பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி-புதிது.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதப் பண்பாட்டுத் தளத்தில் பாரதி அ. சீனிவாசன் "கண்ணை இமையிரண்டும் காப்பது போல் என் குடும்பம், வண்ண முறக் காக்கின்றான் வாய்முணுத்தல் கண்டறியேன்." "விதி பெருக்குகிறான், வீடு சுத்த மாக்கு கிறான் தாதியர் செய் குற்றமெலாம் தட்டி அடக்குகிறான் மக்களுக்கு வாத்தி, வளர்ப்புத்தாய் வைத்திய னாய் ஒக்கநயம் காட்டுகிறான் ஒன்றும் குறைவின்றிப் பண்டம் எலாம் சேர்த்து வைத்துப் பால் வாங்கி மோர் வாங்கிப் பெண்டுகளைத் தாய் போல் பிரிய முற ஆதரித்து நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரி யனுமாய், பண்பிலே தெய்வமாய்ப் பார்வை யிலேசேவகனாய், எங்கிருந்தோ வந்தான்" என்றெல்லாம் கண்ணனுடைய சேவையைப் பாராட்டி, "இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்" என்று போற்றி பெருமைப்பட்டு, 'கண்ணன் என்னகத்தே கால் வைத்த நாள் முதலாய் எண்ணம் விசாரம் எதுவும் அவன் பொறுப்பாய் செல்வம், இளமாண்பு, சீர் சிறப்பு, நற்கீர்த்தி கல்வி, அறிவு, கவிதை, சிவயோகம், தெளிவே வடிவாம் சிவஞானம்" என்றும், ஒளி சேர் நலமனைத்தும் ஓங்கி வருகின்றன காண், 'கண்ணனை நான் ஆட்கொண்டேன் கண் கொண்டேன் கண் கொண்டேன்" என்று பரவசமடைந்து பாடுகிறான் பாரதி. சிறப்புமிக்க இந்தக் கவிதை வரிகளைப் பாடப்பாடத் தெவிட்டாத சுவையும் அறிவுக்கு விருந்தும் ஆழ்ந்த பொருளும் கிடைக்கிறது. கண்ணன் என் அரசன் கண்ணன் என் அரசன் என்னும் தலைப்பிலான கவிதையில், "பகைமை முற்றி முதிர்ந்திடும் வரையில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பான். சிரித்துக் கொண்டே பெருமையுடன் நாட்கள், மாதங்கள். ஆண்டுகள் பொறுத்துக் கொண்டிருப்பான். கண்ணன் வந்து பகைமை ஒழிந்து காண்பது அரிதாகும். நாமும் அதை நினைந்து எண்ணமிட்டு எண்ணமிட்டு யுகங்களாகிவிடும். படைகளைச் சேர்ப்பது, பரிசனம் சேர்ப்பது பணமுண்டாக்குவது. எதுவும் செய்திடான், இடையன். வீரமில்லாதவன். பயந்தவன் என்றெல்லாம் எவரும் ஏசினாலும் நாண மாட்டான். தன்னைக் கொல்வதற்கு பூதத்தை அனுப்பும் மாமன், கோலுயர்த்தி உலகை ஆண்டு கொண்டுகளித்திருப்பதைக் கண்டும் காணாமல்பாட்டிலும் மாதர் கூட்டிலும் மோகமுற்று பொழுதுபோக்குவான். அவன் காலைப் பற்றிக்கொண்டு நாம் கதி நமக்கென்று காட்டுவாய் எனக் கேட்டால் நாலில் ஒன்று பலித்திடும் என்று கூறிச்செல்வான். அதன்பொருள் நமக்கு விளங்காது. அவன் வலுவை நம்பி நாம் இருக்க நாணமில்லாமல் அவன் எங்கோ போய் பதுங்கிக் கொள்வான். தீமையை விலக்கவும், செல்வான், சிறுமை கொண்டு ஒளிந்து ஓடவும் செய்வான். "தந்திரங்கள் பயிலவும் செய்வான், சவுரியங்கள் பழகவும் செய்வான். மந்திரங்கள் பலவின் திறனும் காட்டவான். வலிமையின்றி சிறுமையிலும் வாழ்வான். 'காலம் வந்து கைகூடும் போது கணத்திலே புதிய தோற்றம் எடுத்து ஆலகால விஷம்போல சீறி எழுந்து அகிலம் முழுவதையும் அசைத்திடுவான்" என்றெல்லாம் கண்ணன் என் அரசன் என்னும் தலைப்பில் விவரித்துக் கூறி, காலம் வந்துற்றபோது துள்ளி எழுந்து, "வேரும் வேரடி மண்ணும் இல்லாமலே