பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி-புதிது.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதப் பண்பாட்டுத் தளத்தில் பாரதி அ. சீனிவாசன் தந்த தெவர் கொடைக்கை- சுவைப் பாடு மொழியின் புலவர்கள் போற்றிடும் பாரதராணியின் கை' என்று பாரதி பாடுகிறார். கர்ணனின் கருணையும், ஈகையும் கொடையும் பாரத ராணியின் தனிப் பெரும் குணச் சிறப்புகளாகும். பாரத நாடு படைத்த தலை சிறந்த நூல்களில் ஒன்று பகவத் கீதை. இந்து தர்மத்தின்மூன்று முக்கியதுண்களில் ஒன்றாக பகவத்கீதை கருதப்படுகிறது. உலகப் பிரசித்தி பெற்ற இந்த நூல், பாரத நாட்டில் மட்டுமல்ல, உலகின் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது. பாரத நாட்டில் பகவத் கீதைக்கு பாஷ்யம் (விளக்கம்) எழுதியவர்களில் பகவான் ஆதி சங்கரர், இராமானுஜர் மத்துவர் ஆகிய மூவரும் தலைசிறந்த தத்துவ ஞானிகளாக வரலாற்றில் இடம்பெற்றிருக்கிறார்கள். அர்ஜுனன் தர்ம சேஷத்திரமான குரு க்ஷேத்திரப் போர்க் களத்தில் எதிர் தரப்புப் படையில் தனது பாட்டன்மார், பங்காளிகள், மாதுலர், குரு சிரேஷ்டர்கள் மற்றும் தனக்கு மிகவும் வேண்டியவர்களும், வணக்கத்திற்குரியவர்களும் நிற்பதைக் கண்டு போர் செய்ய மறுத்துத் தனது ஆயுதங்களைக் கீழே போட்டுச்சோர்வடைந்து தேர்த்தட்டில் சாய்ந்தான். "முன்னையோர் பார்த்தன் முனைத்திசை நின்று தன்னெதிர் நின்ற தளத்தினை நோக்கிட மாதுலர், சோதரர் மைத்துனர் தாதையர் காதலின் நண்பர், கலை தரு குரவரென்று இன்னவர் இருத்தல் கண்டு இதயம் நொந்தோனாய் தன்னருந் தெய்வீக சாரதி முன்னர்" "ஐயனே, இவர் மீது அம்பையோ தொடுப்பேன்? வெற்றியை விரும்பேன் மேன்மையை விரும்பேன் என்னை இவர் கொல்லினும் இவரை யான் தீண்டேன், சினையறுத்திட்டபின் செய்வதோ ஆட்சி எனப் பல கூறி அவ்விந்திரன் புதல்வன், கனப்படை வில்லைக் களத்தினில் எறிந்து சோர்வவோடு வீழ்ந்தனன்" என்று பாரதி கூறுகிறார். இதைக் கண்ட தெய்வீகப் பெருமான் வாசுதேவக் கண்ணன், "வில்லெறிந்திருந்த வீரனை நோக்கி புல்லிய அறிவொடு புலம்புகின்றனையால், அறத்தினைப் பிரிந்த சுயோதனாதியரைச் செறுத்தினில் மாய்ப்பது தீமை யென்கின்றாய் உண்மையை அறியாய் உறவையே கருதிப் பெண்மை கொண்டேதோ பிதற்றி நிற்கின்றாய், வஞ்சகர் தீயோர், மனிதரை வருத்துவோர், நெஞ்சகத் தருக்குடை நீசர்கள் இன்னோர், தம்மோடு பிறந்த சகோதரராயினும் வெம்மை யோடொறுத்தல் வீரர் தம் செயலாம் ஆரிய நீதி நீ அறி கிலை போலும், பூரியர் போல் மனம் புழுங்குரலாயினை அரும் புகழ் தேய்ப்பதும் அனாரியத் தனகத்தும் பெரும் பதத்தடையுமாம் பெண்மை யெங்கெய்தினை பேடிமையகற்று நின்பெருமையை மறந்திடல் ஈடிலாப் புகழினாய் எழுகவோ எழுக" வையகத்தரசும் வானக ஆட்சியும் போயினும் இவர் தமைப் போரினில் வீழ்த்தேன் மெய்யினில் நடுக்கம் மேவுகின்றது வால் கையினில் வில்லும் கழன்று வீழ்கின்றது." "வாயுலர்கின்றது. மனம் பதைக்கின்றது ஓய்வுறும் கால்கள், உலைந்தது சிரமும், 34 என்று மெய்ஞ்ஞானம் நம் இறைவர் கூற என்று பாரதி விவரித்துக் கூறுகிறார். பகவத் கீதை வெறும் போர் செய்வதற்குத் தூண்டும் நூல் என்று சிலர் கருதுவது சரியாகாது. பகவத்கீதை ஒருதலைசிறந்ததத்துவ ஞான நூலாகும். கர்ம யோகம். பக்தி யோகம், ஞான யோகம் (செயல், பக்தி, தேர்ந்த அறிவு) ஆகியவைகளை விளக்கும் அரிய தத்துவ ஞான நூலாகும். பகவத்கீதை மனிதனை செயலில் ஊக்கத்துடன் ஈடுபடத் தூண்டுகிறது