பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி-புதிது.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதப் பண்பாட்டுத் தளத்தில் பாரதி அ. சீனிவாசன் துறந்த நடைகளுடையான்-அவன் சூனியப் பொய்ச் சாத்திரங்கள் கண்டு நகைப்பான்' என்று பாரதி குறிப்பிடுகிறார். 'ஏழைகளைத் தோழமை கொள்வான்-செல்வம் ஏறியார் தமைக் கண்டு சீறி விழுவான் தாழ வரும் துன்ப மதிலும் - நெஞ்சத் தளர்ச்சி கொள்ளாதவர்க்குச் செல்வமளிப்பான்." என்றும், 'இன்பத்தை இனிதெனவும் - துன்பம் இனிதில்லையென்று மவன் எண்ணுவதில்லை, அன்பு மிக வுடையான்-தெளிந் தறிவினில் உயிர்க்குலம் ஏற்ற முறவே அன்புகள் பல புரிவான்' என்றும் கூறுகிறார். வேதங்களைப் பற்றி பாரதி இக்கவிதையில் தனது தனித்தன்மையான கருத்தை மிகவும் சிறப்பாக எடுத்துக் கூறுகிறார். இதை ஏற்கனவே முதல் அத்தியாயத்தில் மேற்கோள் காட்டியிருக்கிறோம். இங்கு தொடர்ச்சி கருதி மீண்டும் அவ் வரிகளை நினைவு கொள்ளலாம். "வேதங்கள் கோத்து வைத்தான் - அந்த வேதங்கள் மனிதர் தம் மொழியில் இல்லை வேதங்கள் என்று புவியோர் - சொல்லும் வெறும் கதைத்திரளில் அவ்வேதமில்லை வேதங்கள் என்ற வற்றுள்ளே - அவன் வேதத்தில் சில சில கலந்ததுண்டு வேதங்கள் அன்றி ஒன்றில்லை - இந்த மேதினி மாந்தர் சொலும் வார்த்தைகளெல்லாம்" என்று பாரதி குறிப்பிடுவது சிந்திக்கத்தக்கதாகும். வேதங்கள் என்பது மெய்யறிவாகவும், பொய்க்கதைகள் பல கலந்தும் மக்களிடம் பரவியுள்ளன. நமது வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள், இதிகாசங்கள், கதைகள், இலக்கியங்கள் முதலிய பலவும் அவைகளிலுள்ள அவைகளில் கலந்துள்ள கருத்துகளும் இடைச் செருகல்களும் 40 மக்களிடையில் இடைவிடாது உரையாடப்பட்டு வந்திருக்கின்றன. அது வாழையடி வாழையாக பாரம்பரை பரம்பரையாக பரவி வந்துள்ளன. "இயற்கை விதியை அனுசரித்து வாழ வேண்டும். அதனால் எவ்விதமான தீமையும் எய்த மாட்டாது- எனவே சாதாரண புத்தியே பரம மெய்ஞ்ஞானம் இதனை ஆங்கிலேயர் காமன்சென்ஸ் (பொது அறிவு) என்பர். சுத்தமான, மாசுபடாத கலங்காத, அஞ்சாத, பிழைபடாத சாதாரண அறிவே பரம மெய்ஞ்ஞானமாகும் என்று பாரதி தனது பகவத்கீதை நூலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார். அதுவே பொது அறிவு என்று அனைவராலும் குறிப்பிடப்படுவதாகும். நாலு குலங்கள் பற்றி பல இடங்களிலும் பாரதி தனது கருத்துக்களை மிகத் தெளிவாக முன் வைத்துள்ளார். அது பற்றி இக்கவிதையில் முன்வைத்துள்ள வரிகளையும் ஏற்கனவே முந்திய அத்தியாயத்தில் மேற்கோளாகக் காட்டியுள்ளோம். தொடர்ச்சி கருதி மீண்டும் இங்கு குறிப்பிட்டுள்ளோம். திரும்பத் திரும்ப இக் கருத்துக்களைக் குறிப்பிட்டாலும் கூறியது கூறல் என்னும் குற்றம் ஏற்படாமல் அவ்வரிகளில் பொதிந்துள்ள கருத்துக்களை மீண்டும் மீண்டும் படித்தும் சிந்தித்தும் செயல்படுத்தத் தக்கனவுமாகும். "நாலு குலங்கள் அமைத்தான் - அதை நாச முறப் புரிந்தனர் மூட மனிதர் சீலம் அறிவு தர்மம்- இவை சிறந்தவர் குலத்தினில் சிறந்தவராம்,' மேலவர் கீழவர் என்றே - வெறும் வேடத்தில் பிறப்பினில் விதிப்பனவாம் போலிச் சுவடியை எல்லாம் - இன்று பொசுக்கி விட்டால் எவர்க்கும் நன்மை உண்டென்பான்" என்று தந்தை கண்ணன் கூறுவதாகப் பாரதி குறிப்பிடுகிறார். "வயது முதிர்ந்து விடினும் எந்தைக்கு வாலிபக்களை மாறவில்லை அது என்றும் மாறுவதில்லை. துயரில்லை, மூப்புமில்லை என்றும் சோர்வில்லை, நோய் ஒன்றும் தொடுவதில்லை, பயமில்லை, பரிவொன்றில்லை. எவர் பக்கமும் நின்று எதிர்ப்பக்கம் வாட்டுவதில்லை, நயம் மிகத் தெரிந்தவன், நடு நின்று விதிச் செயல் கண்டு மகிழ்பவன், கண்ணன் என்பது பாரதியின் வாக்கு. இவையெல்லாம் பாரதி மீண்டும் மீண்டும் அழுத்திக் கூறும் மூல மந்திர வரிகளாகும். "அன்பினைக் கைக்கொள்ள என்பான் துன்பம்