பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி-புதிது.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

WTA: "" டுத் தளத்தில் பாரதி அ. சீனிவாசன் மனிதனை தனது செயலின் பலனை எதிர்பாராது பக்தியுடன் தன்னை அப்பணித்துத் தியாக உணர்வுடன் ஈடுபடத் தூண்டுகிறது. ஒருவன் தனது _மைகளில், செயலில் முழுமையாக ஈடுபடும்போது அவனுக்கு அச்செயல் பற்றியும் அது சம்பந்தப்பட்ட சகல துறைகளையும் பற்றிய ஞானம் மற்படுகிறது. பாரதி இந்த மகத்தான நூலை நன்கு படித்து கிரகித்தும் தமிழில் மொழி பெயர்த்தும் எழுதியுள்ளார். பகவத் கீதை பாரதியின் தமிழாக்கம் சிறந்த மொழியாக்கமாகும். அத்துடன் அவர் அந்தத் தமிழாக்க நூலுக்கு ஒரு சிறந்த ன்றுரையும் எழுதியுள்ளார். அம் முன்னுரையே ஒரு மிகச் சிறந்த க்கியமாக அமைந்துள்ளது. பகவத் கீதை பற்றிய ஒரு சிறிய சீரிய விளக்கமாக இந்த முன்னுரை அமைந்துள்ளது. பகவத் கீதை பாரதத்தாய் உலகிற்கு அளித்த மாபெரும் காணிக்கையாகும். பகவத் கீதை புகன்ற வாய் பாததேவியின் வாயாகும். பாரத மாதாவின் வடிவத்தில் அது ஓர் அங்கமாகும். "போர்க்களத்தே பரஞான மெய்க் கீதை புகன்ற தெவருடை வாய்? -பகை நீர்க்கத்திறந்தரு பேரினள் பாரத தேவி மலர்த்திருவாய்" ான்பது பாரதியின் கவிதை வரிகளாகும். மகாபாரதக்கதையில் வரும் தலைசிறந்த தெய்வீகப் பாத்திரங்களில் ஒன்று பீஷ்மன் (வீட்டுமன்) என்று புகழ் படைத்த தேவ விரதன். "பன்னரும் புகழுடைப் பார்த்தனும் கண்ணனும் வீமனும் துரோணனும், வீட் டுமன் தானும், இராமனும் வேறுள இரு ந்திறல் வீரரும் நற்றுணை புரிவர்" என்று பாரதி பாரத நாட்டின் சிறந்த வீரர்களைக் குறிப்பிடுகிறார். "அந்தமில் புகழுடையான் - அந்த ஆரிய விட்டுமன் அற மறிந்தோன்" ான்றும், லாலா லஜபதிராய் பிரலாபம் என்னும் கவிதையில் "ஆரியர் தம் தர்ம நிலை ஆதரிப்பான் வீட்டுமனார், நாரியர் தம் காதல் துறந்திரந்த நன்னாடு' 35 என்றும் பீஷ்மனைப் பற்றி மிகவும் சிறப்பித்து பாரதி குறிப்பிடுகிறார். மகாபாரதக் கதையில் வீட்டுமன் ஒரு தனித்தன்மையான தெய்வீகப் படைப்பு - தன்னலமற்ற தனி தியாகத்திற்கும் நாட்டுப் பற்றுக்கும் எடுத்துக் காட்டாக விளங்கும் மனித குல திலகமாகும். சந்திர குலத்தரசன் சந்தனு மகாராஜனுக்கும் கங்கைக்கும் பிறந்தவன் தேவவிரதன். கங்கை மைந்தன் என்று பெயர் பெற்றவன். தனது தந்தை சந்தனு மகாராஜன் செம்படவப் பெண்ணான சத்தியவதி மீது காதல் கொண்டான். அவளைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினான். ஆனால் சத்தியவதியின் தந்தையோ தன் மகள் வயிற்றுப் பிள்ளைகளுக்கு அரசுப் பட்டத்தைக் கொடுப்பதாக இருந்தால்தான் தனது மகளைத் தருவேன் என்று கூறி விட்டான். அதற்கு சந்தனு மகாராஜன் தயங்கினான். அப்போது தேவவிரதன் முன்வந்து தனது தந்தையின் காதலுக்காக தனக்கு வரும் அரச பதவி வேண்டாம் என்று வாக்குறுதி அளித்து, அவனது பிள்ளைகள் நாளைக்கு உரிமை கொண்டாடிவிடுவார்களோ என்னும் அச்சத்தைப்போக்க, தான் திருமணமே செய்து கொள்ள மாட்டேன் என்று விரதம் பூண்டு தியாகத்தின் சின்னமாக பீஷ்மன் (வீட்டுமன்) என்னும் பெயர் பெற்று பிதாமகனாக அத்தினாபுரத்தைத் தன் தோள் பலத்தால் காத்து நின்றான். வீட்டுமன் யாராலும் வெல்ல முடியாத வல்லமை பெற்றவன். சகல கலைகளையும் கற்றவன். வில்வித்தைகளிலும் போர்ப் பயிற்சியிலும் தேர்ச்சி பெற்றவன். மகாரதன், அதிரதன் தான் விரும்பும்போதுதான் தனக்கு மரணம் ஏற்படும் என்னும் சாகாவரம் பெற்றவன். அரசியல் நெறி, ராஜ நீதி நன்கு கற்றவன். எனினும் தனக்கென எதுவும் இல்லாமல் தன் தந்தைக்காக, தனது சகோதரர்களுக்காக, தனது சகோதரர்களின் பிள்ளைகளுக்காக நாட்டிற்காக அத்தினாபுரத்தின் நலனுக்காக தனது வாழ்நாட்களை அர்ப்பணித்தவன். திருமணமே செய்து கொள்ளாமல் தியாகம் செய்து தனியாக வாழ்ந்தவன். இத்தகைய தியாக சீலர்கள் பாரத நாட்டில் பலர் உண்டு. அது பாரதத் தாயின் தியாக உள்ளம். "தந்தை இனி துறத் தான் அரசாட்சியும் தையலர் தம் உறவும் -இனி இந்த உலகினில் விரும்புகிலேன் என்ற தெம்மனை செய்த வுள்ளம்." என்று பாரதி பாடியுள்ளான். உலகின் துன்பதுயரங்கள் தீர அன்பு வழியொன்றே வழி என்பது புத்தன் மொழியாகும்.