பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி-புதிது.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதப் பண்பாட் டுத் தளத்தில் பாரதி |- சீனிவாசன் கண்ணனைப் பல கோணங்களிலும், பல வடிவங்களிலும் பாடும் பாரதி அக்கண்ணனைக்கண்ணம்மாவாகவும் பாடி மகிழ்கிறார். புதிய ஆத்திசூடியில் "தையலை உயர்வு செய்" என்று கூறிகிறார். பாரதி ஒரு மகாகவி, பாரதி பல கவிதைகளை எழுதியுள்ள போதிலும், கம்பனுக்குப் பிறகு தமிழில் ஒரு காவியம் இல்லை என்னும் குறையைப் போக்க ஒரு காவியத்தை எழுதினார். அதற்கு பாஞ்சாலி சபதம் எனப் பெயரிட்டார். பாரதி பாஞ்சாலியை துருபதன் மகளாகவோ ஐவரின் தேவியாகவோ மட்டும் காணவில்லை. அவன் பாஞ்சாலியை அடிமைப் பட்டிருந்த பாரத தேவியாகவே கண்டான். பாஞ்சாலியைப் பெண்ணுரிமைக்காக வாதாடிய வீரத்தாயாகவே கண்டான். பாஞ்சாலி சபதம் என்னும் காவியத்திற்குக்கடவுள் வணக்கம் பாடியபாரதி சூழ்ச்சிச்சருக்கத்தில் சரஸ்வதி வணக்கம், சூதாட்டச்சருக்கத்தில் வாணியை வேண்டுதல், அடிமைப்பட்ட சருக்கத்தில் பராசக்தி வணக்கம், சரஸ்வதி வணக்கம் ஆகிய துதிப் பாடல்கள் முக்கிய இடம்பெறுகின்றன. துரியோதனன் சபையில் பாஞ்சாலி நடத்திய வாதம், பாரதி தமிழுக்கு அளித்த ஒரு தனிச்சிறப்பான இலக்கியக் கருத்தாகும். புதுமைப்பெண்ணின் சிறப்புகளைப் பற்றி ஒருமுழுமையான சித்திரத்தை பாரதி தனது கவிதைகளில் வடித்திருப்பது காலத்திற்கேற்றது மட்டுமல்லாமல் எக்காலத்திற்கும் பொருந்துவதான பொது நெறியாகும். புது நெறியாகும். பெண்மை வாழ்கவென்றும், பெண்கள் விடுதலைக்கும்மியென்றும், பெண் விடுதலையென்றும் பெண்ணுரிமைகளைப் பற்றி ஒரு புதியகொள்கையைப் பாரதி, பாரத நாட்டின் முழு விடுதலையின் பகுதியாக முன்வைத்துள்ளார். பெண் விடுதலை, பெண்ணின் பெருமை, பெண்ணின் மேன்மை பற்றி, பாரதி தனது கவிதைகளில் கூறியுள்ள கருத்துகள் பற்றி எழுதத் தொடங்கினால் அதுவே விரிவடைந்து பெரிய நூலாகிவிடும். எனினும் பாரதி நமது பண்பாட்டுத் தளத்தில் வேரூன்றி நின்று எவ்வாறு அதிலுள்ள சில அழுகிப் போன பழமை, பொய்மை போலிகளை நீக்கி புது நெறியை முன் வைத்துள்ளார் என்பது நாம் கற்றறியவேண்டியதாகும். பாரதப்பெண்மையின் முழுவடிவத்தை அனைத்துப் பரிமாணங்களிலும் பாரதி கூறியிருப்பது சிறப்பானதாகும். "செய்யாளினியாள் பூரீதேவி செந்தாமரையிற் சேர்ந்திருப்பாள் கையாளென நின்ற டியேன் செய் தொழில்கள் யாவும் கை கலந்து செய்வாள் புகழ் சேர் வாணியும் என உள்ளே நின்று தீங்கவிதை பெய்வள், சக்தி துணை புரிவாள் பிள்ளாய் நின்னைப் பேசிடிலே" என்று முப்பெரும் தெய்வங்களையும் சக்தி வடிவில் பாடுகிறாள். வேண்டுவன என்னும் தலைப்பிலான கவிதையில் மனதில் உறுதி வேண்டும் என்று தொடங்கி, "கண் திறந்திட வேண்டும் காரியத்தில் உறுதி வேண்டும் பெண் விடுதலை வேண்டும் பெரிய கடவுள் காக்க வேண்டும்" என்றும் பாடுகிறார். பாரதி தனது விடுதலைப் பாட்டில் விடுதலையின் முழுமையான பரிமாணத்தை மொத்தமான அடையாளத்தை பரிபூரண சுதந்திரத்தின் முழுப் பொருளைக் குறித்துக்காட்டுகிறார். விடுதலை என்றால் அரசியல் விடுதலை, பொருளாதார விடுதலை, சமுதாய விடுதலை, பெண் விடுதலை, கல்லாமையிலிருந்து விடுதலை, மூடப் பழக்க வழக்கங்களிலிருந்து விடுதலை, இவ்வாறு அனைத்துத்துறைகளிலும் விடுதலை என்னும் உயர்ந்த விரிவான கருத்தை பாரதி தெளிவுப் படுத்துகிறார். பறையர், தீயர், புலையர், பரவர், குறவர், மறவர், முதலிய அனைத்து மக்களுக்கும் சமுதாய இழிவுகளிலிருந்தும் தாழ்த்தப் பட்ட நிலையிலிருந்தும் பிற்படுத்தப் பட்ட நிலையிலிருந்தும் அறியாமையிலிருந்தும் கல்லாமையிலிருந்து வறுமையிலிருந்தும், பசி பட்டினி, முதலிய கொடுமைகளிலிருந்தும் முழுமையான விடுதலை கிடைக்க வேண்டும் என்பது மகாகவியின் கருத்தாகும். "திறமை கொண்ட தீமையற்ற தொழில் புரிந்து யாவரும் தேர்ந்த கல்வி ஞான மெய்தி வாழ்வம் இந்த நாட்டிலே" என்பது பாரதியின் லட்சியமாகும்,