பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி-புதிது.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொற்படு நயமறிவார் –இசை

               தோய்ந்திடத் தொகுப்பதின் சுவையறிவார்

விற்பனத் தமிழ்ப்புல வோர் – அந்த

               மேலவர் நாவெனும் மலர்ப்பதத்தாள்.  -- 

ஆதாரம்: https://www.projectmadurai.org/pm_etexts/pdf/pm0091.pdf பக்கம் 5/84

பாரதப் பண்பாட்டுத் தளத்தில் பாரதி அ. சீனிவாசன் வாய் பொங்கி வரும் பல சாத்திரங்களாகும். கற்பனையென்றும் தேன் சுவையான இதழ்களையும் பால் சுவையான காவியங்களைப் போன்ற கொங்கைகளையும், சிற்பம் முதலிய விஞ்ஞானத் தொழில் நுட்ப கலைத்திறன் உடைய கைகளையும் கொண்டவள். சொல் நயம் அறிந்த இசைத் தொகுப்புகளின் சுவையறிந்த தமிழ்ப் புலவர் என்னும் மேலோர்களின்நாவே அவளுடைய மலர்ப்பதங்கள்.இதுவே பாரதியினுடைய சரஸ்வதியின் அற்புத வடிவம். "வேதத் திரு விழியாள் - அதில் மிக்க பல்லுரையெனும் கருமை யிட்டாள். சீதக்கதிர் மதியே - நுதல் சிந்தனையே குழல் என்றுடையாள், வாதத் தருக்க மெனும் - செவி வாய்ந்த நற்றுணி வெனும் தோடணிந்தாள், போத மென்னாசியினாள் - நலம் பொங்கு பல் சாத்திர வாயுடையாள்" என்றும், "கற்பனை தேனிதழாள் சுவைக் காவியமெனும் மணிக் கொங்கை யினாள், சிற்ப முதற் கலைகள் - பல தேமலர்க் கரமெனத் திகழ்ந்திருப்பாள் சொற்படு நயமறிவார்-இசை தோய்ந்திடத் தொகுப்பதின் சுவையறியார். விற்பனத் தமிழ்ப் புலவோர்- அந்த மேலவர் நாவெனும் மலர்ப்பதத்தாள்" என்றும் பாடி மகிழ்ந்து வானியைச் சரண் புகுந்தேன் என்று கடவுள் வணக்கத்தில் பாரதி கூறுகிறார். பாஞ்சாலி சபதத்தின் இரண்டாம் பாகத்தின் கடவுள் வணக்கத்திலும் முதலில் பராசக்தி வணக்கத்தில் "ஆங்கொரு கல்லை வாயிற்படியென்று அமைத்தனன் சிற்பி மற்றொன்றை ஓங்கிய பெருமைக் கடவுளின் வடிவென்று உயர்த்தினான் உலகினோர் தாய் நீ உனக்கு எவரை எங்ங்னம் சமைத்தற்கு எண்ணமோ? அங்ங்னம் சமைப்பாய், உன்னை நான் சரண்டைந்தேன் என்னை இருங்கலைப் புலவனாக்கு வாயாக' என்று பராசக்தியை வேண்டிக் கொண்டு அடுத்து சரஸ்வதி வணக்கா கூறி அக்கவிதையில் மிகவும் நுட்பமான முறையில் அறிவியலையும் தத்துவ இயலையும் இணைத்துத் தனது மெய்ப்பொருள் விளக்கத்தைப் பாரதி, கூறுவதைக் காணலாம். "இடையின்றி அணுக்களெலாம் சுழலுமென இயல் நூலார் இசைத்தல் கேட்டோம், இடையின்றி கதிர்களெல்லாம் சுழலுமென வானூலார் இயம்பு கின்றார். இடையின்றி தொழில் புரிதல் உலகினிடைப் பொருட்கெல்லாம் இயற்கை யாயின் இடையின்றி கலை மகளே நினதருளில் எனதுள்ளம் இயங் கொணாதோ' என்று பாரதி கலைமகளை வேண்டுகிறார். இதுவே பாரதப் பண்பாட்டின் வழியில் சிந்திக்கும் பாரதியின் தொடர்ச்சியான கருத்து வடிவமாக உள்ளத்தைக் காண்கிறோம். கதையில் அஸ்தினாபுரநகரையும் அந்நகரமக்களையும் பற்றிவர்ணிக்கும் போது "சிந்தனையில் அற முண்டாம் எனிற் சேர்ந்திடும் கலி செயும் மறமும் உண்டாம்." என்றும், "மெய்தவர் பலருண்டாம்-பொய் வேடங்கள் பூண்டவர் பலண்டாம்" என்றும் இருவகை மக்களும் அங்கு இருப்பதைப் பாரதி குறிப்பிடுகிறார். இது பாரதி கவிதை முறையின் எதார்த்தவாதப் போக்காகும். நல்லவர்களும் கெட்டவர்களும் எல்லாக் காலத்திலும் இருந்திருக்கின்றார்கள் என்பதைத் தெளிவாகக் குறிப்பிடுவது பாரதியின் கவிதை இயல்பாகும். 1Վ