பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி-புதிது.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_. ாட்டுத் தளத்தில் பாரதி அ. சீனிவாசன் _றந்த உணவாகும். இந்தியப் பண்பாட்டுத்தளம் காதலுக்கும் குடும்ப -ழ்க்கைக்கும் ஒரு தனித் தன்மையான இலக்கணத்தையே வகுத்துள்ளது. வாத்சாயனாரின் காம சூத்திரமும், வள்ளுவரின் இல்லறவியலும் மத்துப்பாலும், மிகச் சிறப்பான தனி இலக்கியங்களாகும். இரதியையும். னையும் உருவாக்கி காதலின் இயல்பை, இனிமையை, இணைப்பை தும் அழகியலை தெய்வீக நிலைக்கு உயர்த்தியுள்ள சிறப்பும் மயும் இந்திய மரபுக்குண்டு. "சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலை" என்னும் சொற்களில் தான் ாறி எத்தனை உயிரோட்டமான கருத்தைக் கூறியுள்ளார் என்பது தைகளின் பெருமையாகும். கடைசியில் கண்ணம்மாவைக் குல தெய்வமாக்கி, கண்ணனைச் சரணடைந்து உலகத்து நன்மையை வேண்டுவது மிகவும் அற்புதமான கவிதையாகும். சரணாகதி தத்துவம் இந்து தர்மத்தின் தரிசனத்தில் ஒரு தனித்தன்மையான தத்துவமாகும். கண்ணம்மா பாரதியின் குல தெய்வம். பாரத நாட்டின் குல தெய்வம். பண்ணன் பாரத நாட்டின் குடும்ப பெயர். பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும் என்னைக் கவலைகள் நெருங்காமல் காப்பாற்றுவாயாக என்றும், ாது நெஞ்சத்தில் புகுந்துள்ள மிடிமையையும் அச்சத்தையும் கொன்று ழித்திடுவாய் என்றும், துன்பம் இனி இல்லை. சோர்வில்லை. ல்வியில்லை. அன்பு நெறியில் அறங்கள் வளர்ந்திட வேண்டும் என்றும் 燃 நாட்டுக, தீமையை ஒட்டுக என்றும் வேண்டி பாரதி தனது குல ய்வத்திடம் முறையிடுகிறார், சரண்டைகிறார். புன்னாகவராளிராகத்தில் பாரதி தனது குல தெய்வத்தை நோக்கிப்பாடும் இந்த அருமையான பாடல் பாரத நாடு முழுவதிலும் வீடு தோறும் நாள் தோறும் பாடவேண்டிய பாடலாகும். 1. நின்னைச் சரணடைந்தேன் - கண்ணம்மா நின்னைச் சரணடைந்தேன் 2. பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும், என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று (நின்னை) 3. மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில் குடிமை புகுந்தன கொள்ளவை போக்கென்று (நின்னை) 4. தன் செயல் எண்ணித் தவிப்பது தீர்த்திங்கு நின் செயல் செய்து நிறைவு பெறும் வணம் (நின்னை) 5. துன்பமில்லை சோர்வில்லை தோற்பில்லை அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட (நின்னை) 6. நல்லது தீயது நாமறியோம் அன்னை நல்லது நாட்டுக தீமையை ஒட்டுக (நின்னை) என்று பாடி கண்ணன் பாட்டுத் தொகுப்பை பாரதி நிறைவு செய்கிறார். பாஞ்சாலி சபதத்தில் பாரதி தமிழ் சாதிக்குப் புதிய வாழ்வுதரவேண்டும் என்று கங்கணம் கட்டிநிற்கும் பராசக்தியே என்னை இத்தொழிலில் தூண்டினாள் என பாஞ்சாலி சபதம் என்னும் காவியத்தைப் பாடத்தொடங்குகிறார் பாரதி. அடிமைப்பட்டபராசக்தி தனது அடிமை விலங்குகளை உடைத்தெரியத் தனது மக்களைத் தூண்டுவதற்காக இந்த சபதம் என்று கருத்தில் கொண்டு பாரதி பாஞ்சாலி சபதத்தைப் பாடுகிறார். பாரதப் பெருங்கதையின் தெய்விகப் பாத்திரங்களெல்லாம் இந்தக் காவியத்தில் வருகின்றனர். பிரம்மஸ்துதியும், சரஸ்வதி வணக்கமும், வாணியை வேண்டுதலும், பராசக்தி வணக்கமும், மீண்டும் சரஸ்வதி வணக்கமும் பாஞ்சாலி சபதக் காவியத்தில் பாரதி பாடும் கடவுள் வாழ்த்துப் பாடல்களாகும். "ஓம் எனப் பெரியோர்கள் - என்றும் ஒதுவதாய் வினை மோதுவதாய் தீமைகள் மாய்ப்பது வாய் - துயர் தேய்ப்பது வாய் நலம் வாய்ப்பது வாய்" என்று பாரதி பிரம்மஸ்துதி பாடலைத் துவக்குகிறார். பாஞ்சாலி சபதக்காவியத்தில் மூன்று தொடக்கங்களில் பாரதி வாணியை வேண்டுகிறார். காவியத்தின் தொடக்கத்தில் சரஸ்வதி வணக்கம். அதில் வாணியை உருவகப்படுத்துகிறார். அவளுடைய கண்கள் வேதங்கள். அவ்வேதங்களுக்குப் பல உரைகள் எழுதப் பட்டுள்ளன. அவ்வுரைகளே அவளுடைய கண்களில் இட்ட கருமை. அவளுடைய நுதல்கள் மதியின் கதிர்வீச்சுகள், அவளுடைய நீண்ட கூந்தல் சிந்தனைச் செல்வம். வாதங்களும் தர்க்கங்களும் அவளுடைய செவிகள். துணிவே அவளுடைய செவிகளில் அணிந்துள்ளதோடுகள். அவளுடைய நாசிகளே போதமாகும். அவளுடைய