பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி-புதிது.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதப் பண்பாட்டுத் தளத்தில் பாரதி -அ. சீனிவாசன் குலங்கள் ஆயின, அது சாதிகள் என்று எப்படிப் பெயர் பெற்றன? நாடு முழுவதிலும் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு பெயர்களில் நாலாயிரம் ாதிகள் எவ்வாறு தோன்றி நிலை பெற்றிருக்கின்றன என்பது கேள்விக்குரிய பொருளாகும். மேலும் விரிவான ஆராய்ச்சிக்குரிய பொருளாகும். வெறும் வாய்ச்சவடால் பேச்சுகள் பயன்தராது.இங்கே வர்ணம் என்பது புறத்தோற்றம் அல்ல. அகப் பண்பாடு ஆகும். சத்துவம், ராஜசம், தாமசம் என்று மனித குணங்கள் மூன்று வகையாகப் பிரிக்கப் பட்டு பயிலப் பட்டிருக்கிறது. இம்முக்குணங்களில் எது.மேலோங்கி ஒருவனிடம் வெளிப்படுகிறதோ அதன் படி அவனுடைய செயல்பாடு அமைகிறது என்பதைத் தத்துவ சாத்திரங்கள் குறிப்பிடுகின்றன. பாரதி தனது பகவத் கீதை மொழிபெயர்ப்பு நூலுக்கு எழுதியுள்ள முன்னுரையில் "கண்ணபிரான் மனிதருக்குள் சாதி வேற்றுமையும் அறிவு வேற்றுமையும் பார்க்கக் கூடாது என்பது மட்டுமன்றி எல்லா உயிர்களுக்குள்ளேயும் எவ்விதவேற்றுமையும் பாராதிருத்தலே ஞானிகளுக்கு லட்சணமென்று சொல்லுகிறார்" என்று குறிப்பிடுகிறார். சாத்திரங்களின் மூல நூல்களில் உள்ள கருத்துகளுக்கு மாறாக சாதி வேறுபாடுகள், பாகுபாடுகள், கொடுமைகள், இழிவுகள், தீண்டாமை முதலிய கொடுமைகள், சமுதாயத்தின்மேல்தட்டில் இருந்த சில பிரிவுகளின் சுயநலம் காரணமாக ஏற்பட்டன என்பதும் அதற்காகப் பொய்மைச் சாத்திரங்கள் பல தோன்றின என்பதையும் பாரதி தனது பாடல்களில் பல இடங்களிலும் குறிப்பிட்டுக் காட்டுகிறார். பாரத சமுதாயத்தின் அனைத்துப் பகுதி மக்களுடைய முழுமையான விடுதலைக்காக பாரதியின் சிந்தினைகள் வெளிப்பட்டுள்ளதைக் காண்கிறோம். பெண்ணின் மேன்மையும் பெருமையும் பற்றி மிகப் பண்டைய காலத்தில் பெண்ணிற்கு சமுதாயத்தில் பெருமையும் மேன்மையும் தலைமையும் இருந்தது.தாய்வழிச்சமுதாயமே மனிதகுலத்தின் தொடக்கமாகும். அதில் பாரதம் முதலிடம் பெற்றிருக்கிறது. பாரத மக்கள் பெண்ணிற்கு தெய்வீகத் தன்மையைக் கொடுத்துக் கொண்டாடினர். சமுதாயத்தின் இருகண்களாகப் பெண்ணும் ஆணும் கருதப்பட்டனர். இடைக் காலத்தில் ஆதிக்கத்தில் இருந்தவர்கள் பெண்ணைத் தாழ்த்தி விட்டனர். பெண் அடிமை போல் ஆக்கப்பட்டாள். பெண்களும், சூத்திரர்களும் வேதங்களையும், நூல்களையும் படிக்கலாகாது என்று சில பொய்மைச் சாத்திரங்களிலும், போலிச் சுவடிகளிலும் எழுதி வைத்தார்கள். ஆனால் சமுதாயம் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் பெண்பாற் புலவர்கள் பலரும் தோன்றி பல அரிய கருத்துகளையும் எடுத்துக் கூறியிருக்கிறார்கள். தமிழகத்தில் ஒளவை தோன்றி ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம் என்று கூறி அனைவருக்கும் கல்வி என்னும் கருத்தை அந்த மகா வாக்கியத்தைக் கூறிய புண்ணிய பூமியாக பாரதம் இருக்கிறது. பிற்காலத்தில் பெண்கள் மேலும் அடிமைப் படுத்தப்பட்டு பிற்படுத்தப் பட்டனர், பின்னுக்குத் தள்ளப் பட்டனர். தற்காலத்தில் பெண் குலத்தில் பெரிய அளவில் எழுச்சி ஏற்பட்டு வருகிறது. பெண்ணுரிமை இயக்கம், புதுமைப் பெண் இயக்கம், முதலியன பெருகி வருகின்றன. சகல துறைகளிலும் பெண்களுக்கு சம வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்னும் உணர்வு நிலை விழிப்புணர்வு பெருகி வருகிறது. புதுமைப் பெண் இயக்கத்தின் முன்னோடியாக பாரதி விளங்குகிறார். அவருடைய கவிதைகளும் பாடல்களும் கட்டுரைகளும் விளங்குகின்றன. பாரத நாட்டின் பண்பாட்டு வழியில் பாரதி பெண்ணைத் தெய்வமாகப் பாராட்டுகிறார். பெண்ணைச் சக்தி வடிவமாகக் காண்கிறார். நாட்டைப் பெண்ணாக வடித்துத் தனது கவிதைகளைத் தொகுத்துள்ளார். பாரதத்தைப் பாரத மாதாவாகப் பாடியுள்ளார். வந்தே மாதா கீதத்தை அந்த முறையில் பாரதி பெருமையுடன் பாடுகிறார். 'வந்தே மாதரம் என்போம் - எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்" என்பதே பாரதியின் நாட்டுப் பாடல் தொகுப்பின் தொடக்கமாக அமைந்துள்ளது. பாரத மாதா, எங்கள்தாய், வெறிகொண்டதாய், பாரத மாதா திருப்பள்ளியெழுச்சி, பாரத மாதா நவரத்தின மாலை, பாரத தேவியின் திருத்தசாங்கம், தாயின் மணிக் கொடி. சுதந்திர தேவியின் துதி, பாரத தேவியின் அடிமை, தமிழ் தாய் என்னும் தலைப்புகளிலேயே பாரதி தனது தேசபக்தப் பாடல்கள் பலவற்றையும், எழுதியுள்ளார். முருகனைப் பாடத் தொடங்கிய பாரதி வள்ளியையும் பாடுகிறார். 'பல்லினைக் காட்டி வெண்முத்தைப் பழித்திடும் வள்ளியை ஒரு பார்ப்பனக்கோலம் தரித்துக் கரம் தொட்ட வேலவா" என வேலன் பாட்டில் பாடுவது பொருள் பொதிந்த கருத்து நிறைந்ததாகும். சிவசக்தி, பராசக்தி, மகாசக்தி, ஓம் சக்தி, சக்திக் கூத்து, சக்தி, காளி, மகாகாளி, முத்துமாரி, தேச முத்து மாரி, கோமதி, திருமகள், கலைமகள், நவராத்திரி ஆகிய தலைப்புகளிலே தான் பாரதியின் உணர்ச்சி மிக்க தெய்வ பக்திப்பாடல்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. பாரதியின் மகா சக்திக்குள்ள வலிமை அநந்தமானது.