பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி-புதிது.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதப் பண்பாட்டுத் தளத்தில் பாரதி அ. சீனிவாசன் பொறிகளின் மீது தனியா சானை பொழுதெல்லாம் நினது பேரருளின் நெறியிலே நாட்டம், கருமயோகத்தில் நிலைத்திடல் என்றிவையருளாய் குறி குணம் ஏதும் இல்லாதாய் அனைத்தாய்க் குலவிடும் தனிப்பரம் பொருளே!" ான்று உலகம் சித்த மயம் என பாரதி கூறுகிறார். இவ்வுலகம் சித்த மயம் என்பதும், அந்த உறுதி நமது சித்தத்தில் நிலை பெற்று ஓங்கிவிட்டால் உலகனைத்தையும் வெல்லலாம் என்றும் சித்தர்களின் சொல், நீமேல் நடக்கலாம், காற்றிலே உலாவலாம், நெருப்பிலே செல்லலாம். மிருகங்களை அடக்கலாம் என்றெல்லாம் இவ்வாறாகக் கூறிய சொற்கள் பாரதத் தாயின் சொற்களாகும். "சித்த மயம் இவ்வுலகம் உறுதி நம் சித்தத்தில் ஓங்கி விட்டால் - துன்பம் அத்தனையும் வெல்லலாம் என்று சொன்ன சொல் ஆரிய ராணியின் சொல்" என்பது பாரதியின் கவிதையாகும். அரச குலத்தின் முழுமையான வீரத்தையும் வித்தைகளையும் அந்தணர் குலத்தின் முழுமையான அறிவாற்றலையும் யாக பலத்தையும் ஒரு சேரப் பெற்று பிரம்மரிஷி என்னும் பட்டத்தைப் பெற்றுத் தனிச் சிறப்போடு விளங்கிய விசுவாமித்திரருக்கும் சகல கலைகளிலும் தேர்ச்சி பெற்றுள்ள அழகிற் சிறந்த பேரழகியான மேனகைக்கும் பிறந்த சகுந்தலை பெற்ற பிள்ளை பரதன். அந்தப் பரதன் பெயரிலேயே இந்த நாடு பாரதநாடு என்றும் பரத கண்டம் என்றும் சிறப்புப் பெயர் பெற்று விளங்குகிறது. பரதன் பாரத நாடு முழுவதையும் ஒன்றிணைத்து ஒரு குடையின் கீழ் ஆண்டான். அப்பரதன் வீரத்தின் வடிவம். துணிவின் சின்னம். அவன் சிறு பிள்ளையாக இருக்கும்போதே சிங்கத்தைத் தட்டிவிளையாடிய தீரன். மனிதன் தனது தலை சிறந்த அறிவாலும் அறிவு நுட்பத்தாலும் ஆற்றலாலும் மிருகங்கள் பலவற்றையும் அடக்கித் தனக்கு அடிபணியச்செய்தான்.அது இந்த நாட்டின் ரிரத்தின் அடையாளம். சிங்கத்தினையே தட்டி விளையாடிய பரதன் பாரத பாணியின் பிள்ளை. அதை "சகுந்தலை பெற்ற தோர் பிள்ளை சிங்கத்தினைத் தட்டி விளையாடி - நன்று உகந்ததோர் பிள்ளை முன் பாரத ராணி எளியுறப் பெற்ற பிள்ளை' என்று பாரதி பாடுகிறார். பஞ்சவர்களில் பார்த்தன் வீரர்களில் சிறந்தவன். அந்த வில் விஜயன் அர்ஜுனனின் வில்லிற்குக் காண்டிவம் என்றும் சிறப்புப் பெயர் பெற்றது. முந்திய யுகத்தில் இராமபிரானின் வில்லிற்குக் கோதண்டம் என்னும் சிறப்புப் பெயர் உண்டு. அடுத்தாற்போல் சிறப்புப் பெயர் பெற்றது அர்ஜுனனுடைய காண்டீபம் என்னும் பெயர் பெற்ற வில்லாகும். இன்றும் கூட நமது பாரத நாட்டு மக்கள் தங்கள் பிள்ளைகளுக்குக் கோதண்டம் என்றும், காண்டீபன் என்றும் பெயர் வைத்து மகிழ்கிறார்கள். "கன்னானுந்திண்டோள் களவீரன் பார்த்தன் ஒரு வில் நாண் ஒலி கேட்டமேன்மைத் திருநாடு" என்று பார்த்தனின் தோள்வலிவில் நாண் ஒலி ஆகியவற்றின் சிறப்புகளைக் குறிப்பிட்டு மகாகவி பாரதி பாடுகிறார். "இன்று கட்டுண்டோம் பொருத்திருப்போம் காலம் மாறும், தருமத்தை அப்போது வெல்லக் காண்போம், தனுவுண்டு காண்டிவம் அதன் பேர் என்றான்' என்று பாஞ்சாலி சபதத்தில் பார்த்தன் கூறியதை பாரதி குறிப்பிடுகிறார். அர்ஜுனன் தனது காண்டிவத்தைக் கொண்டு உலகத்தையே வெல்வதற்கான வல்லமையைப் பெற்றவன். அத்தகைய வெற்றிக்குரிய வீரத் தோள்கள் பாரத தேவியின் தோள்களாகும். அதையே 'காண்டிவமேந்தி உலகினை வென்றது கல் ஒத்த தோள் எவர் தோள்? எம்மை ஆண்டருள் செய்பவன், பெற்று வளர்ப்பவன் ஆரிய தேவியின் தோள்' என்று பாரதி பாடுகிறார். பாரதக் கதையில் கர்ணன் ஒரு மிக முக்கியமான பாத்திரமாகும். கர்ணன் ஒரு ஈடு இணையில்லாத மாவீரன். வீரத்திலும், தீரத்திலும் மேலானவன். பயம் என்பதை அறியாதவன். தான தருமங்களில் அவனுக்கு நிகர் அவனே. HI