "பறையருக்கும் இங்கு தீயர் புலையருக்கும் விடுதலை பரவரோடு குரவருக்கும் மறவருக்கும் விடுதலை திறமை கொண்ட தீமையற்ற தொழில் புரிந்து யாவரும் தேர்ந்த கல்வி ஞான மெய்தி வாழ்வம் இந்த நாட்டிலே" என்றும், "எல்லோரும் ஒன்றென்னும் காலம் வந்ததே -பொய்யும் ஏமாற்றும் தொலைகின்ற காலம் வந்ததே-இனி நல்லோர் பெரியர் என்னும் காலம் வந்ததே-கெட்ட