பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி-புதிது.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதப் பண்பாட்டுத் தளத்தில் பாதி அ. சீனிவாசன் பாண்டவர்தம் தேவியவள் பாதியுயிர் கொண்டு வர நீண்ட கருங்குழலை நீசன் கரம் பற்றி முன்னி ழுத்துச் சென்றான் வழி நெடுக மொய்த்தவராய் என்ன கொடுமையிது வென்று பார்த்திருந்தார்" "ஊரவர்தம் கீழ்மை உரைக்கத் தரமாமோ? வீரமிலா நாய்கள், விலங்காம் இளவரசன் தன்னை மிதித்துத் தராதலத்தில் போக்கியே பொன்னனைய வளையந்தப் புரத்தினிலே சேர்க்காமல், நெட்டை மரங்களென நின்று புலம்பினர், பெட்டைப் புலம்பல் பிறர்க் குத்துணையாமோ?" என்று பாரதி தனது கவிதை வரிகளில் கடுமையான சொற்களில் கூறுகிறார். நமது மெய்யான சாத்திரங்கள் எல்லாம் தாக்குதல் தன்மை கொண்டவை. வெறும் தற்காப்புத் தன்மை மட்டும் கொண்டதல்ல. இதுவரை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்றுள்ள தாக்குதல்கள் அனைத்தையும் சமாளித்து நமது மெய்யான சாத்திரங்கள் நிலை பெற்றிருக்கின்றன. நமது மக்களுடைய உள்ளங்களிலும் காலம் காலமாய் நிரம்பியிருக்கின்றன. நமது தெய்வங்களின் கைகளில் உள்ள ஆயுதங்கள் எல்லாம் கொடுமைகளையும் அக்கிரமங்களையும் அநியாயங்களையும் எதிர்க்கும் ஆயுதங்களாகும். அவைகளின் பிரதிநிதிகளாகவே பாரத மக்கள் திகழ வேண்டும். அதுவே நமது இயல்பான குணமாக இருக்க வேண்டும் என்பதே பாரதியின் கொள்கைக் கோட்பாடாகும். மந்திரமும் தந்திரமும் எந்திரமுமாகும் இடைக்காலத்தில் ஏற்பட்ட சேதங்களைப் போக்கி பாரதம் மீண்டும் புத்தெழுச்சி பெற வேண்டும். காவியத்தின் உச்சகட்டமாக, பாரதி ஒரு அபூர்வமான அவலம் நிறைந்த காட்சியை நம்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார். வியாச பாரதத்தின் வழியில் வார்த்தைக்குவார்த்தை அதன் மொழிபெயர்ப்பாகவே இக்கதையை எழுதியிருக்கிறேன் என்று பாரதி தனது முன்னுரையில் குறிப்பிட்டிருந்த ப்ோதிலும் அவர் தனது சொந்தக்கருத்தாகவும் காலத்தின் வளர்ச்சிப்போக்கின் வடிவமாக புதிய காலத்தின் தேவையாக நம்மை மிக உயர்ந்த ஒரு சிந்தனை கட்டத்திற்கு இட்டுச் சென்று பாரதத்தின் மேமையை உயர்த்துகிறார். பாரதியின் ப்ாஞ்சாலி சபதம் நமது பாரத நாடு படைத்துள்ள தலை சிறந்த இலக்கியங்களின் வரிசையில் முன் நிற்கிறது. பாரதி வேதவிசாயருக்கு அடுத்தப் படியாக பெரும் கவிஞனாக முன் நிற்கிறார். பாஞ்சாலி சபதத்தின் கதைப் பகுதி மகாபாரதப் பெருங்கதையின் ஒரு சிறு நிகழ்ச்சிதான். ஆயினும் அது ஒரு முக்கியமான, மிக முக்கியமான நிகழ்ச்சியாகும். கதையின் முக்கியமான