பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி-புதிது.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதப் பண்பாட்டுத் தளத்தில் பாரதி அ. சீனிவாசன் நட்பிற்கு இலக்கணமானவன். கொடையில் சிறந்தவன். கர்ணனோடு கொடை போயிற்று என்று புகழ் பெற்றவன். கால வசத்தால், சூழ்நிலையின் கட்டாயத்தால் கர்ணன் துரியோதனன் பக்கம் நின்றான். ஆயினும் கர்ணன் சகலதுறைகளிலும் தனித்தன்மை பெற்றவன்.போற்றுதலுக்குரியவன்.பாரதி கர்னனின் சிறப்பைப் பற்றித் தனது பாடல்களில் பல இடங்களிலும் மிகவும் சிறப்பித்துக் கூறுகிறார். கர்ணனுடைய சிறப்புகளில் முதன்மை பெற்று நிற்பது அவனுடைய கொடைச் சிறப்பு. அவனுடைய கொடைச் சிறப்பு வான்புகழ் கொடைச் சிறப்பாகும். பாரதி தனது பாஞ்சாலி சபதக் காவியத்தில் துரியோதனன் சபையில் இருந்த பல பெரியோர்களையும் குறிப்பிட்டுக் கூறி விட்டு, கர்ணன் அங்கு இருந்ததையும் கீழே கண்டவாறு குறிப்பிடுகிறார். "மைந்நெறி வான் கொடையான - உயர் மானமும் வீரமும் மதியும் உளோன் உய்ந்நெறி யறியாதான்-இறைக் குயிர் நிகர் கன்னனும் உடனிருந்தான் இங்கு கர்ணனை சிறப்பித்து பாரதி குறிப்பிடுவதைக் காணலாம். "மைந்நெறி வான் கொடையான்' என்று பாரதி கர்ணனைப் பற்றிச் சிறப்பித்துக் கூறுவது அவனுடைய கொடைச் சிறப்பைப் பற்றியதாகும். இல்லை என்று வருவோருக்கு இல்லையென்று கூறாத நல்லிதயம் படைத்தோன் என்று கர்ணனைப் பற்றிப்பாரதக்கதை சிறப்பித்துக்கூறுகிறது. கர்ணனின் கொடைச் சிறப்பு வேண்டியவர்க்கு வேண்டிய பொருள்களைக் கொடுத்தது மட்டுமல்ல, அவனிடம் இருக்கும் எதைக் கேட்டாலும் கேட்பவர்களுக்கு மனம் உவந்து கொடுக்கக் கூடியவன். பாரதப் போருக்கான தயாரிப்புகள் நடந்து கொண்டிருந்தன. சமாதானம் செய்து கொள்வதற்காக தர்ம புத்திரன் ரீ கிருஷ்ணனை தூது அனுப்பினார். கிருஷ்ணனும் தூது பேச அஸ்தினாபுரம் வந்தான். கண்ணன் தன் அத்தையான ககுந்தி தேவியை சந்தித்தான். அவளிடம் கர்ணனின் பிறப்பு ரகசியத்தை எடுத்துக் கூறி அவனே அவளுடைய முதல் மகன் என்பதைத் தெரிவித்து அவளைக் கர்ணனிடம் அனுப்புகிறான். குந்திதேவி கர்ணனிடம் சென்றாள். தான்தான் அவளுடையதாய் என்பதை நிரூபித்தாள். கர்ணனைத் தனது தம்பியர்களான பாண்டவர்களிடம் வந்து விடும்படி கேட்கிறாள். கர்ணன் அதற்கு மறுப்பு தெரிவித்துதுரியோதனனுடன் தனக்குள்ளநட்பைச் சிறப்பித்துக் கூறி அந்த இராஜ ராஜனுக்குச் செருமுனை சென்று செஞ்சோற்றுக் கடன்களிப்பதே தனக்கினிக் கருமமும் தருமமும் என்று கூறி விடுகிறான். கர்ணன் கூறுவது "பெற்ற நீர் மகவு அன்பு இலாமையோ அன்றிப் பெரும் பழி நாணியோ விடுத்தீர் அற்றை நாள் தொடங்கி என்னை இன்று அளவும் ஆர் உயிர்த்துணையெனக் கருதிக் கொற்றமா மகுடம் புனைந்து அரசு அளித்துக் கூட உண்டு உரிய தம்பியரும் சுற்றம் ஆனவரும் என் அடி வணக்கத் தோற்றமும் ஏற்றமும் அளித்தான்' என்றும் "மடந்தை பொன் திருமேகலை மணி உகவே மாசு அறத்திகழும் ஏகாந்த இடம் தனில் புரிந்தே நான் அயர்ந்திருப்ப எடுக்கவோ கோக்கவோ என்றான் திடம் படுத்திடவே இராச ராசனுக்குச் செருமுனை சென்று செஞ்சோற்றுக் கடன் கழிப்பதுவே என்க்கினிப் புகழும் கருமமும் தருமமும் என்றான்" என்றும் கர்ணன் கூறி விட்டான். அதன் பின்னர் குந்தி தேவி ஏற்கனவே கண்ணபிரான் கூறியிருந்த ஏற்பாட்டின் படி, கர்ணனிடம் இரு வரங்களைக் கேட்கிறாள். ஒன்று அர்ஜுனன் மீது உன்னிடமுள்ள நாகக் கணையை ஒரு தடவை தான் தொடுக்க வேண்டும். அதில் அவன் பிழைத்து விட்டால் மறுபடியும் அந்தக் கணையை அவன் மீது தொடுக்கக் கூடாது என்பது. இரண்டாவது வரம் மற்ற நால்வரில் போரில் எவரையும் கொல்லக் கூடாது என்று கேட்கிறாள். கொடையில் சிறந்த கர்ணன், அந்த வரங்களில் தனக்கு நேரவிருக்கும் பேராபத்தையும் பொருட்படுத்தாமல், "தெறுகணை யொன்று தொடுக்கவும் முனைந்து செருச் செய்வோன்சென்னியோடிருந்தால் மறுகணை தொடுப்பது ஆண்மையோ வலியோ மானமோ மன்னவர்க்கு அறமோ