பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி-புதிது.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதப் பண்பா டுத் தகத்தில் பாதி அ. சீனிவாசன் அது முதல் பாரதியைப் பற்றி, பாதியின் பல்வேறுபரிமாணங்களைப்பற்றிப் பல நூல்கள் எழுத வேண்டும். அவைகளை வெளியிட வேண்டும் என்ற எண்ணம் உருவாயிற்று. அந்த எண்ணத்தை நிறைவேற்றுவதில் வழக்கம்போல் பல சிரமங்கள் ஏற்பட்டன. ஆயினும் அந்த வழியில் இப்போது பாதி பற்றிய நூல்கள் பலவும் எழுதப்பட்டு அவை வெளியிடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.அதன்பகுதியாகவே பாரதப்பண்பாட்டுத்தளத்தில் பாதி என்னும் இந்த நூல் வெளியாகிறது. சென்னைக.க.நகரில் நான்குடியிருந்தபோது சிறந்ததமிழறிஞரும்இலக்கிய சொற்பொழிவாளருமானதிரு.புலவர் தமிழ்முடிஅவர்களைச்சந்தித்து அவருடன் கலந்துரையாடும்வாய்ப்பு ஏற்பட்டது.புலவர்தமிழ் முடிஅவர்கள்."பாதி வளர்ச்சி சங்கம்" என்னும் அமைப்பை நடத்திக் கொண்டிருக்கிறார். அந்த அமைப்பின் மூலம் வாரம் தோறும் சிறந்த சொற்பொழிவுகளை நடத்திக்கொண்டிருக்கிறார். அவருடைய சொற்பொழிவுகளைக் கேட்பதற்காக அக்கூட்டங்களில் நானும் கலந்து கொண்டேன். அப்போது பாதியைப் பற்றி ஒருநாள் நான் தனியாக ஒரு சிறப்புரைநிகழ்த்தவேண்டும் என்று என்னைவற்புறுத்திக்கேட்டுக்கொண்டார். அவருடையவற்புறுத்தலைத்தட்டமுடியாமல் நானும் ஏற்றுக்கொண்டு"பாரதப் பண்பாட்டுத் தளத்தில் பாரதி' என்னும் தலைப்பில் ஒரு நாள் பாதி வளர்ச்சி சங்கத்தின் கூட்டத்தில் சிறப்புரை நிகழ்த்தினேன். அந்த உரை ஓரளவு சிறப்பாகவே அமைந்திருந்தது. அதன் குறிப்புகளை நான் திரும்பவும் பார்த்த போது அதனடிப்படையில் அக்கருத்துக்களை விரித்து ஒரு நூலாகவே எழுதி விடலாம் என்று தீர்மானித்து இந்நூல் எழுதி முடிக்கப்பட்டது. இந்த நூலை,அச்சிட்டுவெளியிடுவதற்காகநிதி உதவிகேட்டுமாநில அரசின் தமிழ் வளர்ச்சித் துறைக்கு விண்ணப்பம் செய்யப்பட்டு அதன்மூலம் சிறந்த நூல்கள் வெளியிட நிதி உதவித் திட்டத்தின் கீழ் இந்த நூல் தேர்வு செய்யப் பட்டுள்ளது. இந்த நூலை சிறந்த முறையில் அச்சிடுவதற்கு மாணவர் மறு தோன்றி அச்சகத்தார் முன்வந்துள்ளார்கள். இந்த நூல் தொடர்பாக எனக்கு ஊக்கமளித்து. உதவி செய்துள்ள அனைத்து நண்பர்களுக்கும் எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நூலை வாங்கிப்படித்தும் அடுத்துவரும் நூல்களுக்கு ஆதரவளித்தும் எனக்கு ஊக்கமளிக்கும்படி வாசகர்களைக் கேட்டு இந்த நூலை தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு சமர்ப்பிக்கிறேன். அ. சீனிவாசன் நூலாசிரியர் பாரதப் பண்பாட்டுத்தளத்தில் பாரதி இரண்டாம் பதிப்பு முன்னுரை பாரதப்பண்பாட்டுத்தளத்தில் பாரதி என்னும் தலைப்பிலான இந்த நூல் முதல் பதிப்பும், அடுத்த அச்சும் வெளியாகி தமிழ் மக்களிடம் சென்றிருக்கின்றன. குறிப்பாக சென்னை.கோவை, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்களில் பல கல்லூரிகள் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளின் நூலகங்களுக்குச் சென்றிருக்கிறது. தமிழக அரசின் நூலகத்துறையிலிருந்தும் 850 பிரதிகள் வினியோகம்(விற்பனை) ஆகியுள்ளன. இரு தடவை அச்சடித்த பிரதிகளும் தீர்ந்து விட்டன. பல இடங்களிலிருந்தும் நூலைக் கேட்டு தகவல் வந்துள்ளன. மேலும் பல மாவட்டங்களுக்கும் கல்வி நிலையங்களுக்கும் செல்லும் வாய்ப்பும் உள்ளது. எனவே தேவை கருதியும் இந்நூலில் வலியுறுத்திக் காட்டியுள்ள பாரதியின் கருத்துகள் மக்களிடம் குறிப்பாக இளைஞர்களிடம் செல்ல வேண்டிய அவசியம் கருதியும் இந்த இரண்டாவது பதிப்பைக் கொண்டு வருவதில் மகிழ்ச்சியடைகிறோம். இந்த இரண்டாவது பதிப்பை வெளியிடுவதில் ஏற்கனவே நிதி வசதிக்குறைவால் காலதாமதமாகி விட்டது. இந்த நூலுடன் சேர்த்து ' பாதியின் புதிய ஆத்தி சூடி ஒரு விளக்கவுரை" என்னும் நூலும் சிறப்பாக விற்பனையாகி இரண்டாவது பதிப்பும் வெளியிடப்பட்டு விற்பனையாகி வருகிறது. அதற்குத் துணையாகவும் இந்த நூலை விரைவாக வெளியிடக் கருதி வெளியிடுகிறோம். இந்த இரண்டாம் பதிப்பு சிறு சிறு திருத்தங்களுடன் வெளியாகிறது. இந்த இரு நூல்களையும் பள்ளிகளில் துணைப் பாடங்களாகக் கொண்டு வரவும் கேட்டிருக்கிறோம்.இந்தப்பதிப்பை வெளியிடுவதில் ஒத்துழைப்பு கொடுத்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். இரண்டாவது பதிப்பிற்கும் ஆதரவு கொடுக்க தமிழ் மக்களை வேண்டுகிறோம். அ. சீனிவாசன், நூலாசிரியர்