பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி-புதிது.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதப் பண்பாட் டுத் தளத்தில் | | | தி 비 சீனிவாசன் "பூரண ஞானம் பொலிந்த நன்னாடு புத்தர் பிரான் அருள் பொங்கிய நாடு" என்று பாரதி மற்றொரு இடத்தில் பாடுவதைக் காணலாம். மகாபதுத்ணின் அன்பு மொழியும் அருள் மொழியும் பாரத தேவியின் மொழியாகும். "அன்பு சிவம் உலகத்துயர் யாவையும் அன்பினிற் போகுமென்றே - இங்கு முன்பு மொழிந்துலகு ஆண்டதோர் புத்தன் மொழி எங்கள் அன்னை மொழி' என்று பாரதி கூறுகிறார். மிதிலையை ஆண்ட ஜனகன் மதியூகம் மிக்கவன். ராஜரிஷி என்னும் பட்டம் பெற்றவன். சகல வேதங்களையும் சாத்திரங்களையும் கற்றவன். ஜனகன் மதி பாரத தேவியின் மதி என்று பாரதி கூறுகிறான். "மிதிலை எரிந்திட வேதப் பொருளை வினவும் சனகன் மதி - தன் மதியினில் கொண்டதை நின்று முடிப்பது வல்ல நம் அன்னை மதி." என்று பாரதி தன் கவிதையில் கூறுகிறார். கவிதையில் புகழ் பெற்றது காளிதாசன் கவிதை. அக்காளிதாசன் கவிதை மீது மீளாத பற்று கொண்டவர் பாரதி. கற்றாரைக் காமுறுவர். காளிதாசன் உலக மகாகவிஞர்களில் ஒருவன் எனப் புகழ்பெற்றுள்ளான். காளிதாசனைப்பற்றிப் பல இடங்களிலும் பாரதி பெருமையுடன் குறிப்பிடுகிறார். காளிதாச "சாகுந்தலம்" ஒரு அமர காவியம்."கம்பன் என்றொரு மானிடன் வாழ்ந்ததும் காளிதாசன் கவிதை புனைந்ததும்" எனபாரதிதனது சுயசரிதைப் பாடல்களில் குறிப்பிடுகிறார். "தெய்வீக சாகுந்தலம் என்னும் நாடகம், செய்தது எவர் கவிதை - அயன் செய்வதனைத்தின் குறிப்புணர் பாரத தேவி அருட் கவிதை' என்று பாரதி பாடுகிறார். Յt; வையத்தலைமை பாரதி தேவியின் பன்முகம் கொண்ட பெருவடிவத்தை பாரதி தனது கவிதைகளில் வடித்துக் காட்டுகிறார். பாரதத் தாயின் வீரம், மந்திர பலம், அறிவாற்றலை வெளிப்படுத்தும் கைத்திறன், சீரிய சொற்கள், ஒளிமிக்க பிள்ளைகளைப் பெற்ற வயிறு. கண்டீவம் ஏந்திய தோள். தியாக உள்ளம், அன்பு மொழி, யூகமதி, கவிதைத்திறன், இவையனைத்தும் பாரத தேவியின் பண்பாட்டு தளத்திலிருந்து எழுந்தவை. அந்த வழியில், "முன்னைப் பார்த்தன் கண்ணன் இவர் நேரா என்னை உய்யக் கொண்டருள வேண்டும்-அடி உன்னை கோடி முறை தொழுதேன்-இனி வையத் தலைமை எனக் கருள்வாய் என்று பார்த்தன் கண்ணன் வழியில் உலகத்தின் தலைமை எனக்கு வேண்டும் என்று வரம் கேட்டு உலகிற்குப் புது நெறி காட்டி உலகத் தலைமையை பாரதம் ஏற்க வேண்டும் என்பது பாரதியின் விருப்பமும் கனவுமாகும். கண்ணனைப் பற்றி கண்ணன் பாரதியின் உயிர் கண்ணனைத் தெய்வமாகவும், தெய்வீகப் பாத்திரமாகவும், உணர்ந்து பாரதி பாடுகிறான். ஆழ்வார்களும் மற்ற பக்தர்களும் கண்ணனைத் தங்கள் குல தெய்வமாக வரித்து பக்தி கொண்டு கண்ணனிடம் சரணடைந்து பாடினார்கள். கண்ணனைக் குழந்தையாக, பாலகனாக விளையாட்டுப் பிள்ளையாகத் தங்கள் காதலனாக, நாயகனாக வரித்துப் பாடினார்கள், பாடி உருகினார்கள். கண்ணனுடன் கலந்து அவனது மலரடிகளில் சேர்ந்தார்கள். பாரதி கண்ணனை சர்வ சக்தியாகக் கண்டான். தெய்வ சக்தியாக மட்டுமல்லாமல் தெய்வ வடிவில் தெய்வீகத் தன்மை கொண்ட பல்வேறு சக்திகளாகக் கண்டான். பாரதி கண்ணனைத் தன் உயிருக்கும் உயிரான கண்ணம்மாவாகவும் கண்டான். கண்ணனைத் தோழனாக, தாயாக, தந்தையாக, சேவகனாக, அரசனாக சீடனாக, குருவாக, விளையாட்டுப் பிள்ளையாக, காதலனாக, காந்தனாக, ஆண்டவனாக, கண்ணம்மாவைக் குழந்தையாக, காதலியாக, குல தெய்வமாக, அப்படிக் கண்ணனைப் பல வடிவங்களிலும் பாடியுள்ளது பாரதியின் தனிச் சிறப்பாகும்.