பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி-புதிது.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதப் பண்பாட்டுத் தளத்தில் பாரதி அ. சீனிவாசன் என்று தொடங்கி, பாரத மாதாவின் முழு வடிவத்தைப் பற்றி விவரித்து எடுத்துக் கூறுகிறார். இராவணனுடைய தலைமகன் மேகநாதன்.அவன் மிகப்பெரிய வல்லமை மிக்க மாவீரன், போரில் தனது தந்தையைக் காட்டிலும் அதிகமான சாகசங்களைச் செய்தவன் என்று கூடக் கூறலாம். வில் வித்தையில் வல்லவன். சகலவிதமான அஸ்திரங்களைப் பற்றியும் அஸ்திரப் பிரயோகங்களைப் பற்றியும் நன்கு கற்றவன். இதர பலவகையான போர்ப் பயிற்சிகளையும் பெற்றவன். மாயாஜாலப் போர் முறைகளைக் கற்றுத் தேர்ந்தவன். ஆகாயத்தில் மறைந்து நின்று போர் புரியும் வல்லமை படைத்தவன். பலவகைத் தவங்களும் வேள்விகளும், செய்து எண்ணற்ற வரங்களும், பலமும் பெற்றவன். இந்திரனையே போரில் வென்று இந்திரஜித் என்று பெயரும் புகழும் பெற்றவன். தேவர்களும் அவனுக்கு அஞ்சி வாழ்ந்தனர். அனுமனையும் கூட பிரம்மாஸ்திரத்தால் கட்டியவன். இலக்குவனையும், வாணர வீரர்களையும் எதிர்த்தும் மாயா ஸ்திரங்களையும், நாகாஸ்திரங்களையும், நான்முகன் படைகளையும் ஏவி இரு முறை போரில் வெற்றி கண்டவன். வீடணனும், அனுமனும் இல்லாதிருந்தால் இந்திர சித்தனை வெல்வது மிகவும் கடினமாக இருந்திருக்கும். அத்தகைய ஒரு மாவீரன் இராவணன் பக்கத்தில் இலங்கை அரசில், அதர்மத்தின் பக்கத்தில் அரக்கனாக நின்றதால் போர்க்களத்தில் இறந்து பட்டான். இலக்குவனின் கணைகளால் இரண்டு துண்டுகளாக ஆக்கப்பட்டான். அந்தக் கணைகள் பாரத ராணியின் வில்லிலிருந்து வெளிவந்த கணைகள் என்று பாரதி குறிப்பிடுகிறார். "இந்திர சித்தன் இரண்டு துண்டாக எடுத்த வில் யாருடைய வில்? - எங்கள் மந்திரத் தெய்வ நம் பாரத ராணி வயிரவி தன்னுடைய வில்" என்று பாரதி பாடுகிறார். இந்து தர்மத்தின் மையமான தத்துவக் கருத்து பரம்பொருள் ஒன்று என்பதாகும். அதுவே பிரபஞ்சத்திலுள்ள சகலவிதமான பொருள்களிலும் நிறைந்து நிலை கொண்டிருக்கிறது. உலகமே. இப்பேருலகமே அப்பரம்பொருள் மயமானது. "சர்வம் விஷ்ணு மயம் ஜகத்" உலகில் உள்ள அனைத்தும் விஷ்ணு மயமானது என்பது கீதையின் மையமான கருத்தாகும். அப்பரம் பொருளின் மக்களே, நாம் அனைவரும் மக்கள் மட்டுமல்ல, அனைத்து ஜீவராசிகளும் அப்பரம் பொருளின் வடிவங்களேயாகும். இத்தகைய பரம்பொருளின் வடிவமாகியும் இவ்வுலகம், இந்தப் பிரபஞ்சம், 3D இன்பமயமானது. வாழ்க்கைக்கு உகந்தது. இந்த பூமி, அதில் உள்ள கடல்கள், மலைகள், ஆறுகள், மரங்கள், இதர தாவரங்கள், விலங்குகள், பறவைகள், இதர பஞ்சபூத சக்திகள், விண்வெளி, நட்சத்திரங்கள், சூரிய சந்திரர்கள், இதர கிரகங்கள் அனைத்தும் இன்பமயமானவை. இதனிடையில் அமைந்த மனித வாழ்க்கை அரிதானது. இன்பமயமானது என்பது இந்து தர்மத்தின் ஆதாரத்தத்துவமாகும்.இதையே வேதங்களும், இதர சாத்திரங்களும் கூறுகின்றன. இதைப் பாரதிதனது கவிதைகளில் அடிநாதமாக இணைத்து இசைத்துக் கொண்டு செல்கிறார். இந்தத் தத்துவ ஞானக் கருத்தை பாரத மாதாவின் வடிவமாகவே, அதன் அங்கமாகவே பாரதி காண்கிறார். "ஒன்று பரம் பொருள் நாம் அதன் மக்கள் உலகின்பக் கேணியென்றே - மிக நன்று பல் வேதம் வரைந்தகை பாரத நாயகி தன் திருக்கை" இத்தகைய உயர்ந்த தத்துவங்களை வரைந்து உலகுக்கு ஒளிகாட்டி வழி வகுத்துக் கொடுத்த பாரத நாட்டின் ஞானிகள், அறிஞர்கள். தவப்புதல்வர்களின் சிந்தனைகளும் எழுது கோல்களும் பாரத தேவியின் சிந்தனையும் எழுது கோலுமாகும். உலகம் இருண்டது, உலக வாழ்க்கை துன்பமயமானது என்னும் கொள்கை பாரதிக்கு ஏற்புடையதன்று. நமது நாட்டின் அறிஞர்களின் ஒரு பிரிவினர் சித்தர்கள். அவர்களில் சிலர் சிறந்த தத்துவ ஞானிகள், சிலர் சிறந்த விஞ்ஞானிகள், அறிவியல் வல்லுனர்கள், சிலர் சிறந்த வைத்தியம் மற்றும் மருந்தியல் நிபுணர்கள், பல்வேறு அறிவுத் துறைகளிலும் சிறந்தவர்கள். பல்வேறு அறிவுத் துறைகளிலும் இணைந்தவர்கள், பஞ்சபூதங்களின் செயல் திறன்களையும் அதன் நுட்பங்களை நன்கு கற்றறிந்தவர்கள். மனித உயிர்களையும், உடலையும் மனதையும் பொறிகளையும் அதன் செயல்களையும் நன்கு அறிந்தவர்கள். அவைகளைச் செயல் படுத்தவும் கட்டுப் படுத்தவும் நன்கு பயிற்சி பெற்றவர்கள். பாரதியும் தன்னை ஒரு சித்தர் என்று கூறிக்கொண்டார். "எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தாரப்பா யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில்" என்று பாரதி கூறுகிறார். "அறிவிலே தெளிவு நெஞ்சிலே உறுதி அகத்திலேயன் பினோர் வெள்ளம்