பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி-புதிது.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

WIUT&T Ravidreamsbot (பேச்சு) 15:46, 12 மார்ச் 2016 (UTC)": ~", டுத் தளத்தில் பாரதி அ. சீனிவாசன் கண்ணன் என் தோழன் என்று தனது கவிதைக்குத் தலைப்பிடும் போது பாதி தன்னைப் பார்த்தனாகக் கருதிக்கொள்கிறான். கண்ணனும் பார்த்தனும் பாதக் கதையில் இணையானவர்கள், இரட்டையர்கள், நர நாராயணர்கள். தத்துவ ஞான நோக்கின் படி கண்ணன் பரமாத்மா, பார்த்தன் ஜீவாத்மா. கண்ணன் கடவுள், பார்த்தன் பக்தன். போர்க்களத்தில் பார்த்தன் வில் வீரன், கண்ணன் சாரதி. தத்துவ போதனையில் கண்ணன் குரு. பார்த்தன் சீடன், பறவில் கண்ணனுக்குப் பார்த்தன் அத்தை மகன், மைத்துனன், தங்கையின் கணவன். துன்பத்தில் துணைவன், வாழ்வில் தோழன். தோழமையின் சிறப்பை பாரதி இங்கே கூறுகிறார். கண்ணனுடைய தங்கை பத்திரையும் பார்த்தனும் ஒருவருக்கொருவர் உயிருக்கு உயிராக நேசித்தனர். காதல் கொண்டனர். திருமணம் செய்து கொள்ள விரும்பினர். ஆனால் கண்ணனுடைய அண்ணன் பலராமன் சுபத்திரையை துரியோதனனுக்கு மணம் முடித்துக் கொடுக்க வாக்குக் கொடுத்துவிட்டார். இதையறிந்து இரகசியமாக இரவோடு இரவாக சுபத்திரையைத் தூக்கிக் கொண்டு செல்வதற்கு பார்த்தனுக்கு கண்ணன் உதவி செய்கிறான். இது ஒரு தோழன் செய்யும் உதவியாகும். "பொன்னவிர் மேனிச் சுபத்திரை மாதை புறங் கொண்டு போவதற்கே - இனி என்ன வழியென்று கேட்கில் உபாயம் இரு கணத்தே உரைப்பான்" ான்று பாரதி கூறுகிறான். போர்க் களத்தில் பார்த்தனுக்கு முதன்மையான எதிரி கர்ணன். அக்கர்ணன் மகாவீரன். அவன் பரசுராமனுடைய சீடன். மிகப் பெரிய அளவில் பராக்கிரம் படைத்தவன். தானத்தில் சிறந்த புண்ணியன்.போரில் பார்த்தனைக் கொல்லக் கூடிய சக்தி ஆயுதங்களை வைத்திருப்பவன். தன்னை யாரும் கொல்ல யாத அளவில் தனது உடம்பில் கவச குண்டலங்களைப் பாதுகாப்பாகக் காண்டவன். அம்மாவீரன் கர்ணனை போர்க்களத்தில் போர் விதிகளின் படி நியாயமான வழிமுறைகளில் கொல்வது எளிதல்ல. யுத்த தர்மத்தின்படி போர் நடத்தினால் அவனைக் களத்தில் கொல்ல முடியாது. வீட்டுமனும் துரோணனும் வீழ்ந்த பின்னர் கவுரவர் படையின் தலைமைத் நாபதி கர்ணன். அவனுக்கும் பார்த்தனுக்கும் கடும் போர் நடைபெறுகிறது. அர்ஜுனன் தனது வல்லமை முழுவதையும், ஆற்றல் அனைத்தையும். சக்தி ஆயுதங்கள் தெய்வீகப் படைகள் அனைத்தையும் பயன்படுத்தி வீரப்போர் நடத்தினான்.கண்ணனை சாரதியாகக் கொண்டு போர்க்களத்தில் அத்தனை சாகசங்களையும் செய்து பார்க்கிறான். ஆயினும் கர்ணனை அசைக்க முடியவில்லை. பார்த்தனைக் கொல்வதற்கு அவனுடைய தலைக்குக் குறி வைத்து கர்ணன் நாகபாணத்தை ஏவினான். கண்ணன் அதைக் கண்டு தனது தேரை அழுத்தி, நாகக் கணையின் குறி தவறச் செய்து பார்த்தனைக் காப்பாற்றி விட்டான். தலைக்கு வந்த ஆபத்து தலைப்பாகையுடன் போய்விட்டது. நாகக் கணை பார்த்தனுடைய கிரீடத்தை அடித்துக் கொண்டு போய் விட்டது. போர் நீடித்துக்கொண்டிருந்தது. கர்ணனைக் கொல்வதற்கு என்ன உபாயம் என்று பார்த்தன் கண்ணனைச் சரணடைந்தான். தோழன் கண்ணன் அதற்கான உபாயங்களையும் தந்திரங்களையும் செய்தான். கர்ணனுக்குப் பாதுகாப்பாக் இருந்த கவச குண்டலங்களையும், புண்ணியம் அனைத்தையும் தானமாக வாங்கச் செய்து போர்க்களத்தில் கர்ணன் மிகவும் சங்கடமாக இருந்த நேரத்தில் நிராயுதபாணியாக போரைத் தொடர முடியாமல் இருந்த நேரத்தில் அவன் மீது பார்த்தனைக் கொடு கணை ஒன்று ஏவச் செய்து அவ்வாறு சூதாகக் கர்ணன் கொல்லப் பட்டான். "கண்ணன் வில்லாளர் தலைவனைக் கொன்றிடக் காணும் வழி யொன்றிலேன் வந்திங் குன்னை அடைந்தனன் என்னில் உபாயம் ஒரு கணத்தே யுரைப்பான்" என்று தோழன் கண்ணனைப் பற்றி பாரதி கூறுகிறார். தொடர்ந்து கண்ணன் என் தோழன் என்னும் கவிதை வரிகளில் கண்ணனுடைய சிறப்புகளைப் பற்றி ஒரு தோழன் என்னும் முறையில் அவன் புரியும் சாதனைகளைப் பற்றிப் பாரதி பல வரிகளில் பாடுகிறார். அதில் ஒவ்வொரு வரியும் ஒரு கோடி பெறும். நமது உள்ளத்தை நெகிழ வைக்கும், நமது அறிவை வளர்க்கும். 'கானகத்திலே சுற்றிக் கொண்டிருந்த போது நெஞ்சில் கலக்கம் ஏற்படாதவாறு உதவி செய்வான். பெரும் சேனைத்தலை நின்று போர் செய்யும்போதினில் தேர்நடத்திக்கொடுப்பான் என்றான். ஊனைவருத்திடும் நோய்வரும் போதினில் உற்ற மருந்து சொல்வான். நெஞ்சம் ஈனக்கவலைகள் எய்திடும் போதில் இதம் சொல்லி மாற்றிடுவான்' என்று கூறுகிறார். "பிழைக்கும் வழி சொல்ல வேண்டும் என்றால் ஒரு பேச்சினிலே சொல்லுவான்" 'உழைக்கும் வழி, வினை யாளும் வழி பயன் உண்ணும் வழியுரைப்பான்" 'அழைக்கும் பொழுதினிலே போக்கு