பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி-புதிது.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Liter. பங்ாங் டுத் தாத்தில் பாதி அ. சீனிவாசன் பாரதப்பண்பாட்டுத்தளத்தில் பாதி முதல் பதிப்பின் முன்னுரை மகாகவிசுப்பிரமணியபாரதி இருபதாம் நூற்றாண்டின்தொடக்கத்தில் தென் பாரதத்தில் தமிழ்நாட்டில் வெளிப்பட்ட மாபெரும் தமிழ் புலவளாகும். அவருடைய மொத்த வாழ்நாள் 1882 டிசம்பர் 11 பிறப்பு: 1921 செப்டம்பர் 12 மாறவு ஆக 39 ஆண்டுகள் முழுமை பெறவில்லை. இதில் சுமார் 20 ஆண்டுகளுக்கும் குறைவானது தான் அவருடைய பொது வாழ்க்கை என்று கூறலாம். இந்த இருபதுக்கும் குறைவான ஆண்டுகளுக்குள் தான் அவருடைய மகத்தான புகழ்மிக்க பெருமைப்படத்தக்க கவிதைகளும் உரைநடைக் கட்டுரைகளும் கதைகளும் இதர எழுத்துரைகளும் வெளிப்பட்டுள்ளன. 1920-ஆம் ஆண்டுகள், 30-ஆம் ஆண்டுகளில் தமிழகத்தில் பாரதத்தின தேசிய இயக்கங்களும் போராட்டங்களும் பரவியபோது. தேசபக்தர்களுக்கிடையிலும், தேசீய விடுதலை இயக்கத்துடன் தொடர்பு கொண்டிருந்த மக்களுக்கிடையிலும் பாரதியாரின் பாடல்கள் பிரபலமாயின ஆயினும் பாதியின் முழு வடிவம் தமிழ் மக்களுக்கிடையில் வெளிப்படுவதில் பல பிரச்சினைகள் இருந்திருக்கின்றன. இன்று மகாகவி பாரதி தமிழ் கூறும் நல்லுலகத்தில் தமிழ் மக்களின் உள்ளங்களில், வீடுகளில் இடம் பெற்றுள்ள மாபெரும் கவிஞனாகும். இருப்பினும் பாரதியை தமிழ் மக்களுக்கிடையிலும். இந்திய மக்களுக்கிடையிலும், உலக மக்களுக்கிடையிலும், இன்னும் அதிகமாக அறிமுகப்படுத்தவேண்டிய பணிகள் ஏராளமாக இருக்கின்றன. அவை மேலும் தொடர வேண்டும். பாரதியைப் பற்றி ஏராளமான பல நூல்களும் ஆய்வுரைகளும் வெளியாகியுள்ளன.பாதி விழாக்களும் ஏராளமாக நடைபெற்றுள்ளன. மேலும் நடைபெற்று வருகின்றன. பாரதி பெயரில் பாதியின் கருத்துக்களைப் பாப்பும் பல மன்றங்களும் அமைப்புகளும்இன்றுநாடெங்கும் செயல்பட்டுவருகின்றன. தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் மும்பை, டில்லி கொல்கத்தா, பெங்களுரு. ஐதராபாத் நாகபுரி, ஆகமதாபாத் முதலிய நாட்டின் முக்கிய பல நகரங்களிலும் பாரதி பெயரிலான அமைப்புகளும் மன்றங்களும் சங்கங்களும் செயல்பட்டு வருகின்றன. ஆயினும் மகாகவி பாரதியின் பெயரும் புகழும், தியாகமும் பரவியுள்ள அாவில் அவருடைய கவியுள்ளமும் கருத்துக்களின் ஆழமும் விரிவும் மக்களிடத்தில் பரவுவதில் இன்னும் பெரிய அளவில் இடைவெளியிருக்கிறது. 