பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி-புதிது.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதப் பண்பாட்டுத் தளத்தில் பாரதி. அ. சீனிவாசன் மாதர் அறிவைக் கொடுத்தார்" "கண்கள் இரண்டில் ஒன்றைக்- குத்திக் காட்சி கொடுத்திடலாமோ பெண்கள் அறிவை வளர்த்தால் - வையம் பேதமையற்றிடும் காணி' பெண்ணுரிமை பற்றியும் பெண் விடுதலை பற்றியும் உலகில் தற்காலத்தில் சில வகைக் கருத்துக்கள் எழுந்துள்ளன. பொதுவாக மேல் நாடுகளில் பெண்கள் சுதந்திரமாக உள்ளார்கள் என்றும், இந்தியா போன்ற கிழக்கு நாடுகளில் பெண்கள் அடிமைப்படுத்தப் பட்டுள்ளார்கள் என்றும் பேசப்படுகிறது. அது உண்மையல்ல, மேல் நாடுகளில் நிலவுவது காதல் விடுதலைதான் பால் விடுதலை என்றும் கூறலாம், பெண் விடுதலையல்ல என்பது எமது கருத்தாகும். பாரதி கூறுவதைக் காண்போம். "காதலிலே விடுதலை யென்றாங்கோர் கொள்கை கடுகி வளர்ந்திடும் என்பார் யூரோப்பாவில், மாதரெல்லாம் தம்முடைய விருப்பின் வண்ணம், மனிதருடன் வாழ்ந்திடலாம் என்பார் அன்னோர் பேதமின்றி மிருகங்கள் கலத்தல் போல பிரியம் வந்தால் கலந்து அன்பு பிரிந்து விட்டால் வேதனையொன்றில்லாதே பிரிந்து சென்று வேறொருவன்றனைக் கூடவேண்டுமென்பார் வீரமிலா மனிதர் சொலும் வார்த்தை கண்டீர் விடுதலையாம் காதலெனில் அது பொய்மைக் காதல்" என்று கூறுகிறார். காதலில் விடுதலையென்றால் அது பொய்மைக் காதலாகும். அது மனிதனை மிருக நிலைக்குத் தள்ளிவிடும். இத்தகைய பொய்மைக் காதல் யூரோப்பாவில் மட்டுமல்ல, எல்லா நாடுகளிலும் உள்ளனவேயாகும். சில இடங்களில் வெளிப்படையாகவும், சில இடங்களில் மறைமுகமாகவும், சில இடங்களில் பட்டும் படாமலும் இலை மறைவு காயாகவும் நிலவுகின்றன. எனவே அதைப் பொய்மையென்றும் போலி என்றும் பாரதி கூற முனைந்தார். 25 மனிதன் ஆனாயினும் சரி, பெண்ணாயினும் சரி, தனி மனிதனல்ல, சமுதாய அமைப்புடனும், குடும்ப அமைப்புடனும் இணைந்தவராகும். சமுதாயத்தின் அங்கமாக இருந்து தொழில் செய்தும், குடும்பத்தின் அங்கமாக இருந்து வாழ்க்கை நடத்தியும் ஆணும், பெண்ணும் சரிசமமாக இருந்துதங்கள் கடமைகளை ஆற்றிக் குடும்ப வளர்ச்சியிலும் சமுதாய முன்னேற்றத்திலும் பங்கு கொண்டு பணியாற்ற வேண்டும். பாரதி இந்தியப் பண்பாட்டின் வழியில் நின்று இது பற்றி ஒரு புதிய கருத்தைத் தெளிவுபடக் கூறுகிறார். இந்த இடத்தில் பால் ஒழுக்கத்தைப் பற்றியும் மனைமாட்சி பற்றியும் கம்பன் காட்டும் ஒரு அருமையான காட்சியை நினைவு கூரலாம். இராமன்வாலி மீது மறைந்துநின்று அம்பெய்து வாலி வீழ்ந்துகிடக்கிறான். அப்போது வாலி தன் மீது அம்பெய்த காரணம் கேட்டு இராமனுடன் பேசுகிறான். அந்த உரையாடல் ஓர் அற்புதமான காட்சியாகும். இராமன் வாலியிடம் கூறுகிறான். "மறம் திறம் பல வலியன் எனாமனம் புறம் திறம்ப எளியவர் பொங்குதல் அறம் திறம்பல் அரும்கடி மங்கையர் திறம் திறம் பல் தெளிவுடையோர்க்கெலாம்" என்றும், "தருமம் இன்னது எனும் தகைத்தன்மையும் இருமையும் தெரிந்து எண்ணலை எண்ணினால் இருமை உம்பிதன் ஆருயிர்த் தேவியை பெருமை நீங்கினை எய்தப் பெறுதியோ?" என்றும் கேட்கிறான். அதற்கு வாலி "ஐய, நாங்கள் அருங்குலக் கற்பின் அப் பொய்யில் மங்கையர்க்கு ஏய்ந்த புணர்ச்சி போல் செய்திலன், எமைத்தே மலர் மேலவன் எய்தின் எய்தியதாக இயற்றினான்" என்றும்,