திருப்பங்களும் மகாபாரதப் பெரும்போருக்கு ஒரு முக்கிய காரணமாகவும் அமைந்திருக்கிறது. பாரத நாட்டையே குலுங்க வைத்த என்றென்றைக்கும் மறக்க முடியாத நமது நெஞ்சத்தில் நிரந்தரமாக நிலைத்து நிற்கும் ஒரு மறக்க முடியாத நிகழ்ச்சியாகும். எனவே தான் பாரதி தனது காவியத்திற்கு இந்தக் கதை நிகழ்ச்சியை, தனது விடுதலை உணர்வுக்கும். பெண்ணுரிமைக் கொள்கைக்கும் ஆதர்சமாக எடுத்துக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.இந்த நிகழ்ச்சிபாரதியின் உள்ளத்தில் வலுவாகப் பதிந்திருக்கிறது. பாரதிக்குக் கண்ணபிரானிடமும், இராம்பிரானிடமும் அபாரமான பக்தியும், பற்றும், ஈடுபாடும் இருந்திருக்கிறது.நமது நாட்டின்காவியங்களில் பெருங்காவியமாக நமது நாட்டி இலக்கியங்களில் பேரிலக்கியங்களாக பாரத நாட்டின் உயிர்த்துடிப்பான இலக்கியங்களின் இரு கண்களாக அமைந்திருப்பது இராமாயணமும், மகாபாரதமும் என்பதை நாம் அறிவோம். இவ்விரண்டையும் பாரத நாடு முழுவதற்கும் சொந்தமான இரு பெரும் இதிகாசங்களாக நாம் போற்றி வருகிறோம். இராமனும் கண்ணனும் பாரத நாடு முழுவதிலும் இமயகிரி முதல் இந்து மா கடல் வரை அனைத்து மக்களிடமும் பரவியுள்ள தெய்வீகப் பெயர்களாகும். இராமன், கிருஷ்ணன் என்னும் இரு பெயர்களும் இந்து சமுதாயத்தில் சாதி, சமய மொழி இனபால் நிற வேறுபாடின்றி அனைத்து மக்களுக்கிடையிலும் நடமாடும் உயிர்த் துடிப்பான பெயர்களாகும். நமது புண்ணிய பூமியில் எந்த மூலையில், எந்த ஊரில், எந்தத் தெருவில் எந்த இல்லத்தில் இராமனும் கிருஷ்ணனும் இல்லை? இப்பெயர்கள் பாரத மக்களின் ஒற்றுமையையும் ஒருமைப் பாட்டையும் குறிக்கும் பெயர்களாக நமது உள்ளங்களில் இடம்பெற்றிருக்கின்றன. நிலைபெற்றிருக்கின்றன. இராமன் இமயத்தின் அடிவாரத்தில் கங்கை சமவெளியில் உள்ள அயோத்தியில் பிறந்து வளர்ந்து. தாய் தந்தை சொற்படி வனவாசத்தை மேற்கொண்டு, தெற்கு நோக்கி இலங்கை வரையிலும் நடந்தே சென்று அரக்கர்களைக் கொன்று வென்று தனது அவதாரக்கடமைகளை நிறைவேற்றி முடித்தார். நந்திக்கிராமத்தில் தியாகத்தின்மிக உயர்ந்த வடிவமான பரதனின் நீதியான அரசியல் நிர்வாகத்திற்கு வழிகாட்டினார். குகனையும், சுக்ரீவனையும், வீடணனையும் தனது உள்ளத்தால் அன்பால் அரவணைப்பால் வென்று அவர்களைத் தனது சகோதரர்களாக, உடன் பிறப்புகளாக ஒன்றிணைத்துக்கொண்டு பாரதத்திருநாட்டைச்சிந்தனையில் ஒன்றாக ஒன்றுபடுத்திய மகத்தான வரலாற்றுக் கடமையை நிறை வேற்றினார். பாரதத்தின் அரசியல் கலாச்சார ஒற்றுமையை ஏற்படுத்திய பெருமை இராமபிரானுக்கு உண்டு. இந்த மகத்தான பண்டைய வரலாற்றியல்