1982-ஆம் ஆண்டில் பாதியின் பிறந்த நாள் நூற்றாண்டு விழா நடைபெற்ற போது பாதி சற்று அதிகமாக அறிமுகமானார். பல அறிஞர்களும் அன் பர்களும் பாரதியைப் பற்றிப் பல செய்திகளை வெளிப்படுத்தினார்கள். பாரதி இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தைச் சேர்ந்தவர் என்னும் முறையில் அவருடைய சம காலத்தவர்களும் அவரை நேரில் அறிந்தவர்களும் வெளிப்படுத்திய பல செய்திகளும் தகவல்களும் அவரைப் பற்றிய, அவருடைய வாழ்க்கை விவரங்களைப் பற்றிய, அவரது பணிகளையும் படைப்புகளையும் பற்றிய விவரங்களை அறிந்துகொள்வதற்குப்பயனுள்ளதாக அமைந்திருக்கின்றன. சுப்ரமணிய பாதி ஒரு மாபெரும் கவிஞன். ஒரு எழுத்தாளன், ஒரு பத்திரிகையாளன், ஒரு தேச பக்தன், ஒரு சுதந்திரப் போட்டவீரன் என்னும் முறையில் அவருடைய படைப்புகளும் கருத்துக்களும் இன்னும் விரிவாக மக்களிடம் செல்ல வேண்டும். நமது கல்வி நிலையங்களுக்குள் செல்ல வேண்டும் பாதி ஒரு புரட்சிகரஜனநாயகப்பெரும்புலவன் என்னும் முறையில் அவருடைய கவியுள்ளத்தின் விரிவை நாம் காண வேண்டும். கம்பன், வள்ளுவர். இளங்கோவடிகள் வரிசையில் பாதி உயர்ந்து நிற்பதை நாம் காண்கிறோம். பாரதி சிந்தனைகளின் சிறப்பை அதன் அனைத்துப் பரிமாணங்களிலும் கண்டுதெளியவேண்டும் பாதியின் படைப்புகளைப்பற்றி விளக்கியும், விரிவுபடுத்தியும் எண்ணற்ற பல நூல்களும் வெளிவர வேண்டும். பாதி பாடியுள்ள ஒவ்வொரு பகுதி பாடல்களுக்கும் விளக்கவுரைகள் வெளி வா வேண்டும்.நமது பல்கலைக்கழகங்களில் கம்பன்.வள்ளுவன், இளங்கோவடிகள், பாரதி ஆகியோருக்கு தனித்துறைகள் நிறுவி ஆய்வுகளும் சிறப்பு நிகழ்ச்சிகளும் நடத்த வேண்டும். பாரதி ஒரு அறிய நூலை, ஒரு சிறப்பான பெரிய காவியத்தை முக்கிய அறநெறிக் கருத்துக்களைக் கொண்ட தொகுப்பையோ மட்டும் . ல்லை. பாரதி, பாரத பூமி இதுவரை தோற்றுவித்திருக்கும் நல்லன அனைத்தையும் கிரகித்து. அல்லன.அனைத்தையும் நிராகரித்து ஒரு புதியதிசைவழியை, சமுதாய முன்னேற்றத்திற்கும்.மேம்பாட்டிற்குமான திசைவழியைக் காட்டியுள்ளான். ஒரு புதிய மார்க்கத்தைக் காட்டியுள்ளான். பாரதிபாரதநாட்டின்பண்பாட்டுதளத்தில் நின்று நாட்டு மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், வழி காணவும், முன்னேற்றம் காணவும் தனது கவிதைகளின் உள்ளடக்கத்தை உருவாக்கி வளப்படுத்தி வெளிப்படுத்தியிருக்கிறார். 1980-ம் ஆண்டுகளில் நான் ஜனசக்தி நாளிதழின் தலைமை ஆசிரியராக இருந்தபோது பாரதி நூற்றாண்டு விழாவையொட்டிஜனசக்தி பாரதி சிறப்புமலர் கொண்டு வருவதற்கு முயற்சிகள் எடுத்து அரிய கருத்துக்கட்டுரைகள் நிறைந்த ஒரு அரிய சிறப்புமலர் கொண்டு வந்தோம். 1982-83-ம் ஆண்டு முழுவதிலும் ஜனசக்தி நாளிதழில் பாரதியின் பல பரிமாணங்களைப் பற்றியும் பல கட்டுரைகளும் வெளியிடப் பட்டன. சிறப்பு மலரிலும் பல கட்டுரைகள் எழுதியிருந்தனர். அந்த சிறப்பு மலரை உருவாக்கி வெளியிடுவதில் பாதியின் புதிய கருத்துக்களில் முழுமையாக ஈடுபாடு கொண்டிருந்த அறிஞர் ஆர்.கே. கண்ணன் அவர்கள் பெரும் துணையாக இருந்து சிறந்த ஆலோசனைகளைத் தெரிவித்து உதவியிருந்தார்.